

''புதுவையைச் சேர்ந்த கலக்கல் காங்கேயனிடம் பேசிக்கொண்டு இருந்தால் நாள் முழுதும் கலகலப்புதான். பட்டிமன்ற நடுவராக இருக்கும் காங்கேயனுக்குப் புதுவையில் ரசிகர்கள் அதிகம்'' இந்தத் தகவலை வாய்ஸ்நாப்பில் பதிந்து இருந்தார் புதுவை வாசகி கிறிஸ்டி. காங்கேயனைச் சந்தித்துப் பேசியதிலிருந்து:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''இந்த ஆர்வம் எனக்கு என் அப்பா, அம்மாகிட்ட இருந்துதாங்க வந்தது. பழைய பாட்டுகளை எல்லாம் அப்பா ரொம்ப அருமையாகப் பாடுவார். அதேபோல் அம்மா நகைச்சுவையாகப் பேசுவாங்க. காலேஜ் முடிச்சு வேலைக்குப் போன பின்னாலேயும் ஆர்க்கெஸ்ட்ராக்களில் பாடிக்கிட்டும் பட்டிமன்றங்களில் பேசிக்கிட்டும் இருந்தேன். அப்போதான் புதுவையில் விசுவின் அரட்டை அரங்கத்தில் பேசுற வாய்ப்புக் கிடைச்சது. அந்த நிகழ்ச்சியில் விசு என்னைக் 'கலக்கல் காங்கேயன்’னு கூப்பிட, நண்பர்களும் 'இந்தப் பேர் நல்லா இருக்கே’னு சொல்ல, அப்புறம் என்ன, கன்டினியூ பண்ணிக்கிட்டேங்க.
பாட்டும் நகைச்சுவையும் கலந்து பட்டிமன்றங்களை நடத்த ஆரம்பிச்சேன். இலக்கியப் பட்டிமன்றம், இன்னிசைப் பட்டிமன்றம்னு இரண்டு விதமான பட்டிமன்றங்கள் நடத்துனேன். இன்னிசைப் பட்டிமன்றத்தில் இசைக்கருவிகளோடு மேடை ஏறுவோம். இரட்டை அர்த்த வசனம், ஆபாசமான பேச்சுகளுக்கெல்லாம் என் நிகழ்ச்சியில் கட்டாயத் தடைதான். நிகழ்ச்சி நடக்கிற இடங்களிலும் ஏராளமான காமெடிகள் நடக்குமுங்க.

##~## |
- ஜெ.முருகன்
படம்: எஸ்.தேவராஜன்
