Published:Updated:

''ஏழைகளுக்கு ஏமாற்றும் உரிமை உண்டு!''

''ஏழைகளுக்கு ஏமாற்றும் உரிமை உண்டு!''

''ஏழைகளுக்கு ஏமாற்றும் உரிமை உண்டு!''

''ஏழைகளுக்கு ஏமாற்றும் உரிமை உண்டு!''

Published:Updated:
##~##

சென்னை லயோலாக் கல்லூரி வளாகம். மாணவர்கள் கல்லூரிக்குள் சரசரவென நுழைய, இன்னொரு பக்கம் சென் னையில் இருக்கும் பிச்சைக்காரர்கள் கூட்டம் கூட்டமாகக் குவிகிறார்கள். அவர்களிடம் அன்போடு பேசிக்கொண்டு இருக்கும் ஃபாதர் சிராக், எல்லோருக்கும் கொஞ்சம் பணம் கொடுக்கிறார். உணவு அளிக்கிறார். கூட்டமும், கூச்சலும் அதிகமாக, கல்லூரி நிர்வாகிகள்ஃபாத ரிடம், ''காலேஜ்ல மாநாடு போல் பிச்சைக் காரர்களைக் கூட்டினா பசங்க எப்படிப்படிக்க முடியும்?'' என்று கோபத்துடன் முறையிடுகின் றனர். அவர் சிரித்தபடியே பதில் சொல்கிறார், ''நீங்கள் எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், நடிகர்களை எல்லாம் உங்கள் விருந்தினர்களாக அழைத்து வருகிறீர்கள். அதற்கு நான் ஏதேனும் மறுப்பு சொன்னேனா? இவர்கள் என் விருந்தினர்கள்'' என்கிறார். 

இப்படிப் பிச்சைக்காரர்களின் நண்பனாக, ஏழைகளின் பாதுகாவலராக, அநாதைக் குழந் தைகளின் கல்விக்கு உதவுபராக இருந்த ஃபாதர் சிராக், இப்போது இல்லை. சமீபத்தில் தன்னுடைய 98-வது வயதில் இறந்துவிட்டார். ஃபிரான்ஸின் லிமோசான் என்ற நகரில் பிறந்து, சென்னையில் அடக்கம் செய்யப்பட்ட ஃபாதர் சிராக் குறிப்பிடத்தக்க சமூகச் செயற்பாட்டாளர். அவருடைய மரணத்துக்கு ஃபிரான்ஸ் நாட்டு அதிபர் இரங்கல் தெரிவித்து இருக்கிறார். அந்த நாட்டுத் தூதர் இறுதிச் சடங்குக்கு நேரில்வந்தார். ஃபாதர் சிராக் பற்றி நம்மிடம் பேசினார் லயோலா கல்லூரியைச் சேர்ந்த ஃபாதர் ஹென்றி ஜெரோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஏழைகளுக்கு ஏமாற்றும் உரிமை உண்டு!''

''1914-ல் பிறந்தவர் சிராக். அவருடைய விட லைப் பருவக் காலத்தில் இந்தியாவுக்கு வந்தவர், இங்கு மெய்யியல், இறையியல் என மதப் படிப்பு களுடன் தமிழ் இலக்கியமும் படித்தார். 1950-களில் 'அய்க்கப்’ எனப்படும் 'அகில இந்திய கத்தோலிக்கப் பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பு’ ஓரள வுக்கு செயல்பட்டுக்கொண்டு இருந்தது. அதை நாடு முழுவதும் பரவலாக்கியது சிராக்தான். மத அமைப்பு என்பதில் இருந்து அதை விடுவித்து, மார்க்ஸிய சிந்தனைகளைப் புகுத்தினார்.மாணவர் களுடன் ஏதேனும் ஒரு கிராமத்துக்குச் சென்று கேம்ப் அடித்து அங்கு உள்ள எல்லா வேலை களையும் செய்துதருவார். இதற்கு 'வொர்க் கேம்ப்’ என்று பெயர். இதைக் கேள்விப்பட்ட நேரு, ஃபாதர் சிராக்கை அழைத்துப் பேசி பள்ளி, கல்லூரிகளில் 'என்.எஸ்.எஸ்’ என்ற திட்டத்தைச் செயல்படுத்தினார். 1970-க்குப் பிறகு அய்க்கப், வெளிப்படையாக மார்க்ஸிய சிந்தனைகளுக்கான களமாக மாறியது.

''ஏழைகளுக்கு ஏமாற்றும் உரிமை உண்டு!''

