
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
முதலில் ஒரு சாய்வான பலகையில் பாத்திரத்தை வைத்து மண்ணைத் தண்ணீருடன் சேர்த்துக் கரைக்கின்றனர். உலோகங்களின் அடர்த்தி அதிகம் என்பதால் தண்ணீரில் கலந்து இருக்கும் உலோகங்கள் மேலேயே தங்கிவிடும். இன்னொரு முறையில் ஈயத்துடன் சேர்த்து மண்ணை உருக்கத் தொடங்குகின்றனர். இதனால், மண்ணில் இருந்து உலோகங்களைச் சுலபமாகப் பிரித்து எடுக்க முடியும். இப்போது கிடைப்பது ஈயத்துடன் கூடிய உலோகக் கலவை மட்டுமே.

பிறகு படிப்படியான செயல்முறைகள் மூலம் தங்கம், வெள்ளி, பித்தளை அடங்கிய உலோகக் கலவை கிடைக்கிறது. நைட்ரிக் அமிலத்துடன் இந்த உலோகக் கலவையைச் சேர்க்க, தங்கம் அமிலத்துடன் வினை புரியாமல் அடியிலேயே தங்கிவிடுகிறது. வெள்ளியும் பித்தளையும் அமிலத்தில் கரைந்துவிடுகின்றன. பிறகு வடிகட்டித் தங்கத்தைப் பிரித்து எடுக்கிறார்கள்.
வெள்ளியைப் பிரித்து எடுக்கச் செம்பு உலோகக் கம்பியைத் தண்ணீரில் மூழ்கவைத்து அமிலக் கலவையில் செருகுகிறார்கள். வெள்ளி, செம்புக் கம்பியுடன் சேர்ந்து வந்துவிடுகிறது. பித்தளையைப் பிரித்து எடுக்க இரும்புக் கம்பியைப் பயன்படுத்துகின்றனர்.

இவர்களுக்கு கெமிஸ்ட்ரி ஃபார்முலாக்கள் எதுவும் தெரியாது. ஆனாலும் வேதியியல் செய்முறைகள் மூலம் ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை, மன்னிக்கவும், மூன்று உலோகங் களைப் பிரிக்கின்றனர்.
- ரா.ராபின் மார்லர்