Published:Updated:

மலைகளும் இவர்களுக்கு மடுக்களே!

அசத்தல் சைக்கிள் கேங்

மலைகளும் இவர்களுக்கு மடுக்களே!

அசத்தல் சைக்கிள் கேங்

Published:Updated:
##~##

சேலம்- ஏற்காடு சாலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு சிலர் அதிநவீன சைக்கிள்களில் வேகமாக மலை ஏறிக்கொண்டு இருந்தனர். வித்தியாசமான சைக்கிள் ரேஸ் போல் இருக்கிறதே என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டே... மலைப் பாதையின் ஓர் இடத்தில் இளைப்பாறிக்கொண்டு இருந்த சைக்கிள் வீரர்களிடம் பேச்சுக் கொடுத்தேன்.  

கிரண், வெங்கட், ஒபந்தரோ, சுதிர், நிஷிதா, கணபதி, தீபக், சுமதி ராவ் என்று எட்டுப் பேர் அடங்கிய குழு அது.  இதில் நிஷிதா ஜப்பானைச் சேர்ந்தவர். இவர்கள் அனைவரும் பெங்களூருவில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள். இதில் சுமா ராவ் மட்டும் சுமார் தமிழில் திக்கித் திக்கிப் பேசினார். ''நாங்கள் அனைவரும் இயற்கை ஆர்வலர்கள். பசுமையைப் பாதுகாக்கும் விழிப்பு உணர்வுக் காகக் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சைக்கிள்  பயணத்தை மேற்கொண்டுவருகிறோம்.

மலைகளும் இவர்களுக்கு மடுக்களே!

அனைவரும் வெவ்வேறு ஐ.டி. கம்பெனிகளில் வேலை பார்க்கிறோம்.  வேலைப் பளு காரணமாக எங்களுக்கு மன அழுத்தம் அதிகம். பொதுவாக ஐ.டி. துறையில் இருப்ப வர்கள் சனி, ஞாயிறு நாட்களில் மன அழுத்தத்தைப் போக்க பெரும் பாலும் என்ன செய்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும். ஆனால், நாங்கள் அதை மாற்றி, எங்கள் உடல் நலத்துக்கும் இந்த உலகத்துக்கும் நல்லது செய்யும் வகையில் ஏதாவது செய்ய நினைத் தோம். அப்போது தொடங்கியதுதான் இந்த சைக்கிள் பயணத் திட்டம்.

மலைகளும் இவர்களுக்கு மடுக்களே!

சனி, ஞாயிறு நாட்களில் பெங்களூரில் இருந்து கிளம்பி மலைப் பகுதிகளுக்கு சைக்கிளில் செல்கிறோம். கும்பலாகச் செல்லும்போது ஆங்காங்கே சைக்கிளை நிறுத்திச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உலகம் வெப்பமயமாதல், பசுமையின் தேவை, காடுகளைப் பாதுகாப்பது போன்ற பிரசாரங்களை மக்களிடம் மேற்கொள்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் ஏற்காடு, ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப் பகுதிகள் வணிகமயமானதன்  காரணமாக பசுமையான பரப்புகளில் 40 சதவிகிதத்தை இழந்துவிட்டன. அதற்காக அந்தப் பகுதிகளுக்குச் சைக் கிளில் சென்று இது தொடர்பாகப் பிரசாரம் செய்கிறோம்.

மலைகளும் இவர்களுக்கு மடுக்களே!

கர்நாடகாவில் உள்ள பல்வேறு மலைப் பகுதிகளுக்குச் சென்று இருக்கிறோம். இப்படிப் போகும்போது,  எங்களுக்குள் யார் முதலில் மலை ஏறி இறங் குகிறார்கள் என்று போட்டிவைப்போம். ஒரு முறை பெங்களூரில் இருந்து சென் னைக்கு நாங்கள் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு சைக்கிளை மிதித் தோம்.

மொத்தம் 600 கிலோ மீட்டர் தூரத்தை 39 மணி நேரம் 25 நிமிடங்களில் நான்தான் முதலில் கடந்தேன். மற்றவர் அனைவரும் சராசரியாக 40 மணி நேரத்துக்குள் வந்துவிட்டார்கள். சைக்கிள் ரேஸில் வேகம் முக்கியம். அதனால், வேகத்தை அதிகப்படுத்த அடிக்கடி மலைகளில் ஏறி இறங்குகிறோம். எங்களால் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சர்வ சாதாரணமாக சைக்கிளை ஓட்ட முடியும்'' என்று  சொல்லும் சுமா ராவுக்கு வயது 40.

வாழ்த்துக்கள் சொல்லி விடைபெற் றோம்!

- ம.சபரி

படங்கள்: மகா.தமிழ்ப்பிரபாகரன்

>>>>சுமா ராவ்... ஆப்பிரிக்காவில் உள்ள கிளிமாஞ்சாரோ மலையில் நடந்த 'இரும்பு மனிதர்’ போட்டியில், 90 கிலோ மீட்டர் சைக்கிளில் கடந்து, 21 கிலோ மீட்டர் தூரம் ஓடி, இரண்டு கிலோ மீட்டர் கடலில் நீந்தி முதல் பரிசைப் பெற்றவர். இந்த சாதனையைச் செய்த இரண்டாவது இந்திய பெண் இவர்!

>>>>பெங்களூருவில் இப்போது இவர்களைப் போல்  சைக்கிள் கம்யூனிட்டி அதிகமாகிவருகிறது!

 >>>> பெங்களூருவில் காற்று மாசு அடைவதைத்தடுக்க பலரும் தற்போது சைக்கிளைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இவர்கள் சைக்கிளில்தான் அலுவலகங்களுக்குச் செல்கின்றனர்!