Published:Updated:

''இதையும் மூடிட்டா எங்கேப் போறது?''

''இதையும் மூடிட்டா எங்கேப் போறது?''

''இதையும் மூடிட்டா எங்கேப் போறது?''

''இதையும் மூடிட்டா எங்கேப் போறது?''

Published:Updated:
##~##

கோவையே களைகட்டி இருக்கிறது. காரணம், கோவையில் டென்ட் அடித்துள்ள 'கிரேட் பாம்பே சர்க்கஸ்.’ உள்ளே சென்றேன். ஒரு பக்கம், சாகசக் கலைஞர்கள் தங்கள் உயிரைப் பணயம்வைத்து அந்தரத்தில் பறந்து சாகசம் செய்துகொண்டு இருந்தார்கள். இன்னொரு பக்கம், ஜோக்கர்கள் மக்களைச் சிரிக்கவைத்துக்கொண்டு இருந்தார்கள். மோகன்தாஸ், துளசிதாஸ், ஹரிதாஸ், மற்றும் பிஜுவா என்று தமிழகத்தின் மிக முக்கியமான ஜோக்கர்கள் எல்லோரும் அங்கு இருந்தனர். 

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரிதாரம் பூசிக்கொண்டு, கலர் கலரானச் சட்டைகளையும் தொப்பிகளையும் அணிந்துகொண்டு, தனித்துவமான உடல் மொழியோடு பார்ப்பவர்களைச் சிரிக்கவைக்கும் இவர்களின் அசல் வாழ்க்கை  துயரங்களின் நிழல் படிந்தவையாகும்.

குடும்பச் சுமை காரணமாக சர்க்கஸ் என்னும் இந்தக் கூண்டுக்குள் நான்கு வயதிலேயே அடைக்கப்பட்டவர் மோகன்தாஸ். இப்போது இவருக்கு வயது 52. கடந்த 48 ஆண்டுகளில் சர்க்கஸ் கூடாரத்தை விட்டு இவர் வெளியே வந்த நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவரிடம் பேசினேன்.  

''இதையும் மூடிட்டா எங்கேப் போறது?''

''எங்க வீட்ல மொத்தம் எட்டுப் பிள்ளைங்க. எனக்கு  மூணு வயசு இருக்கும்போது எங்க அப்பா ஒரு விபத்துல சிக்கி இறந்துட்டார். அம்மாவால் தனி ஆளாக எட்டு பேரையும் வளர்க்க

''இதையும் மூடிட்டா எங்கேப் போறது?''

முடியலை.  அதனால, என்னையும் என் அண்ணனையும்  எங்காவது ஒரு மடத்துல சேர்த்துவிடலாம்னு முடிவுசெஞ்சாங்க. அப்பதான் எங்க ஊருக்கு 'ஒயிட்வே’னு ஒரு சர்க்கஸ் கம்பெனி வந்துச்சு. அதுக்கு எடுபிடி வேலை பார்க்கப் பசங்க வேணும்னு கம்பெனிக்காரங்க கேட்டதால,   அம்மா எங்க ரெண்டு பேரையும் அங்க சேர்த்துவிட்டுட்டாங்க. நாலு வயசுல நான் உள்ளே நுழைஞ்சப்ப அந்த சர்க்கஸ் கூடாரம் ஒரு மாய உலகம்போல இருந்துச்சு. ஆனா, அதுவே என் வாழ்க்கை ஆகும்னு அப்ப நான் நினைக்கவே இல்லை.

முதல் நாலு வருஷம் எடுபிடி வேலைகளோடு கம்பி மேல நடக்குறது, ஏணி யைக் காலால தாங்கிப் பிடிக்கிறது, கம்பி மேல சைக்கிள் ஓட்டுறது, 30 அடி உயரத்துல ஒரு ஊஞ்சலில் இருந்து இன்னொரு ஊஞ்சலுக்கு தாவுறதுனு கடுமையான பயிற்சிகளைக் கொடுத்தாங்க. ஆரம்பத்துல ரொம்பப் பயமா இருக்கும். அழுகையா வரும். ஆனா, வெளியே ஓடிப்போக முடியாது. செஞ்சு தான் ஆகணும். இந்தச் சாகசங்கள் எல்லாத்தையும்  வேற வழியே இல்லாம கத்துகிட்டேன்.

என்னை சர்க்கஸ்ல வேலைக்கு விட்டுட்டுப் போன நாள்லேர்ந்து என் அம்மாவோ அண் ணன், தம்பிங்களோ, யாருமே என்னைப் பார்க்க வரலை. நானும் பல ஊர்கள் மாறிட்டேன். பல வருஷத்துக்குப் பின்னாடி  ஒருநாள் அம்மாவைச் சந்திக்க முடிஞ்சது. ஒவ்வொரு நாளும் அம்மா பாசத்துக்கு ஏங்கித் தவிச்ச நான் அன்னைக்கு அழுத அழுகை இருக்கே... இப்ப வருஷத்துல ஒரு தடவையாவது ஊருக்குப் போய் அம்மாவைப் பார்த்துட்டு வந்துடுறேன்.

