என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

சுத்தத்தைச் சொல்லிக் கொடுப்போம்!

இது நம்ம ஊரு ஸ்பெஷல் - கருவடிக்குப்பம்

சுத்தத்தைச் சொல்லிக் கொடுப்போம்!
##~##
பெ
ண்ணியம் பேசுவது, பெண்களுக்காகக் குரல் கொடுப் பது என்பதைப் பேச்சளவில் நிறுத்திக்கொள்ளாமல் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த இயங்கிக் கொண்டு இருப்பவர்களில் ஒருவர் பிரமிளா தமிழ்வாணன். புதுச்சேரி அரசு செவிலியர் கல்லூரியின் முதன்மைச் செவிலிய அதிகாரி. பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கான தற்காப்புப் பற்றிய கருத்தரங்கு, தாய்ப் பால் விழிப்பு உணர்வு முகாம், வளர் இளம்பருவத்தினர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்த கருத்தரங்கு என இடை விடாது இயங்கிக்கொண்டு இருக்கும் இவர், புதுச்சேரி கருவடிக் குப்பத்தில் உள்ள நரிக்குறவர் காலனியில் வசிக்கும் பெண்களுக்குச் சுகாதாரம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்திவருகிறார்.

''அனைத்து விழிப்பு உணர்வு முகாம்களையும் கருத்தரங்குகளையும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நடத்துகிறோம். ஆனால், அடிப்படைத் தேவைகளுக்கான தீர்வே இல்லாத அடித்தட்டு மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து நான் தேர்வு செய்ததுதான் கருவடிக்குப்பத்தில் இருக்கும் நரிக்குறவர் காலனி.

சுத்தத்தைச் சொல்லிக் கொடுப்போம்!

முதலில் நான் அவர்களைச் சென்று பார்த்தபோது அவர்கள் சாப்பிடும் தட்டில் சாப்பாட்டைவிட ஈக்களே அதிகம் இருந்தன. குழந்தைகளையும் குளிக்க வைக்காமல் தாங்களும் குளிக்காமல் இருந்தார்கள். சுகாதாரம் பற்றிய அக்கறை அற்ற சூழல் நிலவியது. முக்கியமாகப் பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் குப்பையில் இருந்து துணிகளை எடுத்துப்பயன்படுத்தி மீண்டும் அதைக் குப்பையிலேயே எறிவதைக் கண்டு அதிர்ந்துபோனேன். அங்கு இருந்த அனைத்துப் பெண்களுக்குமே வெள்ளைப்படுதல், கர்ப்பப்பைத் தொற்று போன்ற நோய்கள் இருந்தது தெரியவந்தன.

எட்டு  மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவர் குளித்தால் குழந்தைக்கு ஜன்னி வந்துவிடும் என்று எட்டு மாதமாகக் குளிக்காமலே இருக்கும் அளவுக்கு விழிப்பு உணர்வில் பின் தங்கி இருந்தார்கள். அதனால், அவர் களுக்குப் புரியவைக்க மிகவும் சிரமப் பட்டேன். அப்போதுதான் கடற்கரை யில்  பலூன் விற்கும் சிறுமியைப் பார்த்தேன். குளிக்காமல் அழுக்காக இருந்ததால் அவளிடம் யாரும் பலூன் வாங்காததையும் கவனித் தேன். அவளிடம் பேச்சுக் கொடுத்து அவள் மூலமாகத்தான் அந்தக் காலனிக்குச் செல்ல முடிந்தது.

சுத்தத்தைச் சொல்லிக் கொடுப்போம்!

முதலில் அவளிடம் இருந்துதான் எங்கள் பணியை ஆரம்பித்தோம். அவளைப் பார்த்து மற்ற பெண்களும் வர ஆரம்பித்தார்கள். அப்புறம் ஒவ்வொரு வாரமும் சென்று அவர்களைச் சந்தித்து அடிப்படையான விழிப்பு உணர்வினைப் பற்றி எடுத்துச் சொல்ல ஆரம்பித்து சோப்புகள், சானிடரி நாப்கின்களைக் கொடுக்க ஆரம்பித்தோம். இப்போது அங்கு அனைவரும் தினமும் குளிக்கிறார்கள். அனைத்துப் பெண்களும் சானிடரி நாப்கின் பயன் படுத்துகிறார்கள். நான் செய்த சேவைகளிலேயே எனக்கு முழு திருப்தி அளித்தது இதுதான்'' என்கிறார் பிரமிளா!                                          

- ஜெ.முருகன்