Published:Updated:

இதயம் பேத்துகிறது

இதயம் பேத்துகிறது

இதயம் பேத்துகிறது

இதயம் பேத்துகிறது

Published:Updated:
இதயம் பேத்துகிறது

கற்பது கடினம்... மறப்பது எளிது!

இதயம் பேத்துகிறது

நல்ல விஷயங்கள் எப்போதும் கற்கக் கடினமானவை. ஆனால், மறக்க எளியவை. கெட்ட விஷயங்கள் கற்க எளியவை. ஆனால், மறக்கக் கடினமானவை. விளையாட்டாக ஹாஸ்டல் டே அன்று சிகரெட் பிடிக்கும் பழக்கம் ஆரம்பித்தால், புகைப்பதை விட்டுவிட வேண்டும் என்கிற எண்ணம் வரவே 20 வருஷங்களாகும். பிராணா யாமம் செய்து பழக ஆறு மாதம் ஆகும். 21 நாட்கள் பிராணா யாமம் தொடர்ந்து செய்யாமல் இருந்தால் மறந்தே போய்விடும்.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால், என் ஓவியத் திறமை ('த்ரீ இடியட்ஸ்’ படத்தில் வரும் மாதவனுக்கு நடப்பதுபோல) சின்ன வயசில் முடக்கப்பட்டது. இரண்டாம் வகுப்புப் படிக்கும்போது கிளாஸ் டீச்சர் பாடம் நடத்திக்கொண்டு இருப்பார். நான் சிலேட்டில் படம் போட்டுக்கொண்டு இருப் பேன். ''என்ன பொம்ம போட்டுட்டு இருக்கே. கைய முறிச்சிடுவேன்' என்று  பிரம்பால் அடிப்பார் டீச்சர். வீட்டில், ''80 பக்க நோட்டு பூரா தலை தலையா போட்டு வெச்சிருக்கான்' என்று அண்ணன் அப்பாவிடம் போட்டுக்கொடுக்க, அப்பாவோ ''மூதேவி, நீ உருப்படப் போறதில்லே'' என்று நற்சான்றிதழ் வழங்கு வார். விடாப்பிடியாக அவ்வப்போது படம் போட்டுக்கொண்டே இருப்பேன். பள்ளிப் பருவம் கடந்ததும் எல்லாம் மறந்து போயிற்று. சமீபத்தில் நடிகர் சிவகுமாரின் 'இது ராஜபாட்டை அல்ல’ புத்தகத்தைப் படித்தபோது, பழைய ஓவிய ஆசை மறுபடியும் தலைதூக்கியது. அதுதான் மேலே இருக்கும் படம்.

ஓவியக் கலையை நான் இன்னும் முழுசாகக் கற்றுக்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன், சரியா?

இதயம் பேத்துகிறது

பணிவே துணை

மலேசியாவில் இருந்து வந்த என் மகனை வரவேற்க விமான நிலையம் போயிருந்தோம். அவனுடைய சக பிரயாணி, நடிகர் சந்தானம். அவர் இவ்வளவு விரைவில்  நம்பர் ஒன் நிலைக்கு உயர்ந்ததற்கு என்ன காரணம் என்பது அப்போதுதான் எங்களுக் குப் புரிந்தது. அவருடன் தொண்டரடிப்பொடி கூட்டம் எதுவும்  இல்லை. தோளில் ஒன்றும் கையில் ஒன்றுமாக லக்கேஜை தானே தூக்கிக்கொண்டு வந்தார். அவரை ரிசீவ் செய்ய வந்த டிரைவரிடம்   தன்னுடைய சுமை எதையும் தரவில்லை. என் மகன் அறிமுகப்படுத்தி யதும் என்னோடு சாதாரணமாகப் பேசினார். போட்டோ எடுக் கும்போது என் கையைப் பிடித்து இழுத்து ''கிட்ட வாங்க சார்' என்றார். 'நீங்கதான் பீக்ல இருக்கீங்க. இன்னும் மேல மேல வரப் போறீங்க' என்று என் மனைவி சொன்னதும், பணிவும் வெட்க முமா 'நன்றி' என்றார். காரில் ஏறும்போது கையை அசைத்துவிட்டுப் போனார். ரஜினி, ஏ.ஆர்.ரஹ்மான் வரிசையில் பணிவான இன் னொரு கலைஞன். சீக்கிரமே எல்லா நகைச்சுவை சேனல்களிலும் சந்தானம் காமெடியே ஓடுகிற காலம் வரத்தான் போகிறது!

அதிகாலை மெரினா!

இதயம் பேத்துகிறது

காலைலே 6 மணிக்கு மெரினா பீச் போகணும்னு ஒரு திடீர் யோசனை. குரோம்பேட்டைல இருந்துகிட்டு 6 மணிக்கு மெரி னான்னா ஏறக்குறைய நடுராத்திரியே கிளம்பினாத்தான் முடியும். காலைலே மூணே முக்கால் மணிக்கு எழுந்தோம். உழைப்பாளர் சிலைகிட்டே ஆட்டோவில் வந்து இறங்கினோம். விடிகாலையில மெரினா போனா வி.ஐ.பி-க்கள் வாக்கிங் போறதைப் பார்க்கலாம்னு சுஜாதா எழுதி இருந்தது ஞாபகம் வந்தது. கண்ணில விளக்கெண் ணெய் ஊத்திகிட்டுத் தேடினோம். ஒருத்தரும் வரலை. 'ராத்திரி வந்த பேய், பிசாசுங்களே இன்னும் ரிட்டர்ன் ஆகி இருக்காது. அதுக்குள்ள வி.ஐ.பி-யாவது வி.ஜி.பி-யாவது' கடற்கரை மணலில் நூற்றுக்கணக்கான ஜனங்கள் தூங்குகிறார்கள். எல்லாருமே பிச் சைக்காரர்கள் இல்லை. சிலர் அங்கே வியாபாரம் செய்கிறவர்கள், சிலர் சரக்கடித்துவிட்டு பெண்டாட்டியின் விளக்குமாற்று அடிக்குப் பயந்து அங்கேயே ஃபிளாட் ஆனவர்கள், விடிகாலை ரயிலைப் பிடிக்க வேண்டிய வடநாட்டுக்காரர்கள் என்று பல ரகம்!

ஆந்திராடிக்ஸ்

இதயம் பேத்துகிறது

அடுத்த என்.டி.ஆர். என்கிற இன்பக் கனவில் கட்சியை ஆரம்பித்தார் நடிகர் சிரஞ்சீவி. தேர்தல் முடிவுகள் அவரை என்.டி.ஆராகவும் அங்கீகரிக்கவில்லை. சிவாஜி கணேசன், பாக்யராஜ் கட்சி மாதிரி சுத்தமாக நிராகரிக்கவும் இல்லை. சினிமா வேலையைத் தொடரலாம் என்றால் அவரை நம்பி 18 எம்.எல்.ஏ-க்கள். அரசியலைத் தொடரலாம் என்றால் இந்த 18 உடனே 36 ஆகி, 36 உடனே 72 ஆகி... ம்ஹூம். அதற்குள் சந்திரபாபு நாயுடு சுதாரித்துவிடலாம். அல்லது ஜூனியர் என்.டி.ஆரோ வேறு யாராவதோ கட்சி ஆரம்பிக்கலாம். கன்ஃப்யூஷன்!

'என்னைப் பார்த்தா ஒண்ணும் பண்ண முடியாதவன் மாதிரி இருக்கா' என்று கொதித்து எழுந்த ஜகன்மோகன் ரெட்டி அல்லும் பகலும் பேசி 24 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு கட்சியை ஆரம்பித்து மீசையை நீவிக்கொண்டார். 'ஏண்டா டேய். நாங்க ஆனானப்பட்ட என்.டி.ஆருக்கே பாஸ்கர ராவை வெச்சி ஆட்டம் காட்டின வங்க... நீங்கள்லாம் பச்சாடா’ என்று காங்கிரஸ் யோசித்தது. ’டைலாமோ’வில் இருந்த சிரஞ்சீவியைக் கொம்பு சீவியது. என்ன டீலிங்கோ நமக்குத் தெரியாது. அந்த டீலிங் சிரஞ்சீவிக்குப் பிடித்துப் போயிற்று. சிரஞ்சீவிக்கு பிரெட்டு, ஜகனுக்குத் திரெட்டு. சுபம். ஆந்திரா காங்கிரஸ்காரர்களிடம் உலக அரசியல் அரங்கு நிறையத் தெரிந்து கொள்ளவேண்டும்!

இதயம் பேத்துகிறது