Published:Updated:

”சாராயம் குடிக்கிறது கொலைக் குத்தத்துக்கும் மேலே!”

”சாராயம் குடிக்கிறது கொலைக் குத்தத்துக்கும் மேலே!”

”சாராயம் குடிக்கிறது கொலைக் குத்தத்துக்கும் மேலே!”

”சாராயம் குடிக்கிறது கொலைக் குத்தத்துக்கும் மேலே!”

Published:Updated:
”சாராயம் குடிக்கிறது கொலைக் குத்தத்துக்கும் மேலே!”

ண்ணையும் மனிதர்களையும் மலடு ஆக்கும் மரபணு மாற்று விதைகளுக்கு எதிராகக் குரல் உயர்த்தும் போராளிகளில் ஒருவர், அறச்சலூர் செல்வம். இயற்கை விவசாயத்தைத் தமிழகத்தில் பரவலாக்க முயற்சி செய்துகொண்டு இருப்பவர். தன் சொந்த ஊரான சேலம் மாவட்டம், அய்யங் காட்டூர் பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

”சாராயம் குடிக்கிறது கொலைக் குத்தத்துக்கும் மேலே!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

''சங்ககிரிக்குப் பக்கமா இருக்கிற அய்யங்காட்டூர் எனக்கு அள்ளிக் கொடுத்தது ஏராளமுங்க. கிழக்குத் தொடர்ச்சி மலை அடிவாரக் கிராமங்களில் இதுவும் ஒண்ணு. விவசாயம்தான் இங்க பிரதானம். மழைக் காலங்கள்ல கிணத்து, ஊத்துத் தண்ணியைவெச்சு விவசாயம் செய்வாங்க. திருச்செங்கோடு சம்பா, சீரக சம்பா, கார் நெல் அப்படினு நெல் சாகுபடி கொஞ்சம் குறைவுதான். அதனால, ராகி, கம்பு, சோளம் போன்ற தானியங்களை அதிகமாப் பயிரிடு வாங்க. ஒரே தோட்டத்திலேயே எள், ஆமணக் குனு ஏழெட்டு தானியங்களைக் கலந்து பயிர் பண்ற கலப்புப் பயிர்ச் சாகுபடியும் அதிகமா நடந்துச்சு. ஒரு பயிர் ஏமாத்துனாலும், இன் னொரு பயிர் காப்பாத்தும். ஆனா, இன்னைக்கு ஒரே பயிரைச் சாகுபடி மட்டுமே பண்ற அளவுக்கு வேளாண்மை சுருங்கிப் போச்சு.

20 வருஷத்துக்கு முன்னால எல்லாம் எங்க உணவுல அரிசியோட ஆதிக்கம் கிடையாது. களிச் சோறு, கம்பஞ் சோறு முக்கிய உணவா இருந்துச்சுங்க. மதிய வேளையிலே பழைய சோத்தைக் கரைச்சுக் கீரை, கடலைக் கூட்டோட சேர்த்துக் குடிப்போம். வீட்டுல வாழை மரம் குலை தள்ளினா அந்த வாழைத் தார்களை விக்கிறது இல்லைங்க. வீட்டுக்கு நடுவுல உத்தி ரத்துல கயித்துல கட்டித் தொங்கவிட்டுடு வோம். போறப்பவும் வர்றப்பவும் பிய்ச்சுத் தின்னு ரெண்டே நாள்ல வாழைத் தாரைக் காலி செஞ்சிடுவோமுங்க.

”சாராயம் குடிக்கிறது கொலைக் குத்தத்துக்கும் மேலே!”

எங்க தாத்தாதான் எனக்கு ஏர் ஓட்டக்கத்துக் கொடுத்தார். ஊர்ல இருக்குற பெரிய ஏரியில் மழை பேஞ்ச தண்ணி ஏழெட்டு மாசத்துக்கு நிக்கும். நாங்க குளிச்சு ஆட்டம் போடுறது அந்த ஏரியிலதான். சின்ன ஓடைகள்லகூட ஆறேழு மாசத்துக்கு நீரோட்டம் இருக்கும். தோட்டம் முழுக்க வளர்ந்து நிக்கிற செங்கரும்பை வளைச்சு ஒடிச்சு தின்னுபோட்டு இந்தத் ஏரியில குளிச்சுப் பொழுதைக் கழிப்போம். பெரியவங்களுக்கும் பொழுதுபோக்குன்னா  இப்படிதான் இருந்துச்சு. அதனால வேற எந்தக் கெட்ட பழக்கமும் ஊரோட ஒட்டலை. அப்போ சாராயம் குடிக் கிறது எல்லாம் கொலைக் குத்தத்துக்கும் மேல. அப்படி யாராச்சும் குடிச்சுட்டா, ஊர்ப் பெரியவங்களுக்குப் பயந்துக்கிட்டு ரெண்டு நாளைக்கு ஊருக்குள்ளவே வர மாட்டாங்க.

மாரியம்மன் கோயில் திருவிழா வந்தா கபடி, கயிறு இழுத்தல், வழுக்கு மரம் ஏறுதல், ஓட்டப் பந்தயம்னு விளையாட்டுப் போட்டி நடத்து வோம். அடுத்ததா ஊர் அமர்க்களப்படுறது தைப் பொங்கலுக்குத்தான். அதுலேயும் மாட்டுப் பொங்கலை ரொம்ப விமரிசையாக் கொண்டாடுவோம். மாடு, கன்னுகளைப் பெரிய ஏரிக்கு ஓட்டிட்டுப் போய்த் தேய்ச்சுக் குளிக்கவெச்சு, அப்புறம் பொங்கல் ஊட்டு வோம்.  ஊர்ல ஏதாச்சும் பிரச்னைனா  பஞ்சாயத்து கூடும். அதில் பந்திப் பாறை மாமாதான் முக்கியஸ்தர்.  வாட்டசாட்டமா இருக்கிற அந்த மாமா சொல்ற பேச்சுக்கு ஊரே கட்டுப்படும். எங்க ஊரின் அடையா ளம்னா ரெண்டு பேர். ஒருத்தர், பேராசிரி யர் சுந்தரம். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர் கஷ்டப்பட்டு உழைச்சுமுன்னே றுனவர். கோயில் நிகழ்வுகளுக்கு தப்படிக் கிறது இவருடைய அப்பாவோட வேலை. ஒரு முறை அவருக்கு உடம்பு சுகம் இல்லா மப் போக, பேராசிரியர் சுந்தரம்  வந்து தப்படிச்சார். இன்னொருத்தர் தியாகராஜன் ஐ.ஏ.எஸ். மிக நேர்மையான அதிகாரினு பேர் வாங்கிய நல்ல மனிதர்.  நல்ல பழக்கங் களோட சேர்த்து 'உழவே வாழ்க்கை’னு எனக்குக் கத்துக் கொடுத்தது அய்யங்காட்டூர் தான். என் ஊருக்கு நன்றி!''

”சாராயம் குடிக்கிறது கொலைக் குத்தத்துக்கும் மேலே!”

சந்திப்பு: எஸ்.ஷக்தி
படங்கள்: க.ரமேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism