Published:Updated:

’’கைக்கு அருகில் காணக் கிடைக்கும் மருந்துகள்!’’

’’கைக்கு அருகில் காணக் கிடைக்கும் மருந்துகள்!’’

’’கைக்கு அருகில் காணக் கிடைக்கும் மருந்துகள்!’’
’’கைக்கு அருகில் காணக் கிடைக்கும் மருந்துகள்!’’

'நமக்கான மருந்து நம் அருகிலேயே இருக் கிறது’ என்பதைப் பொட்டில் அடித்தாற்போல் உணர்த்தியது வேலூர் கோட்டையில் நடை பெற்று வரும் மூலிகைக் கண்காட்சி.

பொது மக்களிடம் மூலிகைகள் குறித்து விளக்கிக்கொண்டு இருந்த வேலூர் அருங்காட்சியகக் காப்பாளர் சரவணனிடம் பேசினேன். ''வேலூரில் உள்ள பல பாரம்பரியமான மூலிகை வைத்தியர்களிடம் கேட்டு மூலிகைக் கண்காட்சி வைக்க முற்பட்டோம். அந்தச் சின்ன முயற்சி இப்போது அதிக பலனைத் தந்து உள்ளது. மூலிகை என்றவுடன் பலரும் நினைப்பது கொல்லிமலை, சித்தேஸ்வரன் மலை, கல்வராயன் மலை மற்றும் குடகு போன்றவற்றில் இருந்து கொண்டுவருவார்கள் என்று. ஆனால், மூலிகை என்பது நாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியது இல்லை. அவை நம் கண் முன்னேயே இருக்கின்றன.

கீழாநெல்லி, சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம். ஆனால், இன்று எத்தனைப் பேர் கீழாநெல்லியைப் பயன்படுத்துகிறார்கள்? மருதாணி என்பது வெறுமனே அழகுக்கான விஷயம் மட்டும் இல்லை; மருதாணியின் பூ, காய் அனைத்தும் மருத்துவ குணம்கொண் டவை.

##~##
உலகில் உள்ள இயற்கைத் தாவரங்கள் எல் லாம் மருத்துவ குணம் கொண்டவையே.  பொன்னாவரைத் தாவரம், உடைந்த எலும்புகளை இணைக்கவல்லது. விழுதிச்சாறு, ஓட்டப்பந்தய வீரர்களுக்கு மிகுந்தப் பயன்தரும் தாவரம். நன்னாரி, உஷ்ணத்தைத் தணிக்கும். பனை ஓலையானது தலை சுற்றல், மயக்கம் போன்ற வற்றைக் குறைக்கும்.

ஆடு தின்னாதழை, பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படும் சமயங்களில் உடல் களைப்பைப் போக்கும். முடக்கறுத்தான், வலி நீக்கத்துக்குப் பயன்படும். வாழைத்தண்டு, சிறுநீர் அடைப்பைச் சரிசெய்யும். நெருஞ்சி முள்செடி, கல் அடைப்புக்கும்;  ஆலம் இலை, வயிற்றுபுண்ணுக் கும் உகந்த மருந்துகளாகும்

அரச இலையால் தேமல் இருந்த இடம் தெரி யாமல் போகும். வேப்பிலைக் கொழுந்தைத் தின மும் ஒன்று சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் வரவே வராது. நான் சொன்னது எல்லாம் நூற்றில் ஒரு சதவிகிதம்தாங்க!'' என்கிறார்.

- கே.ஏ.சசிகுமார்
படங்கள்: ச.வெங்கடேசன்

பு - நடிகையின் பெயரல்ல; பறவைகள் வலசை அதாவது, இடப்பெயர்ச்சி செய்யும்போது இடையில் தங்கும் இடத்தை தபு என்று தமிழில் குறிப்பிடுவார்களாம். இதுபோல் புதுவை இலக்கிய ஆர்வலர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் மாலையில் அங்கு உள்ள நாவலர் நெஞ்செழியன் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சங்கமிப்பார்களாம். இதனை தபு என்று குறிப்பிட்டு வந்துள்ளனர். எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உள்பட பல்வேறு படைப்பாளிகளும் கலந்துகொண்டு கருத்துகளைப் பரிமாறி உள்ளனர். சென்னை, கடலூர் என்று வெளியூர்களில் இருந்தும் இலக்கியவாதிகள் இந்த நாளில் குழுமியுள்ளனர். மூன்றரை ஆண்டுகள் நடந்து வந்த இந்த நிகழ்வு இப்போது நடைபெறுவதுஇல்லை. 'அது மீண்டும் நடக்குமா?’ என்று புதுவை இலக்கியவாதிகள் ஆர்வத்துடன் கேட்கின்றனர்!

வ.உ.சிதம்பரனார் அரசு மேல்நிலைப் பள்ளி, நாவலர் நெஞ்செழியன் அரசு மேல்நிலைப் பள்ளி,  தமிழ்த்தென்றல் திரு.வி.க. அரசு மேல்நிலைப் பள்ளி, தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி, கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளி... இப்படித் தலைவர்களின் பெயர்களிலேயே புதுவை அரசு பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்படி பெயர்வரக் காரணமாக இருந்தவர் புதுவையைச் சேர்ந்த தமிழ் அறிஞர் அரிமதி தென்னகன்!

’’கைக்கு அருகில் காணக் கிடைக்கும் மருந்துகள்!’’
அடுத்த கட்டுரைக்கு