நாடு முழுவதும் தலைமைத்துவப் பயிற்சி முகாம்கள் நடத்தினார். இப்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ள பி.ஏ.சங்மா, மார்கரெட் ஆல்வா, எம்.எம்.தாமஸ் உள்படப் பலரை உருவாக்கியது சிராக்தான். மானா மதுரையில் இவர் பணிபுரிந்த காலங்கள் முக்கியமானவை. அங்கு ஒரு பண்ணையை உருவாக்கினார். அதில் வரும் வருமானத்தை அங்கு உழைப்பவர்களே பங்கு போட்டுக்கொள்ளலாம். அந்தத் திட்டம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.  தேவகோட்டை, ராமநாதபுரம் பகுதி களில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியபோது ஃபாதர் சிராக் தன் சொந்த முயற்சியில் 'ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் கிணறு’ என்ற பிர மாண்டமான திட்டத்தைச் செயல்படுத்திக்காட் டினார். பெரும்பாலான கிணறுகள் தலித் பகுதியில்தான் அமைக்கப்பட்டன. மக்களின் தண்ணீர்ப் பஞ்சத்தினைத் தீர்க்க அந்தக் கிணறுகள் உதவின.

1980-களில் கம்போடிய அகதிகளுக்கு உதவு வதற்காகத் திருச்சபையால் அனுப்பி வைக்கப் பட்டார். 13 ஆண்டுகள் கம்போடியாவில் அகதி கள் மறுவாழ்வுக்காக அவர் பணிபுரிந்த காலம் தான் அவரை உலகறியச் செய்தது. நோபல்பரிசுக் கான பட்டியலில்கூட இவர் பெயர்பரிந்துரைக்கப் பட்டது. ஃபிரான்ஸ் நாட்டு இளைஞர்களிடம் செல்வாக்கு மிகுந்த பிரபலமாக மாறினார். இவரைப் பற்றி ஃபிரான்ஸில் நிறைய புத்தகங்கள் வெளிவந்து இருக்கின்றன. மதுரையில் பணி புரியும்போது ஒருமுறை சிராக்குக்கு முதுகில் அடிபட்டு இடுப்பு எலும்பு முறிந்துவிட்டது. உடனே தனி விமானம் அனுப்பிவைத்து ஃபாதர் சிராக்கை அழைத்துச் சென்று சிகிச்சை கொடுத்தது ஃபிரான்ஸ் அரசு.

93-க்குப் பிறகு திண்டிவனத்தில் 'சிராக் குழந்தைகள் அறக்கட்டளை’ என்று ஆரம்பித்து, ஆதரவற்ற குழந்தைகளுக்காகப் பணிபுரியத் தொடங்கினார். இந்தக் காலகட்டத்தில்தான் சென்னையில் இருந்த பிச்சைக்காரர்களின் மீது ஃபாதரின் பார்வை திரும்பியது. மாதம் தவறாமல் எல்லோரையும் சந்தித்துவிடுவார். ஃபாதர் சிராக் ஃபிரான்ஸ் சென்றால் அவர் எப்போது திரும்பி வருவார் என்பது எங்களுக்குக்கூடத் தெரியாது. ஆனால், பிச்சைக்காரர்களுக்கு அந்த விவரம் தெரிந்து இருக்கும். 'கஷ்டம்’ என்று யார் சொன்னாலும் இருப்பதை எடுத்துக்கொடுத்துவிடுவார். இதைப் பயன்படுத்திக்கொண்டு பலபேர் அவரை ஏமாற்றினார்கள். அதைப்பற்றி கேட்டபோது, 'ஏழைகளுக்கு ஏமாற்றும் உரிமை உண்டு’ என்று சொல்லித் திகைக்க வைத்தார். இந்திய சாதிய அமைப்பைப் புரிந்துகொண்ட அவர், தலித்கள் மீது எப்போதும் அக்கறையோடு இருந் தார். மதுரையில் டாக்டர் அம்பேத்கர் கல்ச்சுரல் அகாடமியை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர்.  2005-ம் ஆண்டுக்குப் பிறகு உடல்நிலை சரியில்லாததால் அவரால் எங்கேயும் செல்ல முடியவில்லை'' என்று முடித்தார் ஜெரோம்.

மதப் பணியோடு மக்கள் பணியையும் சேர்த்து செய்த ஒரு வெளிநாட்டு மனிதருக்காகத் தமிழர் கள் எல்லோரும் நன்றி செலுத்துவோம்!

- பாரதி தம்பி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism