

ஹேமாவதி புதுவையின் அறிவியல் ஆர்வலர். கடந்த 30 ஆண்டுகளாகப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல்; சாமானிய மக்களுக்கும் அறிவியலைக் கொண்டு சேர்ப்பதற்காக உழைத்துக்கொண்டு இருப்பவர். ஆனா ஆவன்னா தெரியாதவர் கூட இவரிடம் ஐந்து நிமிடம் பேசிக்கொண்டு இருந்தால் ஆர்க்கிமிடிஸ் கோட்பாடைத் தெரிந்துகொள்ளலாம். புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறையில் துணை ஆய்வாளராகப் பணிபுரியும் இவர், ஆங்கிலம் மற்றும் அறிவியல் ஆசிரியையாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கியவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''படிக்கும்போது எனக்கு அறிவியல் மீது தனிப்பட்ட ஆர்வம் எதுவும் இருந்ததில்லை. ஆனால், அனைத்துப் பாடங்களைப் போலவே அறிவியலிலும் நல்ல மதிப்பெண்கள் வாங்குவேன். அப்போது எங்கள் கல்லூரியில் ஆரம்பித்த 'அறிவியல் மன்ற’த்தின் தலைவியாக என்னை நியமித்தார்கள். அப்போதும்கூட அறிவியல் மீது இந்த அளவுக்கு ஈடுபாடு வரவில்லை.
நான் ஆசிரியப் பணியில் சேர்ந்தபோது புதுடெல்லியில் உள்ள கலாசாரப் பயிற்சி மையத்தில் நடந்த பயிற்சி ஒன்றில் ஒரு மாதம் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கு நடந்த பயிற்சியின் மூலம்தான் அறிவியல் மீதான என்னுடைய பார்வை விரியத் தொடங்கியது. இது எல்லாவற்றையும்விட என்னை அதிகமாகக் கவர்ந்தது டெல்லியில் உள்ள தேசிய அறிவியல் அருங்காட்சியகம்தான். அங்கு இருந்த ஒரு மாதம் முழுவதும் தினமும் மாலை நேரம் அங்கு சென்று பார்க்கத் தொடங்கினேன்'' என்று சொல்லும் ஹேமாவதி, அறிவியல் தொடர்பான சின்னச் சின்ன விளையாட்டுப் பொருட்களைத் தன்னுடைய கைப்பையில் எப்போதும் வைத்திருக்கிறார். மாணவர்களையும் சிறுவர்களையும் எங்கு சந்தித் தாலும் அவர்களுக்கு அதன் மூலம் அறிவியலைச் சொல்லிக் கொடுக்கிறார்.

''அறிவியலைச் சாமானிய மக்களுக்கும் சொல்லித்தர வேண்டும் என்றால் அவர்களுக்கு முதலில் கல்வியைத் தர வேண்டும். இந்த நேரத்தில்தான் கேரளாவில் அனைவருக்கும் கல்வி என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட 'சாஸ்த்ரா’ என்ற அமைப்பைப் பார்த்துவிட்டு இங்கு 'அறிவொளி’ என்ற இயக்கத்தினை ஆரம்பித்தோம். சில காரணங்களால் அது நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால், இந்த இயக்கத்தின் சிறப்பான பணிகளைப் பாராட்டி லண்டனில் இருந்து அளிக்கப்படும் 'கிங்ஸ் சஜாங்’ என்ற விருது எங்களுக்குக் கிடைத்தது. அதன்பின் பள்ளி ஆசிரியர்களுக்குச் செய்முறை விளக்கம், அனைத்துப் பள்ளிகளிலும் அறிவியல் கண்காட்சிகள் என்று நடத்தத் தொடங்கினோம்.

##~## |
- ஜெ.முருகன்
படங்கள்: ஆ.நந்தகுமார்