Published:Updated:

தமிழன் வீதி

தமிழன் வீதி

தமிழன் வீதி

தமிழன் வீதி

Published:Updated:
தமிழன் வீதி

         நிற்பாயா... ஓடுவாயா?  

சம்பளம் வாங்குவதும், அதைச் செலவு செய்வதும், மீண்டும் அடுத்த சம்பளத் தேதிக்காக

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழன் வீதி

காத்திருப்பதும் என்று வாழ்க்கை ஒரு வட்டத்துக்கு உள்ளேயே சுழன்றுகொண்டு இருக்கிறது. 'இதுதான் சரியானப் பாதையா?’ என்ற கேள்வி அலைபோல் மனதில் மோதியபடியே உள்ளது. எப்போதும், எந்நேரமும் பிறருக்காக உழைக்க வேண்டி இருக்கிறது. நாமாகச் சுமந்தது கொஞ்சம் என்றாலும், பிறரால் சுமத்தப்படுவதுதான் அதிகம். நமது ஆசைகளை, கனவுகளை, கடந்த கால நினைவுகளை என அனைத்தையும் இந்த வாழ்க்கை தின்று தீர்க்கிறது. எப்போதும், எந்நேரமும் யாரோ ஒருவருடைய வெற்றிக்காகக் கைதட்ட வேண்டி இருக்கிறது. வேறு ஒருவரின் வெற்றியின் ருசி வலுக்கட்டாயமாக நம்முடைய புறங்கையின் மீது தடவப்படுகிறது. வேண்டாம் என்று முகம் திருப்பினாலும், 'நீ நக்கித்தான் ஆக வேண்டும்’ என்று போதிக்கப்படுகிறது. டார்கெட், அப்ரைசில், பிளான் ஆஃப் ஆக்ஷன் என்று பல்வேறு பெயர்களில் கூறப்பட்டாலும், அவை உன் கழுத்தை அழுத்தும் நுகத்தடி என்பதை மறந்துவிட வேண்டாம். அதைத் தூக்கி உன் கழுத்தில் வைத்துக் கட்டிவிட்டு, உன் பின்பக்கத்தில் நெருப் பையும் வைத்துவிடுவார்கள். நீ நின்று திரும்பிப் பார்ப்பியா? இல்ல... தலைதெறிக்க ஓடுவியா?

               லாட்டரியும் டாஸ்மாக்கும்!

தமிழன் வீதி

இன்றைய டாஸ்மாக்போல் அன்று திரும்பிய பக்கம் எல்லாம் லாட்டரி கடைகள்தான். அப்போது லாட்டரியின் பிடியில்தான் தமிழகம் இருந்தது என்றே சொல்லலாம். இன்று தமிழகத்தில் லாட்டரியைத் தடை செய்து 10 ஆண்டுகளாகிவிட்டன. அண்ணா காலத்தில் கொண்டுவரப்பட்ட  லாட்டரி பல வருடங்களாக தமிழகத்தில் மூலை முடுக்கு எல்லாம் நிறைந்து இருந்தது. அன்று கடைகளில் லாட்டரிச் சீட்டு விற்பனை போதாது என்று, தனி நபர் மூலமாகவும் விற்பனை செய்து கல்லா கட்டினார்கள்.  'சார்... ஒரு கோடி பம்பர்! தமிழ்நாடு லாட்டரியின் ஒரு கோடி. நீங்களும் லட்சாதிபதி ஆகலாம். வாங்க சார் வாங்க' என்று கூவிக் கூவி சீட்டுகளை விற்பார்கள். லாட்டரி சீட்டின் தலைநகரம் என்றால் சிக்கிம் கேங்டாக்தான். பெரும்பாலான லாட்டரிகள் அங்கு இருந்துதான் வெளிவரும்.  குலுக்கலும் அங்குதான் நடைபெறும். சிக்கிம் மாநில அரசுடன் நெருக்கமான நட்பில் இருந்தனர் தமிழக லாட்டரி உரிமையாளர்கள். 2002-ம் வருடத்தில் அன்றைய ஜெயலலிதா அரசால் தடை விதிக்கப்பட்ட லாட்டரி, அன்று முதல் இன்று வரை  தமிழ்நாட்டில் மீண்டும் எழ வாய்ப்பே இல்லாமல்போய்விட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் லாட்டரிக்கு ஒட்டுமொத்தத் தடை விதிக்கப்பட உள்ளது.  1998-ம் ஆண்டு இது தொடர்பாக மசோதா உருவாக்கப்பட்டது. அனைத்து மாநில உள்துறை அமைச்சகங்களின் ஒருமித்த கருத்தோடு, இது தொடர்பான மசோதா பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது. பல்வேறு மாநில அரசுகள் லாட்டரியை எதிர்த்தாலும், சிக்கிம், நாகாலாந்து, மிசோரம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், கேரளம் உள்ளிட்ட சில மாநிலங்களில்  லாட்டரிஅனுமதிக்கப் பட்டு உள்ளது. இன்று தமிழகத்தில் பத்து வயதாகும் இளம் சிறார்களுக்கு 'லாட்டரி சீட்டு’ என்றால் என்னவென்றே தெரியாது. இதேபோல் டாஸ்மாக்கும் என்னவென்றே தெரியாத காலம் வந்தால் எப்படி இருக்கும்!

            'தோல் கொடுப்போம்!'

தமிழன் வீதி

'தோள்’ என்று எழுதுவதற்குப் பதிலாக 'தோல்' என்று எழுதிட்டேன்னு பாக்கிறீங்களா? உண்மையாகவே இன்று  காலையில் பத்திரிகையில் வந்த செய்தி என்னை ஆச்சர்யப்படுத்தியது!    

கண் தானம், ரத்த தானம், சிறுநீரக தானம்  போன்றவற்றைத் தொடர்ந்துதோல் தானமும் தமிழகத்துக்கு வந்துவிட்டது.  சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் 'தோல் வங்கி' சமீபத்தில் திறக்கப்பட்டு இருக்கிறது.  இந்த வங்கியில் மனிதர்கள் கண் தானம் செய்வதுபோல் தங்களுடைய தோலையும் தானமாக அளிக்கப் பதிவு செய்யலாம். இறந்த மனிதர்களின் உடலில் இருந்து 6 மணி நேரத்துக்குள்தோலை எடுத்து பத்திரப்படுத்திவைக்கலாம்.  தோல் வங்கியில் பதப்படுத்திவைக்கப்படும் மனித தோலை 5 ஆண்டுகள் வரை பாதுகாப்பாக வைக்கமுடியும்.  தீக்காயம் அடைந்தவர்களுக்கு தோல் மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் இயல்பான நிலை யில் பொருத்த முடியுமாம். தீக்காயம் அடைந்து  தோல் பொசுங்கி, விகார தோற்றத் துடன்  தங்களுடைய வாழ்வைஇழந்தவர்கள் அதிகம். அவர்களுக்கு எல்லாம் இந்தச் செய்தி மிகவும் ஆறுதல் அளிக்கக் கூடியது.

பொதுவாக ஆடு, மாடு,  பாம்பு போன்ற பிராணிகளின் தோலைத்தான் உரித்து நாம் பயன்படுத்துவோம். இன்று நம் தோலையே உரித்து பயன்படுத்தும் அளவுக்கு மருத்துவம் முன்னேறிவிட்டது.  அதிசயம்தான்.

'தோல் இழந்தவர்களுக்குத் தோள் கொடுப்போம்.

துயரத்தில் இருப்பவர்களுக்குக் குரல் கொடுப்போம்!’

தமிழன் வீதி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism