Published:Updated:

என் ஊர் - அப்பவே நான் போலீஸ் !

இ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம்

என் ஊர் - அப்பவே நான் போலீஸ் !

இ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம்

Published:Updated:
என் ஊர் - அப்பவே நான் போலீஸ் !
##~##

தமிழ்நாடு காவலர் பயிற்சிப் பள்ளித் தலைவர் ஐ.ஜி. மாசானமுத்து ஐ.பி.எஸ். தன் சொந்த ஊரான வெள்ளூர் பற்றிய மலரும் நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சுமார் மூணு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது நான் பிறந்த வெள்ளூர் கிராமம். திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடக்கும் சூரசம்ஹார விழாவுக்காக  வெள்ளூர்ல இருந்து குதிரையில் 'வேல்’கொண்டு போயிருக்காங்க. அதனால, 'வேலூர்’ங்கிற பேரும் எங்க கிராமத்துக்கு உண்டு. அப்படி வேல்கொண்டு போறதுல ஏதோ தடை ஏற்பட்டதும் எங்கள் கிராமத்திலேயே சூரசம்ஹாரம் நடத்த ஆரம்பிச்சிட்டாங்க. அது இன்னைக்கு வரைக்கும் தொடருது.  எங்க வெள்ளூர் கிராமம் கிழக்கே சிவன் கோயில், மேற்கில் செண்பக விநாயகர் கோயில், தென் திசையில் ஆழியங்கைப் பெருமாள், வடக் கில் வேலூர் அம்மன்னு  நாலாபுறமும் கோயில்கள் அமைந்த கிராமம். 

என் ஊர் - அப்பவே நான் போலீஸ் !

 நான்கு திசையிலும் பச்சைப்பசேல்னு கழனிங்க உண்டு. மொத்தம் இரண்டாயிரம் தலைக்கட்டுகள் (குடும்பங்கள்) நெல், வாழை, விவசாயத்தை நம்பியே இருந்தன. பக்கத்தில் உள்ள புதுக்குடி, ஆதிச்சநல்லூர், மணவராயநத்தம் எனப் பல சின்னச் சின்னக் கிராமங்களுக்கும் எங்க வெள்ளூர்தான் தாய்க் கிராமம். ஊரில் கம்மாய்க்கரை ஓரத்தில் கடுக் காய் மரங்கள் அடர்ந்து இருக்கும் பகுதியில் குயவர்கள் வசித்துவந்தனர். குயவர் இனத்துப் பெண்கள் கடுக்காய் மரத்தின் காய்ந்த விறகு களைப் பொறுக்க வருவாங்க. மரம் வெட்டிப் பொழச்ச பெண்களும் எங்க ஊரில் உண்டு. ஒரே வெட்டில் மரம் இரண்டு துண்டாகிவிடும். அரிவாளை லேசாக மரத்தில் கொத்தி வெச்சாக் கூட, வேற யாராலயும் அதைப் பிடுங்க முடி யாது. அந்த அளவுக்கு ரொம்ப உறுதியான, வீரமான பெண்கள் ஊர்ல இருந்தாங்க.

எங்கள் ஊரில் ஊராட்சித் துவக்கப்பள்ளி மற்றும் ஸ்ரீ சுந்தர விநாயகர் பள்ளின்னு மொத் தம் ரெண்டு பள்ளிக்கூடம் இருந்தது. நான் ஸ்ரீசுந்தர விநாயகர் பள்ளியில்தான் படித்தேன். அந்தப் பள்ளியில், தரையில்  மணலைப் பரப்பி வெச்சு மாணவர்கள் விரல் பிடிச்சி ஆனா, ஆவன்னா எழுதச் சொல்லிக்கொடுப்பாங்க. நான் அப்படிப் படிச்சவன்தான். எங்க வாத்தி யார் காளிமுத்துப் பாண்டியன் சிறந்த புலவர் மட்டும் அல்ல; சிறந்த ஆன்மிகவாதியும்கூட. தினமும் தேவாரம், திருவாசகம், சாமி கதைகள் எல்லாம் சொல்வார். அப்போ கேட்ட தேவா ரம், திருவாசகம் எல்லாம் இப்பவும் அழியாம மனசுல பதிஞ்சு இருக்கு. மார்கழி மாசம் வந்துட்டாலே நானும் என் நண்பர்களும் உற்சா கம் ஆகிடுவோம். இரவு உணவைச் சாப்பிட்டுட்டு எல்லாரும் போய் பள்ளிக்கூடத்திலேயே தூங்கி டுவோம். அதிகாலை 4 மணிக்கு வாத்தியார்கள் எங்களை எழுப்பிவிடுவாங்க. பக்கத்துக் குளத்துல குளிச்சுட்டு, நெத்தியில விபூதி பூசி கிட்டு, வாத்தியார் பின்னாடி பஜனை பாடிட்டே வீதிகளில் போவோம்.

என் ஊர் - அப்பவே நான் போலீஸ் !

ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் கல்லூரியில்தான் புகுமுக வகுப்புப் படிச்சேன். கல்லூரிக்கு வீட்டுல இருந்து ஆறு கிலோ மீட்டர் தூரம் நடந்தேதான் போவேன். சனி, ஞாயிறு லீவுல வெள்ளூர்ல இருந்து பொன்னங்குறிச்சிக்கு மாடு மேய்க்கப் போவேன். மாடு களை முன்னாடி போகவிட்டு, பின்னாடி நான் கையில் புத்தகத்தை வெச்சிப் படிச்சிகிட்டே நடப்பேன். அறு வடை நேரத்தில் களத்துல நெல்லுக்குக் காவலாக இருப் பேன். வைக்கோல் மலை போல் குவிஞ்சி இருக்கும். அந்த வைக்கோலுக்கு உள்ளே ஒளிஞ்சிக்கிட்டு திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடுவோம். அந்த விளையாட்டுல எப்பவுமே நான்தான்  போலீஸ்.

என் ஊர் - அப்பவே நான் போலீஸ் !

சிவன் கோயில் மாசித் திருவிழா பத்து நாட்கள் நடக் கும். அந்தப் பத்து நாட்களும் தினமும்  நாடகங்கள் நடத்துவாங்க. விடிய விடிய நாடகம் நடக்கும். கண்ணுல தூக்கம் இருந்தாலும் விடிய விடியக் கண் முழிச்சு, நாட கம் பார்ப்பேன். எங்க ஊர்ல வீட்டுக்கு வீடு சிலம்பு இருக்கும். ஏன்னா, எல்லாருக்குமே கம்பு சுத்தத் தெரி யும். பத்தாம் நாள் திருவிழா அன்னைக்குத் தேர் இழுப்போம். அப்புறம், ஊர் மக்கள் அத்தனை பேரும் கோயில் முன்னாடி நின்னு கம்பு சுத்துவாங்க. பார்க் கவே ரொம்ப அழகா இருக்கும். கம்மாய்க்கரையில பெரிய ஆலமரம் ஒண்ணு உண்டு. இந்த மரத்துக்கு வயசு 100-க்கு மேல் இருக்கும். பகல் நேரத்துல மரத்தோட கிளைகள்ல ஏறி உட்கார்ந்து படிப்போம். எங்க ஊரில் பல சாதி மக்க ளும் வசிச்சாங்க. இருந்தாலும்  சாதியின் பெயரால் யாரும் சண்டை போட்டதே இல்லை. எல்லாச் சாதி மக்களும், மத மக்களும் ஏற்றத் தாழ்வு இல்லாம வாழ்றதுதான் எங்க ஊர் ஸ்பெஷல்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism