Published:Updated:

’குறையொன்றுமில்லை’ - இது காலர் டியூன் மட்டுமல்ல!

’குறையொன்றுமில்லை’ - இது காலர் டியூன் மட்டுமல்ல!

’குறையொன்றுமில்லை’ - இது காலர் டியூன் மட்டுமல்ல!
##~##
''எ
ன்னுடைய நண்பர் முனைவர் ராம்குமார். ஒரு மாற்றுத் திறனாளியான அவர் அரசுக் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்'' என்று நம் வாய்ஸ் ஸ்நாப்பில் தகவல் சொல்லி இருந்தார் புதுவை வாசகர் திருஞானம்.

ராம்குமாரை போனில் அழைத்தபோது, அவர் மனசைப் போலவே காலர் டியூன் ஒலிக்கத் தொடங்கியது, 'குறையன்றுமில்லை... மறைமூர்த்தி கண்ணா’. நேரில் சந்தித்தபோது உற்சாகமாகப் பேசினார்.

''குழந்தைப் பருவத்தில் நான் சக குழந்தைகளிடம் விளையாடும்போதுதான் எனக்குப் பார்வையில் குறைபாடு உள்ள விஷயத்தை என் பெற்றோர்கள் உணர்ந்தனர். சென்னையில் உள்ள சிறப்புப் பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்து சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் முடித்தேன்.

ஹைதராபாத்தில் உள்ள கல்லூரியில் எம்.ஏ. படிக்கும்போதுதான், அதுவரைப் பார்வைச் சவால் பற்றிக் கவலைப்படாத என் மனம் வருந் தும்படி ஒரு சம்பவம் நடந்தது. கல்லூரி மாண வர் சங்கத் தேர்தலில் என்னை எதிர்த்து நின்ற ஆந்திர மாணவரைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றேன்.

’குறையொன்றுமில்லை’ - இது காலர் டியூன் மட்டுமல்ல!

தோல்வி அடைந்த மாணவர், 'இனிமே மாணவர் மன்றமே குருடாகத்தான் இருக் கப் போகுது’ என்றார். அவர் சொன்ன அந்த வார்த்தைகள் என்னை உடைத்து நொறுக்கியது. அப்போது எனக்குப் பக்கபலமாக இருந்தது என் நண்பர்கள்தான்.

17 வருடங்கள் கழித்து புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்டப்படிப்பில் சேர்வதற்காகப் புதுவை மண்ணை மிதிக்கும்போது ஏற்பட்ட உணர்வு அற்புதமானது. 'பார்வையற்றோருக்கு எளிய வழியில் ஆங்கிலம் கற்பதற்கான வழிமுறை’ என்பதுதான் என் ஆய்வின் தலைப்பு.

’குறையொன்றுமில்லை’ - இது காலர் டியூன் மட்டுமல்ல!

இளம் முனைவர் படிப்பை முடித்தவுடன் புதுச்சேரி அரசுக் கல்லூரியான கஸ்தூரிபாய் மகளிர் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகச் சேர்ந்தேன். எங்கள் கல்லூரி மாணவிகள்பெரும் பாலும் கிராமத்துப் பகுதியில் இருந்துவருபவர்கள். அதனால், அவர்களை ஆங்கிலம் சரளமாக பேச வைப்பதைச் சவாலாக எடுத்துக்கொண்டு என் னுடைய முழுக் கவனத்தையும் செலுத்திவருகிறேன்.  பணியில்இருந்து கொண்டே, பகுதி நேர முனைவர்பட்டப் படிப்பினைப் புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் தொடர்ந்தேன். என் ஆய்வறிக் கையைப் புதுவைப் பல்கலைக்கழகம் தங்கப் பதக்கம் வழங்கிக் கௌரவித்தது.

என் அப்பா தசரதன், அம்மா எழிலரசி, அண்ணன் ஸ்ரீராம், தங்கை மகேஸ்வரி இவர் களின் அன்பும் உறவும் ஒத்துழைப்பும் இல்லை என்றால் நான் இல்லை.

மாற்றுத் திறனாளிகளுக்கு நான் சொல்ல விரும்புவது எல்லாம் உங்களுக்கு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் அளிக்கப்போவது கல்வி யைத் தவிர வேறு ஒன்றும் இல்லை'' என்கிறார் அழுத்தமாக.

- நா.இள.அறவாழி
படங்கள்: ஆ.நந்தகுமார்

அடுத்த கட்டுரைக்கு