Published:Updated:

ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி !

என்.சுவாமிநாதன் ,படங்கள்: ரா.ராம்குமார்

ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி !

என்.சுவாமிநாதன் ,படங்கள்: ரா.ராம்குமார்

Published:Updated:
##~##

நாகர்கோவில் ராமன்புதூர் சர்ச் அன்று சந்தோஷத்திலும் கொண்டாட்டத்திலும் களைகட்டி இருந் தது. பச்சை நிறச் சேலை கட்டிய பெண்களும், கோட் அணிந்த ஆண்களும் கும்பல் கும்பலாக நின்று மலர்ந்த முகத்தோடு போட்டோ எடுத்துக்கொண்டார்கள். 22 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து போன குடும்ப உறவுகளின் இணைப்பு விழா அது. ஒரே ஊரில் இருந்தாலும் தங்க ளுக்குள் பேசிக்கொள்ளாமல் பிரிந்து இருந்தவர்களை இப்போது பேசவைத்திருப்பது ஃபேஸ்புக்.

நாகர்கோவில் அருகே உள்ள பள்ளம் என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் சூசைமாணிக்கம், மேரியம்மாள் தம்பதியினர். சிறுவயதிலேயே கிராமத்தைவிட்டு நாகர்கோவில் டவுனுக்குப் பிழைப்பதற்காக வந்தவர்களுக்கு ஒன்பது குழந்தைகள். இந்த வாரிசுகள் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் 22 ஆண்டுகளுக்கு முன் பிரிந்துவிட்டார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு சூசைமாணிக்கம் இறந்த போதுகூட இறுகிய முகத்துடன் வந்தவர்கள் இறுதி அஞ்சலி செலுத்திவிட்டுத் தங்களுக்குள் பேசிக்கொள்ளாமலேயே சென்றுவிட்டார்கள். இவர்களின் காயத்துக்கு ஃபேஸ்புக் மூலம் மருந்து தடவி இருக்கிறது காலம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி !

இந்த நிகழ்வைப் பற்றிப் பேசிய சூசைமாணிக்கத்தின் பேரன் டாக்டர் ஸ்காட், ''என்னோட தாத்தா சூசைக்கு மரிய ஸ்டெல்லா, ராஜம், ஜெசி, பேபி, பாபு, ஜோதி, ரதி, ராஜி, ஷீலான்னு ஒன்பது குழந்தைங்க.  இப்ப உயிரோட இருக்குற ஏழு பேரும் மற்றும் ஒன்பது பேரின் வாரிசுகளும் இங்கே கூடி இருக்கோம். ஏதோ கோபத்துல இத்தனை வருடம் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசாமலே இருந்துட்டோம். உறவுக்காரங்களோட கல்யாண வீட்டுல சந்திக்கும்போது எல்லாம் ரொம்ப தர்மசங்கடமா இருக்கும். என்ன பண்றதுனு யோசிச்சேன். நானும் என் உறவினர் பெர்லின் ராஜேஷ§ம் சேர்ந்து எங்க ஃபேமிலிக்குன்னு ஒரு குரூப் ஆரம்பிச்சோம்.  

எங்க குடும்பத்துல இருந்து யார் எல்லாம் ஃபேஸ்புக்ல இருக்காங்கன்னு தேடி, ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத் தோம். சில பேர் கடைசி வரைக்கும் எங்க அழைப்பை ஏத்துக்கலை. சில பேர் ரெண்டு, மூணு மாசம் கழிச்சு ஏத்துக்கிட்டாங்க. அப்படி, இப்படின்னு ஒருவழியா ஒன்பது குடும்பத்துல இருந் தும் ஓரளவுக்கு உறவினர்களை உறுப்பினர்கள் ஆக்கிட்டோம். அப்புறம் எல்லோர் கூடவும் சாட் செய்து உறவைப் புதுப்பிச்சோம். அப்போ தான் ஒரே இடத்துல எல்லாரும் சந்திக்கலாம்கிற ஐடியா வந்து, இதோ சந்திச்சிட்டோம்!'' என் றார் உற்சாகமாக.

ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி !

ஆட்டம் பாட்டம், விளையாட்டுப் போட்டிகள் எனக் குதூகலமாக இருந்தார்கள் அனைவரும். சூசைமாணிக்கத்தின் மூத்த மகள் மரிய ஸ்டெல்லாவும், கடைசி மகள் ஷீலாவும் கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்திப்  பாசத்தைப் பகிர்ந்துகொண்டு இருந்தார்கள். மரிய ஸ்டெல்லா நம்மிடம், ''எனக்கும் ஷீலாவுக்கும் 21 வயசு வித்தியாசம். அவளுக்கு ரெண்டு வயசாகும்போதே, எனக்குக் கல்யாணம் முடிஞ்சு மாப்பிள்ளை வீட்டுக்குப் போயிட்டேன். ஷீலா எனக்கு இப்பவும் சின்னப் பொண்ணுதான்!' என்றார் நெகிழ்ச்சியாக.

ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி !

ஒட்டுமொத்தக் குடும்ப உறுப்பினர்களையும் கலங்க வைத்துக் கலகலப்பூட்டி அடுத்த சந்திப்பு எப்போது என்று ஏங்க வைத்தவர் ஜவஹர். குடும் பத்தில் உள்ள அனைவரின் முன்பும்  ''உங்களை எல்லாம் அண்ணன்கிற முறையில் நான்தான் தூக்கி வளர்த்து இருக்கணும். ஆனால், இந்த 22 வருட இடைவெளியில் அத்தனை தங்கச்சிகளும் நல்லா புஷ்டி ஆகிட்டிங்க. இப்ப என்னால தூக்க முடியாது. அதனால, உங்களை ஒரு தட வை பாசத்தோடத் தொட்டுக்கிறேன். நான் உங்களைத் தூக்கி வளர்த்ததா நினைச்சுக்கோங்க. சின்ன வயசுல நான் கொடுக்க நெனச்ச பொம்மை இது!'' என்று செலன் ஸ்டெல்லாவுக்கும், ஹெலன் மோனிகாவுக்கும் குட்டி பொம்மைகள் கொடுக்க, இருவர் முகத்திலும்செல்லக் கோபம். பின்னே ஸ்டெல்லாவும் மோனிகாவும் இப்போது கல்லூரி மாணவிகள் ஆச்சே?

இறுதியில் பிரிய மனமே இல்லாமல் கண்ணீரோடும் பாசத்தோடும் பிரிந்தார்கள் பந்தங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism