Published:Updated:

குகன் பக்கங்கள்

குகன் பக்கங்கள்

குகன் பக்கங்கள்

படித்ததும் பார்த்ததும்!

குகன் பக்கங்கள்

எமர்ஜென்சி காலத்தில் உணவுப் பொருளை வீணாக்கக் கூடாது என்ற சட்டம் கொண்டுவந்தார்கள். திரைப் படங்களில்கூட சண்டைக் காட்சியில் பழம், பால் கீழே கொட்டுவது போன்ற காட்சிகளைத் தவிர்த்து போலி உணவு பொருட்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால், உயிர் வாழ தேவையான உணவுப் பொருளைப் போராட்டம் என்ற பெயரில் யாருக்கும் பயன்படுத்தாமல் வீணாக்கி இருக்கிறது 'சிவ சேனா’ கட்சி. மும்பையில் நடந்த ஒரு போராட்டத்தில் தங்கள் எதிர்ப்பைக் காட்ட 50,000 லிட்டர் பாலைக் கீழே கொட்டி உள்ளது. பசியால் தினமும் இந்தியாவில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இறப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இதுபோல், உணவுப் பொருளை வீணாக்குபவர்கள் மீது கட்சி பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்காமல் மாநில அரசும் மத்திய அரசும் என்ன செய்துகொண்டு இருக்கின்றன என்றே தெரியவில்லை!

கடவுள் செய்த தவறு!

குகன் பக்கங்கள்

உலகில் அதிக அளவில் ஒடுக்கப்படுகின்ற சிறுபான்மையினர் யார் என்று தெரியுமா? 'ஓரினச் சேர்க்கையாளர்கள்’தான். ஹிட்லரின் மரண முகாமில் ஓரினச் சேர்க்கையாளருக்குத்தான் முன்னுரிமை. ஹிட்லர் கொன்ற கோடிக்கணக்கானவர்களில் 50,000 ஓரினச் சேர்க்கையாளர்களும் அடங்குவார்கள். இரான், நைஜீரியா, அரே பியா, சூடான், ஏமன் போன்ற நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. இந்தியா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு சட்டப்படி அங்கீகாரம் கிடையாது. சமூகப் பார்வையில் நிராகரிப்பு என்ற பெரிய தண்ட னையை இவர்களுக்கு வழங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்கள் செய்வது தவறு என்றால் இவர்களுக்கு இந்த உணர்வைப் படைத்த கடவுளும் தவறுதான்!

ஒரு குழந்தையின் டைரி!

குகன் பக்கங்கள்

நீங்கள் சிறு வயதில் பள்ளியில் தொலைந்து போனது உண்டா? மீண்டும் கிடைத்து பெற்றோர்களிடம் அடி வாங்கியது உண்டா? ஒருநாள் உங்களைப் பள்ளியில் எல்லோரும் தேடியது உண்டா? இப்படி ஓர் அனுபவம் உங்களுக்கு இருந்தால் நிச்சயமாக நீங்கள் அதிர்ஷ்டசாலி. அன்று பள்ளி முழுக்க நீங்கள்தான் ஹீரோ. 'இவன்தானா அந்தப் பையன்?’ என்று விசாரிப்பார்கள். 'ஏண்டா தம்பி இப்படி செஞ்ச?’ என்று அறிவுரை கூறுவார்கள். டீச்சர், ஹெட் மாஸ்டர், பிரின்ஸ்பால் முதல்கொண்டு எல்லோரிடமும் ஓவர்நைட் பிரபலம் ஆகிவிடலாம்.

இன்று பல வீட்டில் குழந்தைகள் வீட்டிலே ஒளிந்துகொண்டு பெற்றோர்களைப் பதறவைப்பது அவர்களுக்கு விளையாட்டாக இருக்கும். ஆனால், அவர்கள் கிடைக்கும்வரை பெற்றோர்களுக்கு எவ்வளவு தவிப்பாக இருக்கும் என்பதை என் மகன் கட்டில் அடியில் ஒளிந்துகொள்ளும்போதுதான் என்னால் உணர முடிந்தது!

பஸ் பயணிகளின் கவனத்துக்கு..!

குகன் பக்கங்கள்

எனக்கு வந்த ஒரு இமெயில்: நான் சென்னை துரைப்பாக்கத்தில் வேலை செய்கிறேன். ஜெயின் கல்லூரியில் இருந்து டைடல் பார்க் வரை பஸ்ஸில் வருவேன். அங்கு இருந்து ரயில் பிடித்து வீட்டுக்குச் செல்வேன். இன்று டைடல் பார்க் செல்லும் ரயிலைப் பிடிக்க அவசரமாக அலுவலகத்தில் இருந்து புறப்பட்டேன். ஜெயின் கல்லூரியில் இருந்து பஸ் ஏறினேன். நடத்துநரிடம் டைடல் பார்க்குக்கு டிக்கெட் கேட்டபோது பஸ் அங்கு நிற்காது என்றார். ஒன்று சிக்னலில் இறங்க வேண்டும் அல்லது டைடல் பார்க்கின் அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்க வேண்டும் என்றார். நான் தொடர்ந்து  வாதாடியும்கூட நடத்துநர் கேட்பதாக இல்லை. என் மொபைலில் 'விஜிசி' பஸ் பற்றிய புகார் எண்ணை வைத்து இருந்தேன். அந்த எண்ணுக்குப் போன் செய்து விஷயத்தைச் சொன்னேன். சற்று நேரத்தில், ‘Wireless transmeter’-ல் டிரைவரிடம் பேசினார்கள். பஸ் டிரைவர் வண்டியை நிறுத்தி transmeter-ல் பேசுவதைக் கேட்டார்.

எதிர்முனையில் 'பஸ்ஸினை டைடல் பார்க்கில் ஏன் நிறுத்துவதுஇல்லை?’ என்று கேட்டார்கள். அதற்கு டிரைவர், டைடல் பார்க்கில் பஸ்ஸை நிறுத்துவதாகக் கூறினார். 'பயணியிடம் ஏன் நடத்துநர் பஸ் நிற்காது என்று சொன்னார்?’ என்று கேட்கப்பட்டது. தடுமாறிய டிரைவர், 'அவர் புதுசு சார்... தெரியாம சொல்லி இருப்பாரு..’ என்று சொல்லிச் சமாளித்தார். அதன் பிறகு இருவரும் என்னிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, நான் இறங்க வேண்டிய இடத்தில் என்னை இறக்கிவிட்டுச் சென்றார்கள்!

குகன் பக்கங்கள்
அடுத்த கட்டுரைக்கு