Published:Updated:

நிஜம் நிழலானபோது...

இது நம்ம ஊரு ஸ்பெஷல் - திருவண்ணாமலை

நிஜம் நிழலானபோது...

வெங்கடேசன், வங்கிக் காசாளர்:

''நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போதுதான் முதன் முதலாகப் புகைப்படம் எடுத்துக்கிட்டேன். அதுவும் ஸ்கூலில் சக மாணவர்களோட குரூப் போட்டோ எடுத்துக்கிட்டதுதான்!''

கருணா, குறும்பட இயக்குநர்:

''எனக்கு நினைவு தெரிஞ்சு நான் எடுத்துக்கிட்ட முதல் போட்டோ ஏழாம் வகுப்புப் படிக்கும்போது எடுத்துக்கிட்டதுதான். அப்போ பாகவதர் மாதிரி நீளமா முடி வளர்த்திருப்பேன். அந்த கெட்டப்போடு அப்போ திருவண்ணாமலையிலேயே ஃபேமஸான ஸ்டுடியோவான பெல் ஸ்டுடியோவுக்குப் போய் எடுத்துக்கிட்டேன்!''

விஜயகுமாரி, பள்ளித் தலைமை ஆசிரியை:

''என் கல்யாணம் முடிந்த கையோடு கணவருடன் சென்று ஸ்டுடியோவில் கறுப்பு-வெள்ளை புகைப்படம் எடுத்துக்கிட்டதுதான் நான் முதன்முதலா எடுத்துக்கிட்ட போட்டோ. அடிக்கடி அந்த போட்டோவை எடுத்துப் பார்த்து சந்தோஷப்பட்டுக்குவேன்!''

ஜெயந்தி, குடும்பத் தலைவி:

''நான் ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போது என் வீட்டில் சேஷாத்திரி சுவாமிகள்னு ஒரு சுவாமியோட பிறந்த நாள் விழா கொண்டாடினோம். அப்போ சிங்கப்பூரில் இருந்து வந்து இருந்த ஒரு நண்பர்தான் என்னை முதன்முதலா போட்டோ எடுத்தார். அந்த முதல் புகைப்படத்தை இப்பவும் பாதுகாத்துட்டு வர்றேன்!''

##~##
அசோக்குமார்,
கல்லூரி மாணவர்:

''நான் சிறுவனா இருக்கும்போது ஒரு வெளிநாட்டுப் புகைப்படக்காரர் என்னை போட்டோ எடுத்ததுதான் என்னோட முதல் புகைப்படம். முதல் போட்டோவே ஒரு ஃபாரினர் எடுத்தது ரொம்பவே ஸ்பெஷல்!''

- கோ.செந்தில்குமார்
படங்கள்: பா.கந்தகுமார்.

அடுத்த கட்டுரைக்கு