Published:Updated:

இயற்கையே இறைவன்... மரங்களே வரங்கள் !

- இ.கார்த்திகேயன்,படங்கள்: ஏ.சிதம்பரம்

இயற்கையே இறைவன்... மரங்களே வரங்கள் !

- இ.கார்த்திகேயன்,படங்கள்: ஏ.சிதம்பரம்

Published:Updated:
##~##

இயற்கையே இறைவன்’ என்ற வாசகத்தினைத் தங்கள் வாழ்க்கையில் பின்பற்றி வருபவர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா

தூத்துக்குடி மாவட்டம், கீழ நாலு மூலைக்கிணறு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும்விழா, பிளாஸ்டிக் ஒழிப்பு  மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்பு உணர்வு என முப்பெரும் விழாவுக்குப் 'பசுமைப் புரட்சி நண்பர்கள்’ அழைத்து இருந்தனர். மேலமாநாடு, குரங்கன்தட்டு, கருங்கடல், முத்துநகர், மறவன்விளை, மேல நாலு மூலைக்கிணறு, அங்கமங்கலம், ஆறுமுகநேரி, தாய்விளை, எழுவரை முக்கி, தும்பு ஆபிஸ், பாலத்தூர், செம்யூர் எனச் சுமார் 15 கிராமங்களில் பிளாஸ் டிப் பயன்பாட்டை நிறுத்தியவர்கள்தான் இந்த 'பசுமைப் புரட்சி நண்பர்கள்’. அவர்களின் கொள்கைதான் 'இயற்கையே இறைவன்!’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இயற்கையே இறைவன்... மரங்களே வரங்கள் !

நிகழ்ச்சியில் வேம்பு, முருங்கை, நாவல், வாகை, நெல்லி எனப் பலவகையான 300 மரக் கன்று கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. 'பசு மைப் புரட்சி நண்பர்கள்’ இயக்கத்தின் செய லாளர் முருகன் என்ற பசுமைவேந்தன் நம்மிடம் பேசும்போது ''முழுக்க முழுக்கக் கல்லூரிமாணவ நண்பர்களை உறுப்பினர்களாக் கொண்டதுதான் இந்த இயக்கம். நான் டீச்சர் டிரெய்னிங் படிச்சிட்டு இருக்கும்போதே குப்பைகளைச் சுத்தம் செய்றது, மரம் வளர்ப்பது எனச் சமூக சேவைகளைச் செய்வேன். எனக்குச் சுற்றுச்சூழல் மேல  ஆர்வம் அதிகம். சுற்றுச்சூழல் பற்றிய புத்தகங்களையும் மாசுபடுவதைத் தடுக்கும் முறைகள் குறித்தும் நிறைய படிச்சிருக்கேன். அப்படித்தான் இயக்கம் ஆரம்பிக்கிற எண்ணம் தோணுச்சு. காலேஜ்ல பி.ஏ. சேர்ந்ததும் என் ஐடியாவை நண்பர்கள்கிட்டச் சொன்னேன். கொஞ்சம் கொஞ்சமா மாணவ நண்பர்கள் சேர ஆரம்பிச்சாங்க. மதியம் 2 மணிக்கு காலேஜ் முடிஞ்சதும் சைக்கிள்ல ஒவ்வொரு கிராமமாப் போயி ஊர்த் தலைவர்கிட்ட பிளாஸ்டிக்கின் தீமை மற்றும் எப்படிப் பிளாஸ்டிக்கைத் தவிர்க்கிறதுங்கிறதைப் பற்றியும் எடுத்துச் சொல்வோம். அப்புறம், தலைவர் ஊர்க் கூட்டத்துல எங்களைப் பேசச் சொல்வார். கிராமத்துல குப்பைகளைக் குறிப்பிட்ட இடத்தில் கொட்ட அறிவுறுத்துவோம். 15 நாட்களுக்கு ஒரு தடவை எங்க உறுப்பினர்கள் அந்தக் குப்பையை அப்புறப்படுத்துவோம். இதுபோக அந்தக் கிராமம் முழுக்க மரங்கள் நட்டு பராமரிச்சுக்கிட்டு இருக்கோம். பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்த கிராமங்களில் 'இது பிளாஸ்டிக்கைத் தடை செய்த கிராமம்’னு  டிஜிட்டல் போர்டுவைக்கிறோம்.

இயற்கையே இறைவன்... மரங்களே வரங்கள் !

இன்னைக்குச் சுற்றுச்சூழல் ரொம்ப மோசமா இருக்குது. கடலில் கலக்கும் குப்பைகளில் 80 சதவிகிதம் பிளாஸ்டிக் குப்பைகள்தான். சமீபத் தில் பிரான்சில் 75 ஆயிரம் கிலோ எடைகொண்ட மிகப் பெரிய திமிங்கலம் இறந்து கரை ஒதுங்கியது. திமிங்கலத்தின் உடலைப் பரிசோதனை செய்து பார்த்ததில் அதன் குடலில் சுமார் 50 ஆயிரம் கிலோ எடை அளவுக்குப் பிளாஸ்டிக் பைகளும், கை உறைகளும் காணப்பட்டன. நாம் அலட்சி யமாக வீசி எறியும் பிளாஸ்டிக் பைகள், விலங்குகளையும் அபூர்வ மான கடல் வாழ் உயிரினங்களையும் காவு வாங்கிவிடுகிறது. ஜம்மு காஷ்மீர், சிக்கிம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் பிளாஸ்டிக் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலை எல்லா மாநிலங்களிலும் வர வேண்டும். பிளாஸ்டிக் அபாயத்தில் இருந்து கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கக் காடுகளில் பிளாஸ்டிக்பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட்டது போல், கடற்கரைப் பகுதிகளிலும் தடைவிதிக்க வேண்டும்.

இயற்கையே இறைவன்... மரங்களே வரங்கள் !

சுற்றுச்சூழல் தொடர்பாக படித்தவர்களைவிடப் பாமர மக்களிடம் கூறினால்தான் கருத்துகள் வேகமாகப் பரவும். இயற்கையே நமக்கு இறைவன். ஒவ்வொரு மரமும் நமக்கு வரம் என்பதை நாம் கருத்தில் கொண்டால் அழகான உலகத்தை அடுத்த தலைமுறைக்குப் பரிசளிக்கலாம்!'' என்று முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism