Published:Updated:

மரங்கள்... அரண்கள்!

மரக்கணக்கெடுப்பில் மாணவர்கள்

மரங்கள்... அரண்கள்!

மரக்கணக்கெடுப்பில் மாணவர்கள்

Published:Updated:
##~##

க்கள் தொகைக் கணக்கெடுப்புப் போலவே மரங்களைக் கணக்கு எடுக்கும் பணிகள் தற்போது சென்னை முழுவதும் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரித் தாவரவியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் நரசிம்மன், இந்தப் பணியை ஒருங்கிணைத்து வருகிறார். கிண்டி ஐ.ஐ.டி. வளாகத்தில் மாணவர்களுடன் மர சர்வேயில் இருந்தவரைச் சந்தித்தேன். 

''மரங்கள் சுற்றுச்சூழலின் அரண்கள். வாகனப் புகையில் உள்ள கார்பன் மோனாக்சைடு வளிமண்டலத்தில் அதிகமாகி, ஒரு படலமாக உருவாகும். இந்தக் கரிய படலம் காற்று மண்டலத்தில் மாறுதல்களை ஏற்படுத்தும். இது உயிரினங்களுக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும். இந்த ஆபத்துகளில் இருந்து நம்மைக் காப்பதில் மரங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. அரசாங் கமும் தன்னார்வ அமைப்புகளும் ஊடகங்களின் வாயிலாக இது தொடர் பான விழிப்பு உணர்வை ஏற்படுத்திவருகிறார்கள்'' என்றவர் மரக் கணக்கெடுப்புக்கானக் காரணங்களையும் விவரிக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மரங்கள்... அரண்கள்!

''சென்னையின் மக்கள் தொகை, வாகனங்களின் எண்ணிக்கை, மற்றும் தொழிற்சாலைகளின்

மரங்கள்... அரண்கள்!

பரப்பளவுக்கு ஏற்ப இவ்வளவு மரங்கள் இருக்க வேண் டும் என ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால், நம் நகர மக்கள் தொகைக்கு ஏற்ப மரங்கள் உள்ளனவா என்பதை அறிய இந்தக் கணக்கெடுப்பு உதவும். பாரம்பரிய மூத்தகுடி மரங்கள் எவை என்பதை அறிந்து அவற்றை வகைப்படுத்தினால் சென்னை யின் வரலாறு குறித்த தகவல்களையும் நாம்அறிய லாம். அந்தப் பாரம்பரிய மரங்களின் வாழ்வா தாரத்தை வலுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கலாம். 'மாசு நிறைந்த இந்தப் பகுதிகளில் மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம்’ என அரசாங்கத்துக்குத் தகவல் சொல்லலாம். தாவரவியல் மாணவர்களுக்கு ஆவண வழிகாட்டியாகவும் பயன்படும். இப்படி மரங்கள் கணக்கெடுப்பால் ஏகப்பட்ட நல்ல விஷயங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது.

2011- ஆகஸ்ட் மூன்றாம் தேதி தமிழக வனத் துறை அமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்ட இந்தப் பணி முழு வேகத்தில் நடந்துவருகிறது. சென்னை மாநகராட்சி மற்றும் வனத் துறையின் ஆதரவோடு மாணவர்கள் கணக் கெடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதுவரை மாநிலக் கல்லூரி, விவே கானந்தா கல்லூரி, ராணிமேரிக் கல்லூரி  உள்ளிட்ட ஏராளமான இடங்களில் கணக்கெடுப்பு முடிந்துவிட்டது. கிண்டி தேசிய பூங்காவில் மகிழ மரம் உள்ளிட்ட அரிய வகை மரங்கள் ஏராளமாக உள்ளன. சுமார் 70 மாணவர்கள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். இங்கு மட்டுமே இதுவரை 18 ஆயிரம் மரங்களைக் கணக்கெடுத்திருக்கிறோம்.

சென்னையில் உள்ள எல்லா மரங்களையும் கணக்கெடுக்கத் திட்டமிட்டு உள்ளோம். கணக்கெடுப்பில் மரங்களின் சுற்றளவு, உயரம், அதன் வகை உள்ளிட்ட பல தகவல்களைப் பதிவு செய் கிறோம். கணக்கெடுத்த மரங்களையே திரும்பக் கணக்கெடுக்காமல் இருக்க #  என்ற குறியீட்டை அடையாளத்துக்காக பெயின்டால் அந்த மரத் தில் எழுதிவிடுவோம்.  இந்தக் கணக்கெடுப்பின் முடிவில்தான் என்னென்ன மரங்கள் அதிக அளவில் இருக்கின்றன, என்னென்ன மரங்கள் குறைவாக இருக்கின்றன என்பது தெரியும். மரம் நடு விழா உள்ளிட்ட சுற்றுச் சூழல் தொடர்பான விழாக்களில் எந்தெந்த மரங்களை நடலாம் என்பது உட்பட பல விஷயங்களுக்கு இந்தக் கணக்கெடுப்பு உதவும்'' என்கிறார்.

மரங்கள்... அரண்கள்!

சென்னை மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி கலையரசி, ''இந்தக் கணக்கெடுப்புக்கு வந்தப் பிறகுதான் இத்தனை வகையான மரங் கள் இருக்கின்றன என்பதே எங்களுக்குத் தெரிந் தது. அதுமட்டும் இல்லாமல் அது எந்த வகை மரம், அதன் பயன் என்ன என ஏராளமான தகவல்களைத் தெரிந்துகொண்டோம். எங்களைப் போன்ற தாவரவியல் துறை மாணவர்கள் மட்டும் இல்லாமல் மற்ற துறை மாணவர்களும் ஆர்வத்தோடு  இந்தக் கணக்கெடுப்பில் கலந்து கொள்கிறார்கள். வளர்ந்து வரும் தொழில்நுட்பம், போக்குவரத்து, மக்கள் தொகைக்கு மத்தியில் சென்னையில் மரங்களை வளர்ப்பது பெரும் சவால்.  ஆனால், இது அத்தியாவசிய, அவசி யப் பணி என்பதை மக்கள் உணர வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்!'' என்கிறார்.

உண்மைதான்!

சா.வடிவரசு

படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism