Published:Updated:

என் ஊர்! - வடபழனி - ஆர்த்தி

''நான் குண்டான காரணம் தெரியுமா?''

என் ஊர்! - வடபழனி - ஆர்த்தி

''நான் குண்டான காரணம் தெரியுமா?''

Published:Updated:
##~##

''பல மாநிலங்கள், நாடுகள்னு சுத்தி வந்து இருக்கேன். ஆனாலும், எந்த இடமும் வடபழனிக்கு ஈடாகாது. காமெடியா சொல்ல ணும்னா வடபழனியும் என்னை மாதிரியே பல சுத்துப் பெருத்திடுச்சு!'' - தான் வளர்ந்த வடபழனி யின் பெருமை பற்றிச் சொல்கிறார் நகைச்சுவை நடிகை ஆர்த்தி. 

''ஆரம்பத்துல இருந்த வடபழனிக்கும் இப்ப இருக்குற வடபழனிக்கும் நிறைய  வித்தியாசம்.துரை சாமி ரோட்டு வழியா ஸ்கூலுக்கு நடந்துபோன நாட்களை மறக்கவே முடியாது. நம்பர் 8-ஏ, வேங்கீஸ் வரர் நகர். இதுதான் வடபழனி யில் நாங்க குடி இருந்த வீட் டோட அட்ரஸ். அந்தத் தெருவுலதான் சைக்கிள் ஓட்டக் கத்துக்கிட் டேன். அப்புறம்தான் கைனடிக் ஹோண்டா வாங்கினேன். ஸ்டைலா ஓட்டிட்டுப் போய் ஸ்கூல்ல டீச் சர்ஸ் வண்டி நிறுத்துற இடத்துல நிறுத்தி, மத்தவங்களை வயிறு எரியவிடுவேன். ஏன்னா, அப்ப எல்லாம் ஸ்டூடண்ட்ஸ் அதிக பட்சமா சைக்கிள்ல தான் வரு வாங்க. அந்த பைக்ல வடபழனித் தெருக்கள் முழுவதும் ரவுண்ட் அடிச்ச நாட்கள் இப்பவும் ஞாப கத்துல இருக்கு.  அந்த

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஊர்! - வடபழனி - ஆர்த்தி

வண்டியை என் ஃப்ரெண்ட்ஸுக்கு வாடகைக்கு விட்டு, பெட்ரோல் போட காசு உஷார் பண்ணினதை நினைச்சா இப்பவும் சிரிப்பு வரும். வடபழனி ஜே.ஆர்.கே. ஸ்கூல்லேயே தொடர்ந்து 11 வருஷம் படிச்சதால, எப்பவும் கெத்துக் காட்டிக்கிட்டே இருப் பேன்.

ஸ்போர்ட்ஸ், படிப்பு, கல்ச்சுரல்னு எங்க ஸ்கூல்ல நான்தான் ஆல் ரவுண்டர்.   நடிகை மந்த்ரா என் கிளாஸ்மேட். தனுஷ், செல்வராகவன் எல்லாம் ஸ்கூல்ல எனக்கு சீனியர்ஸ்.  

எனக்கு ஸ்கேட்டிங் ரொம் பப் பிடிக்கும். ஒருநாள் தெருவுல சிவப்பு, நீலம் கலர் காம்பினேஷன்ல டிரெஸ் போட்டுக்கிட்டு ஸ்கேட்டிங் பிராக்டீஸ் செஞ்சிக்கிட்டு இருந்தேன். அப்ப ஒரு மாடு என் காஸ்ட்யூமை பார்த் துட்டு வெறிபிடிச்ச மாதிரி துரத்த ஆரம்பிச்சிடுச்சு. அந்த மாடுக்கிட்ட இருந்து தப்பிக்க ஓடினப்பதான், 'நான் இவ்வளவு நல்லா ஸ்கேட் பண்ணுவேனா?’னு எனக்கே ஆச்சர்யமாகிடுச்சு. பிறகு, வட பழனி முருகன் கோயில் பின்னாடி குடிவந்தோம். கோயிலுக்குப் பின்னாடியே இருக்கறதால இனிமேல் தினமும் கோயிலுக்குப் போகணும்னு நினைச்சுப்பேன். ஆனால், அங்க குடி இருந்த அஞ்சு வருஷத்துல அஞ்சு முறைதான் கோயிலுக்குப் போயிருக்கேன். கோடம்பாக்கம் மீனாட்சி காலேஜ்ல படிக்கிறப்ப மன்னா பேக்கரியில் ஜூஸ் வாங்கிக் குடிச்சதையும் ஸ்நாக்ஸ் சாப்பிட்டதையும் மறக்க முடியுமா? உண்மையைச் சொல்லணும்னா நான் குண்டானதுக்கு அந்தப் பேக்கரியும் ஒரு காரணம்.

என் ஊர்! - வடபழனி - ஆர்த்தி

வடபழனி முருகன் கோயில் மாதிரியே எங்க ஏரியா ஃபாத்திமா சர்ச்சும் எனக்கு ரொம்ப இஷ்டம். ஏதாவது பொருள் தொலைஞ்சிடுச்சுன்னா அங்கப் போய் வேண்டிக்கிட்டா திரும்பக் கிடைச்சிடும். நான் ரொம்பவேஆசைப் பட்டு வாங்கின மொபைல் போன் பைக்ல போறப்ப எங்கேயோ கீழே விழுந்திடுச்சு. அந்த போன் மிஸ்ஸானது மனசுக்கு ரொம்ப கஷ்ட மாயிடுச்சு. பிறகு, ஃபாத்திமா சர்ச்சுக்குப் போய் மொபைல் கிடைக்கணும்னு வேண்டிக்கிட்டேன். அடுத்த ஒரு வாரத்துலயே ஒருத்தர் 'இந்த போன் கீழே கிடந்துச்சு’னு சொல்லி வீட்டுக்குக்கொண்டு வந்து கொடுத்தார். அதுல இருந்துதான் எனக்குக் கடவுள் நம்பிக்கை அதிகமாச்சு. இப்ப அடிக்கடி ஃபாத்திமா சர்ச்சுக்குப் போறேன். இதேபோல் என்னால் மறக்க முடியாத இன்னொரு இடம் அம்பிகா எம்பயர் பக்கத்துல இருக்கிற வடைக்கடை. அங்க சுத்தமான எண்ணெயில் செஞ்சு விக்கிற வடை சூப்பரா இருக்கும். அங்க அடிக் கடி போய் வடை வாங்கிச் சாப்பிடுவேன்.

என் ஊர்! - வடபழனி - ஆர்த்தி

இப்படிக் கசகசனு நெருக்கி அடிக்கிற மக்கள் வாழும் பகுதியா இருந்தாலும் அவங்களுக்குள்ள இருக்கிற அன்பு, அந்நியோன்யம்தான் வடபழனியோட ஸ்பெஷல்!''

- சா.வடிவரசு

படங்கள்: ஜே.வேங்கடராஜ்

50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருந்தாலும் 'படிக்காதவன்’ பட 'அருக்காணி’ கேரக்டர்தான் இவருக்கு ஃபேவரைட்டாம்!

பிரபு தேவா மும்பையில் இருந்து தன்னுடைய வீட்டுக்கே வந்து திருமண வாழ்த்துத் தெரிவித்ததைப் பெருமையாகக் குறிப்பிடுகிறார்!

ஊட்டியில் பிறந்தவர். தன்னுடைய மூன்றாவது வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுகம் ஆனார். அதன் பிறகு நடிப்புக்காகவே குடும்பத்தோடு சென்னைக்குக் குடிபெயர்ந்துவிட்டார். 'வண்ணக் கனவுகள்’, 'சத்ரியன்’ உட்பட 63 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார் ஆர்த்தி!

பொதிகை டி.வி-யில் வந்த 'கதையின் கதை’ சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனார். தற்போது 'சிரிப்பொலி’ தொலைக்காட்சியில் 'தீராத விளையாட்டுப் பிள்ளை’ என்ற நிகழ்ச்சியைக் கணவர் கணேஷ்கருடன் சேர்ந்துத் தொகுத்து வழங்கிவருகிறார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism