Published:Updated:

என் ஊர்: இயக்குநர் மனோபாலா

Director Manobala
Director Manobala

மயிலாப்பூர் ஆழ்வார் புத்தகக் கடையும் மாமி மெஸ் சாப்பாடும்!

##~##

'' 'பராசக்தி’யில் நடிப்பதற்கு முன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், நடிகராவதற்கு முன் சந்திரபாபுவும் மயிலாப்பூரில் தங்கி இருந்த அறையில்தான் ரஜினியும் இருந்தார். அந்த ரூம்ல தங்கி இருந்தபடிதான் நானும் சினிமாவுக்குள் நுழைந்தேன். இதைவிட எனக்கு வேற என்னங்க பெருமை வேணும்?'' பெருமித நினைவுகளோடு ஆரம்பித்தார் இயக்குநர் மனோபாலா. 

''மயிலாப்பூர் அந்தக் காலத்தில் அக்மார்க் கிராமம்தான். இன்னும் சொல்லப்போனால் இதைச் சின்ன கும்பகோணம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு மயிலாப்பூரில் அழகழகான வீடுகள். அருகருகே அமைந்த தெருக்கள் என்று அமைதியான ரம்மியத்தோடு காட்சி தரும். ஆனால், அவை எல்லாம் இன்று அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டன. தெருக்கள் எல்லாம் மாறி, பெரிய கட்டடங்களாக வளர்ந்து விட்டன. மயிலாப்பூரில் நான் தங்கி இருந்த வீட்டுக்கு எதிர் வீட்டில்தான் நடிகை காந்திமதி  இருந்தார். மயிலாப்பூர் அன்று தொட்டு இன்று வரை, நாடக நடிகர்கள், நாட்டியக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள்  என்று  நம் பண்பாட்டோடு ஒன்றிணைந்தப் பகுதியாகத்தான் இருக்கிறது.

என் ஊர்: இயக்குநர் மனோபாலா

அந்தக் காலத்துல கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளம், மயிலாப்பூர் சித்திரக்குளம்னு ஊரைச்சுத்துறதுதான் எங்களுக்குப் பொழுது போக்கு. மயிலாப்பூரையும் அறுபத்து மூவர் திருவிழாவையும் எந்தக் காலத்துலேயும் பிரிக்கவே முடியாது.அந்தத் திருவிழா நேரத்தில் ஏரியாவே கொண்டாட்டமாக இருக்கும். ஒவ்வொரு தெருவில் உள்ளவர்கள் எல்லாம் சேர்ந்து பொங்கல், புளியோதரை என்று அன்ன தானம் வழங்கிக்கொண்டே இருப்பார்கள். பெரும்பாலும் அந்தச் சமயத்தில் பல வீடுகளில் சமைக்கவே மாட்டார்கள்.

என் ஊர்: இயக்குநர் மனோபாலா

மயிலை என்றால் மாமி மெஸ்ஸைத் தெரியாத வர்கள் இருக்க மாட்டார்கள். தெரிந்தவர்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள். 30 நாட்களுக்கும் சேர்த்து மதிய உணவு ஒன்பது ரூபாய்தான். டோக்கன் வாங்க மாதத்தின் முதல் நாள் வரிசையில் நிற்பார்கள். அந்தக் காலத்தில்     பிரபலமாக விளங்கிய ஆர்.ஆர்.சபாவில் நடக்கும் நிகழச்சிகளுக்கு வரும் பிரபலங்கள் மாமி மெஸ்ஸுக்கு வராமல் போக மாட்டார்கள். வைஜெயந்தி மாலா, பத்மினி தொடங்கி சோ, மூப்பனார் வரை மாமி மெஸ் வாடிக்கையாளர் களின் பட்டியலை நீட்டிக்கொண்டே போக லாம்.

என் ஊர்: இயக்குநர் மனோபாலா

மயிலையில் இருக்கும் சோலை மாரியம்மன் கோயில், கலைத் துறையினர் மத்தியில் மிகப்பிரபலம். இந்தக் கோயிலில் வந்து தினமும் சாமி கும்பிட்டால் சினிமா வாய்ப்பு நிறைய கிடைக் கும் என்பது நம்பிக்கை.  மயிலாப்பூர் லஸ் கார்னரில் காமதேனு தியேட்டருக்கு எதிரில் திறந்த வெளியில் ஆழ்வார் புத்தகக் கடை என்று ஒன்று இருக்கிறது. மயிலையில் இருக்கும் எல்லோருக்கும் இந்தக் கடையைத் தெரியும். இங்கு கிடைக்காத புத்தகங்களே இல்லை என்று சொல்லலாம். மயிலையின் அடையாளங்களில் ஒன்றாகக்கூட இந்தக் கடையைச் சொல்வார்கள்.

எத்தனையோ நாட்கள் கேசவப் பெருமாள் கோயில் பிரசாதம் என் பசியை ஆற்றி இருக் கிறது. ராயர் கஃபே, சாந்தோம் சர்ச் என்று மயிலாப்பூர் நிறைய அடையாளங்களை அந்தக் காலம் தொட்டு இன்று வரை கொண்டுள்ளது. கபாலீஸ்வரர் ராஜகோபுர தேரடியில் இருந்து தேர் நகரத் தொடங்கினால் அத்தனை மக்களும் தேரின் பின்னாலேயே செல்லும் அளவுக்குத் தெருக்கள் அகலமாக இருந்தன. தேரினை இழுப்பதற்கு நிறைய இடம் இருந்த நிலை மாறி, இன்று இடத்தைத் தேடும் நிலைக்கு மயிலாப்பூர் வளர்ந்துவிட்டது. குழந்தை வளர்ந்துவிட்டாலும் கூட தாய் என்றும் அதைக் குழந்தையாகத்தான் பார்ப்பாள். நானும் மயிலாப்பூரை அப்படித்தான் பார்க்கிறேன். ஆனால், என்னுடைய தாய் மயிலாப்பூர்தான்!''

என் ஊர்: இயக்குநர் மனோபாலா

- பொ.ச.கீதன்

படம்: ஜெ.வேங்கடராஜ்

அடுத்த கட்டுரைக்கு