Published:Updated:

வலையோசை

வலையோசை

வலையோசை

வலையோசை

Published:Updated:
வலையோசை

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்!

வலையோசை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
ரணியில் ஒரு குடும்ப விழாவில் பங்கெடுக்கச் சென்று இருந்தோம். அப்போது நான் என் மகள் குழலியுடன், என் அக்கா வேலை செய்யும் ஆரம்பப் பள்ளிக்குச் சென்றேன் குழந்தைகளுடன் ஒரு மணி நேரம் செலவிடலாம் என்ற யோசனையில். முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஓர் ஆசிரியை, மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்புக்கு ஓர் ஆசிரியை. சுமார் 40 மாணவர்கள் இருப்பார்கள். இரண்டு பழகிய முகங்களைத் தாண்டிப்  புதிய முகங்களைப் பார்த்ததில் அவர்களுக்கு ஆனந்தம். முதலில் அனைவரும் தங்கள் பெயரினை அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது தங்களுக்குப் பிடித்த உணவுடன் சேர்த்துச் சொன்னார்கள். எ.கா: உப்புமா உமாநாத், ஜாங்கிரி ஜானகி.

பலருக்கும் ஆப்பிள்தான் பிடித்த உணவாக இருந்தது. பின்னர் மாணவர்கள் இரண்டு பாடல்கள் பாடிக் களித்த பின்பு ஒரு கதை சொன்னார்கள். குழலி மாணவர்களுடன் கலந்துவிட்டாள். அவர்களுடன் சென்று சத்துணவு ஆயா தந்த முட்டையையும் வாங்கிக்கொண்டு வந்தாள். பெஞ்சின் மீது ஏறி நின்று தனக்குத் தெரிந்த திருக்குறள்களைச் சொல்ல, மாணவர்கள் திருப்பிச் சொன்னார்கள். ரொம்பவும் ரசனையாகக் கழிந்தது பொழுது.  

நண்பர்களே, நேரம் கிடைக்கும்போது அருகில் இருக்கும் பள்ளிக்கூடத்துக்குச் சென்று கொஞ்ச நேரம் செலவழியுங்கள். அது இருவழியில் ஆனந்தத்தைக் கொடுக்கும்!

தனுஷ்கோடியில் ஒரு யாசகர்!

வலையோசை

னுஷ்கோடியின் கடைசி நிலத்தில் ஜீப்பை நிறுத்தினார் நண்பர். இரண்டு கடல்கள் சங்கமிக்கும் இடம். இறங்கியதுமே ஒரு பெரியவர் அருகில் வந்து யாசகம் கேட்டார். பணம் தந்துவிட்டுக் கடலினை ரசித்துக்கொண்டு இருந்தோம். மூன்று நிமிடங்களில் மீண்டும் அவர் வந்து ' என் பொண்டாட்டி பசங்க எல்லாம் கடல்ல போயிட்டாங்க. எனக்கு யாருமே இல்லை.’ எனக் கை நீட்டினார். மீன்டும் பணம் தந்தேன். கடல் பக்கம் திரும்பி நின்றிருந்தேன். இரண்டு நிமிடங்கள் கடந்திருக்கும். மறுபடியும் வந்து சொன்னதையே திருப்பிச் சொல்லி யாசகம் கேட்டார். இரண்டு நிமிடங்கள் முன்பு பார்த்த என்னை அவருக்குச் சுத்தமாக ஞாபகம் இல்லை. மனம் மிகுந்த பாரமாக இருந்தது. கடல் அன்னை மீது வருத்தம் கூடிக்கொண்டது. நான் அங்கிருந்து புறப்படும்வரை கைகூப்பியபடியே நின்றுகொண்டு இருந்தார் அவர்!

பூனைப் பிரசவம்!

வலையோசை

புத்தக அலமாரியின் கீழே இருந்த இதழ்கள் சிதறிக்கிடந்தன. அங்கே ஒரு பூனையைக் காலையில் பார்த்ததாக அம்மா சொன்னார்கள். அன்றைய இரவு, அதே இடத்தில் ஒரு பூனை அமர்ந்து இருந்தது. அதட்டியும் குச்சி எடுத்து வந்து துரத்தியும் அந்தப் பூனை நகரவில்லை. பின்னர்தான் புரிந்தது, அது குட்டிகளை ஈன்றெடுக்க இடம் தேடி அமர்ந்திருக்கிறது என்று. அறைக் கதவுகளைத் திறந்துவிட்டோம். காலையில் பார்த்தபோது நான்கு குட்டிகள் பிரசவித்திருந்தது அந்தப் பூனை. குட்டிகளைத் தூக்கிச் சென்று மொட்டை மாடியில் பாதுகாப்பாக வைத்தோம். ஆனாலும் பெரிய பூனை அங்கிருந்து இடம் மாற்றி, செருப்புகள் வைக்கப்பட்டு இருக்கும் பெட்டியில் வைத்து இருந்தது. நான்கு நாட்களில் அந்தப் பூனை தன் குட்டிகளுடன் வேறெங்கோ இடம் மாறிவிட்டது!  

அவர்களை ஏமாற்ற முடியாது!

வலையோசை

குழந்தைகளை உறங்கவைப்பது ரொம்ப ரொம்பக் கஷ்டம்.

நேற்று இரவு என் மகள் குழலியை  உறங்கவைக்க நான், என் அம்மா, என் மனைவி மூவரும் மிகவும் சிரமப்பட்டோம். நான் என் அம்மாவின் மடியில் தலைவைத்து 'நான் எங்க அம்மா மடியில் தூங்கறேனே' என்றேன். அவளும் அவளுடைய அம்மா மடியில் தலைவைத்து 'நானும் எங்க அம்மா மடியில தூங்கறேனே' என்றாள்.

வலையோசை

அம்மா தலை கோத... 'எங்கம்மா என் தலை கோதறாங்களே' என்றேன்.

அவளும் அவளுடைய அம்மாவைப் பார்த்தாள் 'எனக்கும் எங்கம்மா தலை கோதறாங்களே...'

'எங்கம்மா எனக்கு குருவிக் கதை சொல்றாங்களே' என்றேன். அவளும் அப்படியேச் சொன்னாள். சரி ஒர்க்-அவுட் ஆகுது என ''நான் கண்ணை மூடுறேனே, தூங்கறேனே, குறட்டைவிடுறேனே'' என்றேன், அவளும் அப்படியேச் சொன்னாள். சிறிது நேரத்தில் எல்லாமே மாறியது.

திடீரென எழுந்து உட்கார்ந்துகொண்டு 'எங்கம்மா மடி மேல உக்காந்து இருக்கேனே' என்றாள். மூவருக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism