Published:Updated:

''நன்றி சொல்லிட்டே இருப்பேன்யா...!''

''நன்றி சொல்லிட்டே இருப்பேன்யா...!''

##~##

சாதனையாளர்களுக்குப் பாராட்டு விழாக் கள் நடைபெறும்போது பாராட்டுக்கு உரிய வரிடம், தகவல் சொல்லி அனுமதி பெற்றே நடத்துவது இயல்பு. சாதனையாளருக்குச் சொல்லப்படாமலேயே திடீர் என ஒரு விழா நடத்தினால் எப்படி இருக்கும்? அப்படி நிகழ்ந்ததுதான் பட்டிமன்ற மேடையில் 50 ஆண்டுகளை நிறைவுசெய்த சாலமன் பாப்பை யாவுக்கு நடைபெற்ற பொன்விழா பாராட்டு நிகழ்வு. 

சென்னையில் கடந்த வாரம் 'எஸ்.எஸ். இன்டர்நேஷனல் லைவ்’ என்ற நிறுவனம் 'பட்டிமன்றங்கள்... சிரித்து மகிழவே, சிந்தனை யைத் தூண்டவே’ என்ற தலைப்பில் பட்டி மன்றத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. நடுவர் சாலமன் பாப்பையா. அந்த விழாவில்தான் அவருக்கேத் தெரியாமல் பாராட்டு நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

''நன்றி சொல்லிட்டே இருப்பேன்யா...!''

பட்டிமன்றம் முடிந்ததும் மேடை ஏறினார் நீதிபதி ராமசுப்ரமணியம். ''ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நான் வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டு இருந்தபோது எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் நடைபெற்ற சாலமன் பாப்பையா அவர்களின்  பட்டிமன்றத்துக்கு நானும் பேசச் சென்று இருந் தேன். அந்த அரங்கில் இருந்த மூவாயிரம் மாணவி யர்களும் இவர் வந்தவுடன் ஆரவாரத்தோடு எழுந்து நின்று கை தட்டினார்கள். அந்த அளவுக்கு இளம் சமுதாயத்தினர் மத்தியிலும் உலகம் முழுவ தும் இருக்கும் தமிழ் மக்களின் மத்தியிலும் வர வேற்பினைப் பெற்றிருக்கிறார். அதற்கு ஒரே கார ணம்தான் இருக்கிறது. வாழ்வியல் உண்மைகளை யும் அது சம்பந்தமான தத்துவங்களையும் அவரு டைய பட்டிமன்றங்களின் வாயிலாக மக்கள் மத்தி யில் கொண்டுசென்றவர். நடுவர் என்றால் அது பாப்பையா மட்டும்தான்'' என்று சொல்ல பாப் பையா எழுந்து நின்று கைகூப்பினார்.

''நன்றி சொல்லிட்டே இருப்பேன்யா...!''

இதய மருத்துவர் சிவகடாட்சம் பேசியபோது, ''ஐயாவோட பட்டிமன்றம் எங்கே நடந்தாலும்  நான் தவறாமப் போயிடுவேன். இன்றைக்கு  அவ ருக்கு நடக்கும் பாராட்டு விழாவில் நானும் பேசு றேன் என்பதைப் பெருமையான விஷயமாநினைக் கிறேன். எத்தனையோ ஆயிரம் தலைப்புகளில் அவர் நடுவராகப் பங்கேற்று தீர்ப்பு வழங்கி இருக் கிறார். தப்பான ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டாரே என்ற மாற்றுக் கருத்து எந்தக் காலத்திலும் வந்தது கிடையாது. வாய்விட்டுச் சிரிச்சாலே பாதி நோய் போய்விடும் என்று சொல்வார்கள். ஐயாவோட பட்டிமன்றத்துக்குப் போனாலே பாதி நோய் காணாமல் போய்விடும். அந்த வகையில் ஐயாவும் ஒரு மருத்துவர்தான்'' என்று நிறைவுசெய்தார்.

''நன்றி சொல்லிட்டே இருப்பேன்யா...!''

விழாக் குழுவினர் சாலமன் பாப்பையாவுக் குப் பொன்விழாப் பரிசாக ஐம்பதாயிரம் ரூபாயை வழங்க... நெகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக்கொண்டார். நிறைவாகப் பேசிய சால மன் பாப்பையா, ''பாராட்டு விழான்னா ஒப்புக் காமப் போயிடுவேனோ என்று எனக்கேத் தெரி யாமப் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செஞ்சி ருக்காங்க. எதுக்குய்யா இதெல்லாம்? அது மட்டுமா, கையில ஐம்பதாயிரம் பணத்தையும் இல்லையா கொடுத்திருக்காங்க. சங்க காலம் தொட்டு பெரியவங்க எல்லாம் தமிழ் வளர்த்த காரணத்தாலதான் அழியாதப் புகழோடு தமிழ் வாழ்ந்துக்கிட்டு இருக்கு. அது தயவுல நானும் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். இதுல நான் பெருமைப்பட என்ன இருக்கு? நீங்க கொடுத்த இந்த ஐம்பதாயிரத்துல ஏதாவது ஒரு நல்ல விஷயம் செய்யணும்னு நினைக்கிறேன். 'ஒளவை மன்றம்’ என்ற ஒன்றைத் தொடங்கப் போறேன். ஒளவை மன்றம் மூலமா என்னல்லாம் செய்யலாம் என்பதை இனிப் பேசி முடிவு செய்வோம்.

என் வாழ்க்கையில எவ்வளவோ நிகழ்ச்சிக்குப் போயிருக்கேன். இதை மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக மாற்றி என்னை நெகிழவெச்சிட்டீங்க. உங்க எல்லோருக்கும் நன்றி சொல்லிட்டே இருப்பேன்யா!'' என்றார்.

- ம.கா.தமிழ்ப்பிரபாகரன்,

பொ.ச.கீதன்

படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

அடுத்த கட்டுரைக்கு