Published:Updated:

என் ஊர்: ஓவியர் பத்மவாசன்

''எனக்கு பெசன்ட் நகர் இன்னொரு கோயில்!''

என் ஊர்: ஓவியர் பத்மவாசன்

''எனக்கு பெசன்ட் நகர் இன்னொரு கோயில்!''

Published:Updated:
என் ஊர்: ஓவியர் பத்மவாசன்
##~##

''எலியட்ஸ் கடற்கரை எனக்கு ரொம் பப் பிடிச்ச இடம். இங்க வந்தா கடலையே பார்த்துட்டு இருப்பேன். அது ஒரு தியானம். இப்ப லோ-ஹிப், டைட் டி-ஷர்ட்னு பசங்க, பொண்ணுங்க வித்தியா சம் இல்லாம நிறையப் பேர் வர்றாங்க. என்னைப் பார்த்துட்டு, 'இவரு சாமி படம் வரையறவர்தானே... இங்க ஏன் உக்காந்து இருக்காரு?’னு நினைச்சிருவாங்களோனு பயந்து கடற்கரைக்குப் போறதைக் குறைச்சுட்டேன்!'' - சிரித்தபடி பெசன்ட் நகர் பற்றிய தன் நினைவுகளை வரைய ஆரம்பிக்கிறார் ஓவியர் பத்மவாசன். 

''என் பூர்விகம் காஞ்சிபுரம். கோயில்களில் பூஜை செய்ற குடும்பம். என் வம்சாவழி பற்றிய தகவல்களை என் தாத்தா எழுதிவெச்சதைப் படிச்சிருக்கேன். என் அப்பா இசை வித்வான்கிற வகையில் நான் ஓவியன் ஆனதும் ஒரு வகை யில் கலைத் தாய் காட்டிய வழி. பெசன்ட் நகர் 'பே வியூ அபார்ட்மென்ட்ஸ்’தான் என் முதல் வாசஸ்தலம். எனக்கு ஓவியம் ஒரு உலகம்னா வீட்டு பால்கனி இன்னோர் உலகம். அபார்ட்மென்ட் பக்கத்துல பாம்பன் சுவாமி கோயில் இருக்கு. விசேஷ தினங்கள்ல இரவு 12 மணி வரைக்கும் பூஜை நடக்கும். பால்கனியில் இருந்து பாக்கிறதால எனக்கு எப்பவும் இலவச தரிசனம்தான்.

என் ஊர்: ஓவியர் பத்மவாசன்

இப்பதான் தார் ரோடு போட்டு இருக்காங்க. அப்போ எல்லாம் கடல் மணல்தான் நிரம்பி இருந்துச்சு. பக்கத்துல இருந்த மைதானத்துல கிரிக்கெட் விளையாடிட்டே இருப்போம்.  கொஞ்ச நாள்ல எங்க அபார்ட்மென்ட்டுக்கு கவிஞர் மு.மேத்தா குடிவந்தார். அபார்ட்மென்ட்ல இருந்து ஒரு பத்தடி நடந்தா 'கலாக்ஷேத்ரா’ வந்து ரும். ருக்மணி அருண்டேல் அம்மா அவ்ளோ அற்புதமா அங்க இருக்கிற மேடையை அமைச் சிருப்பாங்க. தூண்களே இருக்காது. எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் மேடையில் நிகழ்ச்சி நடத்து றவங்களைத் தெளிவாப்  பார்க்க முடியும்.  என் தங்கை அங்க வீணை கத்துட்டு இருந்தப்ப எப்போவாவது போவேன். கொஞ்சம் சங்கீதமும் காற்றுவாக்குல காதுல விழுந்து மனசுல நின் னுச்சு. எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவோட கச்சேரி 93-ல் அங்க நடந்தது. முதல்முறையா எம்.எஸ். அம்மாவை அங்கதான் நேர்ல பாத்தேன்.

பிறகு வீடு மாறி அகில இந்திய வானொலி நிலையத்தில் வேலை பார்த்த அகிலா ராமச் சந்திரன்கிறவங்க வீட்ல குடியேறினோம். பக்கத்து லேயே வீணை காயத்ரி, சாருமதி ராமச்சந்தி ரன்னு நிறைய கலைஞர்கள் இருந்தாங்க. சில வருஷத்துக்கு அப்புறம் திரும்பவும் வீடு மாறி னோம். அங்க பக்கத்துல சூலமங்கலம் சகோத ரிகள்,  நாட்டியக் கலைஞர் சரயுசாய்னு கலை ஞர்கள் இருந்தாங்க. சின்ன வயதில் இருந்து எப்பவுமே கலைஞர்கள் சூழ்ந்த ஏரியாவுலவளர்ந் தது நான் செய்த பாக்கியம். பெசன்ட் நகர் ஏரியாவுல ஏதாவது ஒரு தெருவுல எப்பவும் ஷூட்டிங் நடந்துட்டே இருக்கும். நடிகர் விக்ரம் ஆட்டோக்காரங்களோட உட்கார்ந்து சர்வ சாதாரணமாப் பேசிட்டு இருக்கிறதை ஆச்சர்ய மாப் பார்த்திருக்கேன்.

என் ஊர்: ஓவியர் பத்மவாசன்

விநாயகர் கோயில், அஷ்டலட்சுமி கோயில், வேளாங்கன்னி சர்ச், விஷ்ராந்தி ஹோட்டல், நடிகை சுகன்யா நடத்திக்கிட்டு இருந்த கோல்டன் ஸ்மைல் ஃபேன்சி ஸ்டோர்ஸ், 'வேர்ட்ஸ்வர்த்’ புத்தகக் கடைன்னு பெசன்ட் நகருக்கு அடையாளமா இருந்த எல்லா இடங்களுக்கும் காலாற நடந்து இருக்கேன். இன்னிக்கும் பெசன்ட் நகர் அப்படினு யாராவது சொன்னா, இந்த இடத் தோட வளைந்து வளைந்து செல்லும் பாதைகள் கோட்டோவியங்களா மனசுல விரியும். இங்க உள்ள ரத்னகிரீஸ்வரர் கோயில் ரொம்பவே பிரபலம். காஞ்சிப் பெரியவாதான் 'இங்க இருந்து கடல்ல இவ்ளோ தூரத்துல கடவுள் சிலை ஒண்ணு இருக்கு’னு சொன்னார். தேடிப் பார்த்தா அப்படியே இருந்துச்சு. அதை எடுத்துட்டு வந்து பெரியவா போட்டுக்கொடுத்த பிளான் மாதிரியே கோயில் கட்டுனாங்க. அடிக்கடி அங்க போய் வேண்டிக்குவேன். ஏன்னா,  ஒரு கலைஞனுக்கு நிம்மதி இல்லைனா அவன் செய்ற தொழிலுக்கு அர்த்தம் இல்லாமப் போயிடும். நான் போடுற கோடுகளுக்கு எப்பவும் அர்த்தம் இருக்கணும்னு நினைக்கிறேன். அந்த விதத்தில் எனக்கு பெசன்ட் நகர் இன்னொரு கோயில்!''

கட்டுரை, படங்கள்: ந.வினோத்குமார்

• பத்மவாசனின் தந்தை முத்துக்குமாரசுவாமி பிரபல மான இசைக் கலைஞர். தாய் நளின ரஞ்சனியும் மனைவி ராஜேஸ்வரியும் இல்லத்தரசிகள். ப்ரணவ், லோகப்பிரியன் என இரண்டு மகன்கள்!

• இவர் இயற்பெயர் கிரிதரன். இவருக்கு பத்மவாசன் என்ற பெயரைச் சூட்டியவர் ஓவியர் சில்பி. தன் இயற் பெயரான சீனிவாசனில் இருந்து வாசனையும் தன் மனைவி பெயரான  பத்மாவதியில் இருந்து பத்மாவையும் இணைத்து பத்மவாசன் என்று பெயர் சூட்டினார்!

• 'சில்பியின் ஒரே சிஷ்யனாக இருந்தது நான் பெற்ற  பாக்கியம்’ என்கிறார்!

• 'கடல் பற்றி நிறைய கவிதைகள் எழுதி இருக்கி றார் இவர். அவற்றை ஒரு தொகுப்பாகக் கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறார்!

• எஸ்.டி.பர்மன், இளையராஜா பாடல்களைக் கேட்டபடியே ஓவியம் வரைவது இவருடைய வழக்கம்!