Published:Updated:

என் ஊர்: பாடலாசிரியர் குகை மா.புகழேந்தி

'எம்.ஜி.ஆருக்கு ஒரு ஸ்பெஷல் ரோஸ்ட் பார்சல்..'

என் ஊர்: பாடலாசிரியர் குகை மா.புகழேந்தி

'எம்.ஜி.ஆருக்கு ஒரு ஸ்பெஷல் ரோஸ்ட் பார்சல்..'

Published:Updated:
என் ஊர்: பாடலாசிரியர் குகை மா.புகழேந்தி

'பூ மீது யானை... பூ வலியைத் தாங்குமோ...’ என்று 'டிஷ்யூம்’ படத்தின் பாடல் மூலம் திரை உலகுக்கு அறிமுகம் ஆனவர் பாடலாசிரியர் குகை மா.புகழேந்தி. பத்துக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகளை எழுதி இருக்கும் புகழேந்தி, தன்னுடைய ஊர் சேலம் - குகை பற்றிய  நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்! 

''குகை... பெயரிலேயே வித்தியாசமான ஊர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி குகைகள் நிறைந்த கானகமாக இருந்ததாம். அதன் காரணமாகத்தான் இந்தப் பெயர் என்கி றார்கள் சிலர். இந்தப் பகுதியில் இருக்கும் பல தெருக்கள் குகையைப் போல் குறுகியதாகவும் வளைந்து, நெளிந்து செல்வதாகவும் இருப்பதால் தான் 'குகை’ என்று பெயர் வந்ததாக இன்னொரு காரணமும் சொல்கிறார்கள். ஆனால், குகை என்ற பெயர் ஏன் வந்தது என்று வரலாற்று ரீதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஊர்: பாடலாசிரியர் குகை மா.புகழேந்தி
##~##

எங்கள் ஊர் ஜவுளி வியாபாரம், ஹோட்டல் மற்றும் குகைக் காளியம்மன் கோயில் 'வண்டி வேடிக்கை’ ஆகிய மூன்று விஷயங்களுக்குப் பிரபலமானது. காரைக்குடியை மையமாகக்கொண்ட நாட்டுக்கோட்டை செட்டியார்களைப் போல, எங்கள் ஊரை மையமாகக்கொண்ட செட்டி யார்களுக்குக் 'குகை செட்டியார்கள்’ என்றே பெயர். இவர்கள் கைத்தறி நெசவைத் தொழி லாகக்கொண்டு, தாங்கள் நெய்த ஜவுளி ரகங் ளை எல்லாம் இந்தியா முழுவதும் அனுப்பி வியாபாரம் செய்துவருகிறார்கள்.

எங்கள் ஊரில் மட்டும் சுமார் 700 ஹோட்டல் கள் இருக்கின்றன. எந்த ஒரு ஹோட்டலின் பெயரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத  அளவுக்கு, எல்லா ஹோட்டல்களிலுமே காலை, இரவு நேரங்களில் எல்லா உணவு அயிட்டங் களும் சாப்பிட பிரமாதமாக இருக்கும். அப்படி இருந்த ஹோட்டல்களில் எங்கள் ஹோட்டலும் ஒன்று. எங்கள் ஹோட்டலில் கொஞ்சம் வித்தி யாசமாக  அந்தந்த வாரம் ரிலீஸ் ஆனப் புதுப் படங்களின் போஸ்டர்களை உள்ளேயும் வெளியேயும் ஒட்டிவைத்திருப்போம்.

ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் காளியம்மன் பண்டிகையில் 'வண்டி வேடிக்கை’ நிகழ்ச்சி களைகட்டும். ஆயிரத்துக்கும் மேற்பட்டக் கலைஞர்கள் புராணப் புருஷர்களின் வேஷம் கட்டி அலங்கரிக்கப்பட்டப் பிரமாண்டமான வண்டிகளில் ஊர்வலம் வருவார்கள். சிறந்த முறையில் வேஷம் கட்டி, சிறந்த கருத்தைச் சொல்லும் வகையில் வரும் 'வண்டி வேடிக்கை’ குழுவுக்கு 5 ஆயிரம் ரூபாய் தொடங்கி 50 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கப் பரிசும் உண்டு.

என் ஊர்: பாடலாசிரியர் குகை மா.புகழேந்தி

எங்கள் வீட்டுக்கு எதிரில் பெரிய கிணறு ஒன்று இருந்தது. இதில் நான் நீச்சல் பழகி இருக்கிறேன். காலப்போக்கில் அதில் நீர் வற்றி, மண் புதைந்து இன்று கட்டடம் எழும்பி நிற்கிறது. அழிந்துபோன அந்தக் கிணற்றின் அருகில்தான் அன்று ஒரு பாதாம் மரம் இருந் தது. ஆண்டுக்கு அதில் ஆறு மூட்டைகள் வரை பாதாம் பருப்புக் கிடைக்கும். அவற்றை எங்கள் தெருவில் உள்ள அனைவரும் பங்கிட்டுக்கொள் வோம். இன்று அந்த மரமும் இல்லை.

குகையில் குதிரை வண்டிகள் ரொம்பப் பிர பலம். சாதாரணக் கட்டணப் பேருந்து, ஸ்பெஷல் கட்டணப் பேருந்து என இருப்பது போல், அன்று எங்கள் ஊரில் சாதா குதிரை வண்டி, ஸ்பெஷல் குதிரை வண்டி என்று இருந்தன. சாதா வண்டியில் வெறும் கட்டையில் அமர்ந்து பயணிக்க வேண் டும். ஸ்பெஷல் வண்டியில் வைக்கோலைப் பரப்பிப் போட்டு, அதன் மீது துணி போர்த்தி இருப்பார்கள். அந்த வண்டிக்கு உள்ளே முகம் பார்க்கும் கண்ணாடி, சீப்பு, பவுடர் இருக்கும். வண்டியின் வெளிப்புறத் தோற்றம் அழகான இயற்கைக் காட்சிகள் வரையப்பட்டுப் பளபளவென இருக்கும். இன்று குகையில் ஒரு குதிரை வண்டியைக் கூடப் பார்க்க முடியவில்லை. இருந்தாலும் அவை என் மனதில் என்றென்றும், லயம் மாறாத ஓசையுடன் ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன!''

என் ஊர்: பாடலாசிரியர் குகை மா.புகழேந்தி

>>>குகை மா.புகழேந்தியின் அப்பா மாணிக்கம், எம்.ஜி.ஆர். காலத்தில் அ.தி.மு.க. வட்டச் செயலாளர் ஆக இருந்தவர். எம்.ஜி.ஆர். சேலம் வரும்போது எல்லாம் தன்னுடைய ஹோட்டலில் ஸ்பெஷல் உணவுகளைத் தயார் செய்துகொண்டுபோய்க் கொடுப்பாராம்!

 >>>புகழேந்தியின் 'வானம் என் அலமாரி’ என்கிற கவிதைத் தொகுப்பு திருப்பூர் தமிழ்ச் சங்க விருதைப் பெற்றது!

>>>காற்றுக்குப் பதிலாய், வானம் என் அலமாரி, கவிதை நடையில் நடக்கிறாய், நிறங்கள் பெயர் மாறி விட்டன, மயிலிறகுப் பூத்த கனவுகள், பறவைகள் அலை கிற உயரம், பூக்களாய் உதிரும் எறும்புகள், உனக்கும் எனக்கும் ஒரே மரணம், பிரியங்களின் குப்பைத் தொட்டி... இவை  இவருடையக் கவிதைத் தொகுப்புகளில் சில!