Published:Updated:

விஸ்வநாதன் வேலை வேண்டும்...

விஸ்வநாதன் வேலை வேண்டும்...

''உங்கள் முதல் இன்டர்வியூ அனுபவம் எப்படி  இருந்தது?' என்று இவர்களிடம் கேட்டபோது...

விஸ்வநாதன் வேலை வேண்டும்...
##~##
சுஜாதா,
பள்ளி ஆசிரியை:
''நீங்க  இந்தக் கேள்வியைக் கேட்ட உடனே, 20 வருஷத்துக்கு முன்னால நான் முதன்முதலில் இன்டர்வியூவுக்குப் போனப்ப ஏற்பட்ட பயமும் படபடப்பும் இப்ப மனசுல தொத்திக்கிச்சு. முதல் இன்டர்வியூவில் 'முனைப்பா இருப்பீங்களா?’, 'நேரம் தவறாமையைக் கடைப்பிடிப்பீங்களா?’ங்கிற மாதிரியான கேள்விகளைத்தான் கேட்டாங்க. இன்னைக்கு வரைக்கும் அதைக் கடைப்பிடிக்கிறேன்!''

ஹரிஷ்குமார், மென்பொருள் பொறியாளர்: ''முதன்முதலில் போன்லதான் இன்டர்வியூ பண்ணினாங்க. என் ஃப்ரெண்ட்ஸ்தான் கலாய்க்கறாங்கனு நினைச்சிட்டு நானும் தாறுமாறாக் கலாய்ச்சிட்டேன். அப்புறம் உண்மைத் தெரிஞ்ச பிறகு ரொம்ப சங்கடம் ஆயிடுச்சு!''

மணி, ஹலோ எப்.எம். நிகழ்ச்சித் தொகுப்பாளர் :  ''நான் இன்ஜினீயரிங் ஃபைனல் இயர் படிக்கும்போது முதன்முதலில் ஒரு ரேடியோ நிலையத்துக்குத்தான் இன்டர்வியூ போனேன். 'இன்ஜினீயரிங் படிச்ச நீங்க ரேடியோவுல என்ன பண்ணப் போறீங்க?’னு கேட்டாங்க. அந்தக் கேள்விதான் என்னை நிறைய யோசிக்கவெச்சது. இப்போ ஆர்.ஜே-வாக மாறினதுக்கும் அந்தக் கேள்விதான் தூண்டுதல்!''

விஸ்வநாதன் வேலை வேண்டும்...

குமார், பேங்க் மேனேஜர்: ''பி.எட். முடிச்சுட்டு முதன்முதலில் டீச்சர் வேலைக்குத்தான்  இன்டர்வியூ போனேன். அப்போ தலைமை ஆசிரியர் ப்ளஸ் டூ-வுக்கு வகுப்பு எடுக்கச் சொன்னாங்க. நானும் வகுப்பு எடுத்தேன். ஆசிரியரா தேர்வானேன்!''

பாலச்சந்தர், அனிமேஷன் ஆர்ட்டிஸ்ட்: ''என் னுடைய முதல் இன்டர்வியூவுல ஆங்கிலத்திலேயே எல்லாக் கேள்வியும் கேட்டாங்க. எனக்கும் ஆங்கிலத்துக்கும் ரொம்ப தூரம். நான் உடனே அவங்ககிட்ட, 'பிராக்டிகலா நீங்க என்ன செய்யச் சொன்னாலும் செய்றேன். ஆனா, தயவுசெய்து தமிழ்ல கேளுங்க’னு சொன்னேன். அவங்களும் சிரிச்சுக்கிட்டே எனக்கு வேலைக் கொடுத்தாங்க!''

ஆ.நந்தகுமார்

விஸ்வநாதன் வேலை வேண்டும்...
அடுத்த கட்டுரைக்கு