Published:Updated:

அட, இதுவும் ஒரு கலைதான்!

அட, இதுவும் ஒரு கலைதான்!

அட, இதுவும் ஒரு கலைதான்!

அட, இதுவும் ஒரு கலைதான்!

Published:Updated:
##~##

'கையில் கிடைக்கும் பொருட்களில் எல்லாம் கலைவண்ணம் படைக்கிறார் சூளைமேட்டைச் சேர்ந்த பாலாஜி.’ இது 'என் விகடன்’ வாசகர் சுதாகர் வாய்ஸ் ஸ்நாப்பில் தந்த தகவல்.  பாலாஜியைச் சந்தித்தேன். ''நான் மதுரையைச் சேர்ந்தவன். அங்கதான் படிச்சேன். படிச்சேனு சொல்றதைவிட ஃப்ரெண்ட்ஸைப் பார்க்கச் சும்மா ஜாலியா பள்ளிக்கூடத்துக்குப் போய்ட்டு வருவேன்னு சொல்லலாம். வாத்தியார் பாடம் நடத்தும்போது, பையில இருக்கிற காம்பஸால் இஷ்டத்துக்கு சாக்பீஸ்ல ஓட்டை போடுறது, கீறுறதுனு ஏதாவது பண்ணிட்டே இருப்பேன். அப்படி ஒருநாள் கீறிட்டு இருக்கும்போது திடீர்னு ஒரு வடிவத்துக்கு வந்து உருவமா தெரிஞ்சுது. பசங்ககிட்ட காட்டினதும், 'டேய் சூப்பருடா’னு பாராட்டுனாங்க. அப்படி ஆரம்பிச்ச பழக்கம்தான் இன்னைக்கு இப்படி வந்து நிக்குது.

அட, இதுவும் ஒரு கலைதான்!

தினமும் பள்ளிக்கூடத்துக்கு வீட்டுப் பாடம் எழுதிட்டுப் போறேனோ இல்லையோ... சாக்பீஸ்ல ஒரு புது டிசைன் செஞ்சு எடுத்துட்டுப் போயிடுவேன். இதனால, பசங்க மத்தியில பிரபலமாக ஆரம்பிச்சேன். 'ஏல இந்தக் கலையை எனக்குக் கத்துக்கொடுல’னு ஒரு பய கேட்டான். 'அட, இதுவும் ஒரு கலைதான்’னு அப்பதான் எனக்குப் புரிஞ்சுது. 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலாஜி’னு மனசுக்குள்ள நினைச்சிகிட்டு, 'இதை அவ்வளவு சீக்கிரம் கத்துக்க முடியாது’னு பில்டப் கொடுத்தேன். சொன்ன பொய்யை உண்மையாக் குறதுக்காகவே நிறைய சாக்பீஸைச் செதுக்க ஆரம்பிச்சேன். முதல்ல சாக்பீஸ்ல ஒரு பக்கம் மட்டும்தான் செதுக்கிட்டு இருந்தேன். பிறகு முப்பரிமாணத்துல செதுக்க ஆரம்பிச்சேன். பெரிய விநாயகர் சிலையைப் பார்த்து கடுகளவுக்குக் கூட மாறாம  அப்படியே சாக்பீஸ்ல செதுக்கினேன். அதுக்கு ரொம்பப் பாராட்டு கிடைச்சுது. பிறகு, கரடி, பெண்கள், கோயில் கோபுரம்னு கிட்டத்தட்ட 300-க்கும் மேல் உருவங்கள் செதுக்கி நிறையப் பாராட்டும் பரிசுகளும் வாங்கினேன்.

அட, இதுவும் ஒரு கலைதான்!

பிறகு, எனக்கே இது போர் அடிக்க ஆரம்பிச்சது. இன்னும் ஏதாவது வித்தியாசமா செய்யலாமேனு யோசிச்சப்ப வந்த ஐடியாதான் பென்சில் நுனி சிற்பங்கள். அந்தச் சின்ன பென்சில் நுனியில சின்ன ரம்பத்தை வெச்சு செதுக்கி விநாயகர் உருவத்தைக் கொண்டுவந்தேன். நிறையப் பேர் அதைப் பார்த்துட்டு,'பென்சிலால பிள்ளையார் சுழிதான் போடுவாங்க. நீ அதுல பிள்ளையாரையே செதுக்கிட்டியே’னு பாராட்டினாங்க. சாக்பீஸ் மாதிரியே பென்சில் முனையில யும் ஏகப்பட்ட உருவங்கள் செதுக்க ஆரம்பிச்சேன்.

அட, இதுவும் ஒரு கலைதான்!

என் அடுத்த ஐடியா முட்டை. அதை உடைக்காம உள்ளேயே ஓவியம் வரையணும்னு ஆசை வந்துச்சு. ஆனா, அது அவ்வளவு லேசுபட்ட காரியமில்லை. முட்டையில ஊசி அளவுக்குத் துளை போட்டேன். பிறகு சிரிஞ்சினை விட்டு உள்ளே இருக்கிற வெள்ளை, மஞ்சள் கரு எல்லாத்தையும்  உறிஞ்சி எடுத்தேன். பிறகு, அதுக்குனு சின்னதா நானே ஒரு பிரஸ்ஸை தயார் பண்ணி முட்டைக்குள்ள  ஏசுநாதர் உருவத்தை வரைஞ்சேன். அதை வரைய அஞ்சு மாசம் ஆச்சு. இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா  பண்ணினதால தமிழ்நாடு ஓவிய நுண்கலைக் குழு ரெண்டு முறை பரிசு தந்து ஊக்குவிச்சுது. இந்த மாதிரி நம்ம கைவசம் ஏகப்பட்ட ஐடியா ஸ்டாக் இருக்கு. இன்னும் நிறைய சாதனைகள் பண்ணணும் சார்'' என்று சிரிக்கிறார் பாலாஜி!

நா.சிபிச்சக்கரவர்த்தி

படங்கள்: அ.ரஞ்சித்