Published:Updated:

நாட்டிலொரு நாடகம் நடக்குது ஏலேலங் கிளியே!

நாட்டிலொரு நாடகம் நடக்குது ஏலேலங் கிளியே!

ன்றாடம் நாட்டில் நடக்கும் விஷயங்களைக் கடைக்கோடி மக்கள் வரைக் கும் கொண்டு சேர்ப்பதே நாடகம். நாடு, அகம் என்ற வார்த்தைகளின் முழு வடிவம்தான் நாடகம். அப்படிப்பட்ட நாடகக் கலை அழிந்து வரும் சூழலில், சேலத்தில் நவீன முறையில் புதுப்பொலிவுடன் நடந்த நாடகத்துக்குப் பொது மக்களிடம் ஏக வரவேற்பு!

நாட்டிலொரு நாடகம் நடக்குது ஏலேலங் கிளியே!
##~##

பிரமாண்டமான மூன்று மேடைகள், கலர்ஃபுல் லைட்டிங் செட்டப்கள், ஆறு உதவி இயக்குநர் வாக்கி டாக்கியில் காட்சிகளை ஒருங்கிணைக்க, நாடகத்தை நவீன தளத்தில் அறி முகம் செய்துகொண்டு இருந்தார் நாடக இயக்கு நர் முத்துகிருஷ்ணன். நாடகம் நடந்த இடம், சேலம் இரும்பாலை அருகே இருக்கும் பழையூர் கிராமம். நாடகத்தின் தலைப்பு, 'கர்ணனும் கண்ணனும்’ சினிமாவுக்குச் சற்றும் குறைவில்லாத இசையை அளித்து இருந்தார் இசை அமைப்பாள ரான கும்பகோணத்தைச் சேர்ந்த பாபு. நாடகத் தின் முதல் காட்சியே ஷங்கர் பட எஃபெக்ட். பாண்டவர்கள் தங்கி இருக்கும் அரக்கு மாளிகைக்கு எதிரிகள் தீ வைக்க, மாளிகை பற்றி எரி கிறது. பாண்டவர்கள் தீயில் பாய்ந்து, பாதாளச் சுரங்கம் வழியாகத் தப்பிக்கிறார்கள். அடுத்த காட்சியில் இடது புற மேடையில் இருந்து கர்ணன் எய்த அம்பும், வலது புற மேடையில் இருந்து அர்ச்சுனன் எய்த அம்பும் அந்தரத்தில் ஒன்றோடு ஒன்று மோதித் தீப்பொறி பறக்க, பார்வையாளர்கள் பிரமாண்டமான சண்டைக் காட்சியைக்கண்டு சிலிர்த்துப் போனார்கள்.

நாடக இயக்குநர் முத்துகிருஷ்ணனிடம் பேசினேன். ''நாடகம் என்னுடைய குலத் தொழில். இதைவிட்டால் எனக்கு வேறு எதுவும் தெரியாது. 15 ஆண்டுகளுக்கு முன்பு கல்லாங்குத்து, களரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட நாடகக் குழுக்கள் இருந்தன. அப் போது எல்லாம் மாதத்தில் 25 நாட்கள் பிசியாக இருப்போம். கேரளா, கர்நாடகா போன்ற மாநி லங்களில் இருந்து நாடகங்கள் நடத்த அழைத் துச் செல்வார்கள். அதெல்லாம் ஒரு காலம். ஒரு கட்டத்தில் சீண்டுவார் இல்லாமல் போனது நாடகக் கலை.

நாட்டிலொரு நாடகம் நடக்குது ஏலேலங் கிளியே!

இன்று கல்லாங்குத்தில் ஒரு நாடகக் குழு வாவது இருக்குமா என்றால் சந்தேகம்தான். என்னைப் போன்ற சில நாடகக் கலைஞர்கள் மட்டுமே தொழிலை விட்டுவிட மனசே இல்லாமல்  தொடர்ந்து நாடகங்களை நடத்தி வருகிறோம். இந்த நிலையில்தான் என்னைச் சந்தித்த ஒருவர், 'அவருடைய கிராமத்தில் மிகச் சிறப்பாக நாடகம் ஒன்றை நடத்த வேண்டும். அதற்கு எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை’ என்றார். நல்ல முறையில் இந்த வாய்ப்பை பயன்படுத்திப் பேர் எடுக்க நினைத்தேன். இன்றைய காலகட் டத்துக்கு  ஏற்ப நவீன முறையில் மூன்று மணி நேரம் நாடகம் நடத்த முடிவுசெய்தேன்.

அதற்கு ஏற்ப ஸ்க்ரிப்ட் தயார் செய்தேன். ஒவ்வொரு காட்சியும் மாறும்போது, அடுத்த காட்சியில் தாமதம் ஏற்படாமல் இருக்க மேடையிலும் மேடையின் பேக் - டிராப்பிலும் லைட்டிங்கிலும் சில மாற்றங்களைச் செய்தேன். நாடகத்தின் பின்னணியில் இயங் கும் ஆறு உதவி இயக்குநர்களும் வாக்கி டாக்கி மூலம் காட்சிகளை ஒருங்கிணைத்தார்கள்.

நாட்டிலொரு நாடகம் நடக்குது ஏலேலங் கிளியே!

நாடகம் நடத்துவதற்கு ஒரு வாரம் முன்னதா கவே இங்கு வந்து லொகேஷன் பார்த்து மேடை அமைத்தோம். மேடையின் பக்கவாட்டிலும் அடியிலும் பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி உண்மையான சுரங்கம் போலவே வடிவமைத்தோம். அரக்கு மாளிகை செட்டிங் போட்டுஉண் மையிலேயே அதை எரியவைத்தோம். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, காவல் துறை மற்றும் தீயணைப்புத்துறை யிடம் அனுமதி பெற்று, மூன்று தீ அணைக்கும் வாகனங்களையும் தயார் நிலையில் வைத்து இருந்தோம். இதற்கே மூன்று லட்சம் ரூபாய் செலவாகிவிட்டது. காலத்துக்கு ஏற்ப நாடகக் கலை தன்னை உருமாற்றிக்கொள்ளாததுதான் அதன் அழிவுக்குக் காரணம். இனி அப்படி நடக் காது. எங்கள் குலத் தொழிலான நாடகக் கலையை மீட்டு எடுப்பதே என்னுடைய லட்சியம். தமிழர்களின் பெருமைகளை உணர்த்தும் சரித்திர நாடகங்களையும் சேர, சோழ, பாண்டியர்கள் தொடர்பான நாடகங்களையும் நவீன கதைத் தளத்தில் விரைவில் கொண்டுவருவேன்!'' என்கிறார் உற்சாகமாக!

நாட்டிலொரு நாடகம் நடக்குது ஏலேலங் கிளியே!

- வீ.கே.ரமேஷ்
படங்கள்: க.தனசேகரன்

அடுத்த கட்டுரைக்கு