Published:Updated:

'சிறையில் கனிமொழி:காங்.-திமுக உறவில் பாதிப்பில்லை'

புதுடெல்லி, மே 14,2011

2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் கனிமொழி கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், காங்கிரஸ் - திமுக இடையிலான உறவில் எந்தப் பாதிப்பும் இல்லை என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். ##~~##

கனிமொழியை சந்திப்பதற்காக டெல்லி சென்ற திமுக தலைவர் கருணாநிதியை இன்று மத்திய அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் விவகார பொறுப்பாளருமான குலாம் நபி ஆசாத் சந்தித்து பேசினார்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், "எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் - திமுக உறவில் எந்தப் பாதிப்பும் இல்லை. எதிர்காலத்திலும் எவ்வித பாதிப்பும் வராது," என்றார்.

மேலும், "சிறையில் இருக்கும் கனிமொழி பெண் என்பதால், எங்கள் தலைவர் சோனியா காந்தி கவலை தெரிவித்தார். இது கவலைக்குரிய விஷயம் தான். யாரும் எதுவும் செய்ய முடியாது என்பதே உண்மை," என்றார் ஆசாத்.