வருஷம் முழுக்கக் குடும்பத்தைவிட்டுப் பிரிஞ்சு இருக்கிற சமயங்கள்ல அநாதையான மாதிரியே இருக்கும். அப்ப எல்லாம் என்னைத் தாங்கிப் பிடிச்சு, வாழ்க்கையில விரக்தி அடையாமப் பார்த்துகிட்டது ரசிகர்களோட கைதட்டல்கள்தான். சத்தியமாச் சொல்றேங்க. என்னைப் பார்த்து கைதட்டுறவங்களாலதான் நான் இன்னைக்கு உசுரோட இருக்கேன். அவங்க  எல்லோருக்கும் நன்றி.

ஒன்பது வயசாகும்போது 30 அடி உசரத்துல இருந்து நான் கீழே விழுந்துட்டேன். தலையில அடி. ஒரு வாரம் ஆஸ்பத்திரியில்  இருந்தேன். திரும்பவும் ஏணியில ஏற ஆரம்பிச்சிட்டேன். தலையில் பட்ட அடியால எனக்கு ஞாபக மறதி வந்திருச்சு. புதுசா ஏதாவது வித்தை செஞ்சா மறந்திடும்.

சாகசங்கள் செஞ்சு ஒரு கட்டத்துல அலுத்துப் போச்சு. அப்பதான் ஒருநாள் சார்லி சாப்ளின் படத்தைப் பார்த்தேன். அவர் மேல பெரிய காதலே வந்துடுச்சு. அவரைப் பார்த்துதான் நான் எனக்குனு ஒரு உடல் மொழியும், முக பாவங்களையும் உருவாக்கிக்கிட்டேன். அதுக்கு அப்புறம்தான் இந்தக் கோமாளி அவதாரம். கல்யாணம், குழந்தைனு ஆனாலும் நாலு வயசுல ஆரம்பிச்ச சோகம் இன்னைக்கு வரைக்கும் தொடரத்தான் செய்யுது. சில வருஷங்களுக்கு முன்னாடி என் பொண்ணு பத்தாவது பரீட்சையில 319 மதிப்பெண் எடுத்தா.  அது ரொம் பக் குறைச்சல்னு நினைச்சு தற்

கொலை பண்ணிக்கிட்டா. அதுக்கும் கொஞ்ச நாள் கழிச்சு என்னோட மகனுக்கு ஒரு குழந்தை பிறந்து மறுநாளே இறந்துருச்சு'' சொல்லும்போதே பீறிட்டு அழும் அந்த கலைஞனைத் தேற்ற முடியாமல் முதுகைத் தட்டி ஆசுவாசப்படுத்துகிறார்கள் சக கலைஞர்கள்.

மெள்ள மீண்டும் பேசத் தொடங்கினார் மோகன்தாஸ். ''இந்த ரெண்டு துக்க நிகழ்ச்சிகள் லயும் என்னால கலந்துக்க முடியலை. ஏன்னா, நான் எந்த ஊர்ல இருக்கேன்னுகூட குடும்பத்துக் குத் தெரியாது. நான் மேடையில கோமாளியா நடிச்சிக்கிட்டு இருக்கும்போது, இந்தத் தகவலை எனக்குச் சொன்னாங்க. என்னால வாய்விட்டு அழ முடியலை. மக்கள் ஆரவாரமா என்னைப் பார்த்து சிரிச்சுக்கிட்டு இருந்தாங்க. நான் உள்ளுக்குள்ள அழுதுகிட்டே மக்களை சிரிக்க வெச்சுட்டு இருந்தேன்.  

எப்போ அரிதாரம் பூசுறோமோ,  அப்பவே எங்க நிஜமான முகம் மறைஞ்சு போயிரும்.  எல்லா மனிதருக்குமே கவலை, துக்கம், அழுகை எல்லாம் இருக்கும். நாங்க மேடையில இருக்கிற ஒரு மணி நேரம் அவங்க கவலையை மறந்து சிரிச்சா போதும்னுதான் நெனக்கிறோம். இப்ப சர்க்கஸ் கம்பெனிகள் நிலைமையும் முன்னப் போல இல்லை. மக்களுக்கு சர்க்கஸ் மேல ஆர்வம் குறைஞ்சு போச்சு. அவங்களுக்கு சினிமாதான் முக்கியமா இருக்கு. நிறைய சர்க்கஸ் கம்பெனிகளை இழுத்து மூடிட்டாங்க. எங்க கம்பெனி மட்டும்தான் இன்னும் நிலைச்சு இருக்குது. இதுவும் மூடிட்டா எங்க போறதுனு தெரியலை!''

- ம.முரளிதரன்

படங்கள்: தி.விஜய்