Published:Updated:

இதுதான் அறிவாலயம்!

இது நம்ம ஊரு ஸ்பெஷல் - திருவண்ணாமலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இந்த லிங்க் மூலம் இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இதுதான் அறிவாலயம்!
##~##
டா
ஸ்மாக் கடைகள் அதிகமாகவும் நூலகங்கள் குறைவாகவும் உள்ள சூழலில் வாழும் அவலம் நமக்கு. ஆனால், திருவண்ணாமலையில் இயங்கும் மாவட்ட மைய நூலகம் 1955-ல் தொடங்கப்பட்டுப் பொன்விழாவை முடித்துத் தன் புத்தகச் சேவையைத் தொடர்கிறது.

இந்த நூலகத்தில் மொத்தம் 1,07,854 நூல்கள் உள்ளன. வாசகர்கள் படித்துப் பயன்பெறுவதற்காக 117 இதழ்கள் வாங்கப்படுகின்றன. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நூலகத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்காகத் தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டிருப்பது இந்த நூலகத்தின் தனிச்சிறப்பு.

இதுதான் அறிவாலயம்!

நூலக வாசகர்கள் பயன்படுத்துவதற்காக 10 கணினிகள் மூலம், ஒரு மணி நேரத்துக்கு 10 ரூபாய் வீதம் இணையதள சேவை அளிக்கப் படுகிறது. 10ஆம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளை இலவசமாக வழங்குவது, போட்டித் தேர்வு விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்து தருதல் போன்ற சிறப்புச் சேவை களையும் செய்துவருகின்றனர்.  

இதுதான் அறிவாலயம்!

மாதந்தோறும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை வாசகர் வட்டக் கூட்டம் நடத்தப்படுகிறது.  நூலகத்தின் சார்பில் மாணவர்களுக்குப் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. தேசிய நூலக வார விழாவை ஒட்டி  நவம்பர் மாதம் 14-ந் தேதியில் இருந்து ஒரு வார காலத்துக்குச் சுழலும் சொல்லரங்கம், கவியரங்கம், நூல் அறிமுகங்கள், பட்டிமன்றங்கள் போன்ற நிகழ்வுகளையும் நடத்துகின்றனர்.

- கோ.செந்தில்குமார்
படங்கள்: பா.கந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு