Published:Updated:

மாப்பிள்ளை தங்கும் விடுதி வீடு!

Sivakumar
Sivakumar

மாப்பிள்ளை தங்கும் விடுதி வீடு!

மாப்பிள்ளை தங்கும் விடுதி வீடு!

சிந்தனையாளர், மேடைப் பேச்சாளர், ஓவியர் எனப் பன்முகத் திறமைக்குச் சொந்தக்காரர் நடிகர் சிவகுமார். அவர் தன்னுடைய சொந்த ஊரான கோவை மாவட்டம், காசிகவுண்டன்புதூர் பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

மாப்பிள்ளை தங்கும் விடுதி வீடு!
##~##

''கோயம்புத்தூர் ஜில்லாவில், சூலூரில் இருந்து தெற்கே மூன்று கி.மீட்டர் உள்ளடங்கி இருக்கிறது காசிகவுண்டன்புதூர். எங்கள் ஊரை 'கஞ்சிக்கு செத்த ஊர்’ என்று சொல்வார் கள். இப்போதுகூட சரியான தண்ணீர் கிடை யாது. முழுமையான மின்சார வசதி இல்லை. மண் வளமும் இல்லை. பெரிய வரலாறும் இல்லை. 200 ஆண்டுகளுக்கு முன்பு காசி கவுண் டர் என்பவர் இங்குக் குடியேறியதால் ஊரின் பெயர் காசிகவுண்டன்புதூர் என்று ஆனதாம்.

படிப்பின் வாசனை அறியாத என் ஊரில் பெரும்பாலும் ஒவ்வொருவரும் ஏழெட்டு ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரர்கள். முதலாளிகளே நிலத்தில் இறங்கி வேலை செய்வார்கள். 'விவசாயம் செய்றோம்... ஏதோ வயித்துக்கும் வாயிக்கும் காசு வருது’ என்ற மனோபாவத்தில் யாரும் படிக்கவில்லை. என் தந்தைக்கு கொஞ்சம் எழுதப் படிக்கத் தெரியும். அவர்தான் ஊரில் உள்ள ஏழை மாணவர்களுக்கு மாலை நேரத்தில் எழுதப் படிக்கச் சொல்லித் தருவார்.

ஊரில் உள்ள பிள்ளையார் கோயிலில்  பூசை செய்பவர்தான் ஊர்க் குழந்தைகளுக்கு முதல் ஆசான். கோயிலுக்கு சதுர வடிவில் மணலைப் பரப்பி அதில் 'அ’, 'ஆ’ எழுதக் கற்றுக்கொடுத்தார். பிறகு, பக்கத்தில் இருக்கும் கலங்கல் கிராமத்தில் இருந்த பள்ளிக்கூடத்துக்குச் சென்றோம். ஊரில் இருந்து 20 பிள்ளைகள் பள்ளிக்குக் கிளம்பினால் பள்ளிக்குச் சென்று சேர்வது ஏழெட்டு பேர்கள் தான். அப்புறம் பள்ளி ஆசிரியரும் ஊர் ஆட் களும் சேர்ந்து காடு, கண்மாய், தோப்பு எல்லாம் தேடிப் பதுங்கி இருக்கும் பிள்ளைகளைக் குண்டுக்கட்டாகப் பள்ளிக்குத் தூக்கிச் செல்வார்கள்.

எங்கள் கொங்கு திருமணம் இன்றும் மிகப் பிரபலம். அதன் சடங்கு, சம்பிரதாயங்கள் நேர்த் தியாக, வித்தியாசமாக இருக்கும். சுபகாரியத் தகவலை மாப்பிள்ளை வீட்டாரோ, பெண் வீட் டாரோ ஊருக்குத் தெரிவிக்கக் கூடாது. ஊரின் மரியாதைக்குரிய நாவிதர்தான் சுபகாரியத் தகவல் களை ஊராருக்குத் தெரிவிக்க வேண்டும். இதை 'அழைப்பு’ என்போம். திருமணத்தின் இதர முக்கியச் சடங்குகளையும் இவர்களே செய்வார்கள். திரு மணம், நிச்சயதார்த்தம் இரண் டுமே பெண் வீட்டில்தான் நடக் கும். திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே மணமகன், மணப்பெண் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி ஒரு வீட்டில் தங்க வேண்டும். இதை 'விடுதி வீடு’ என்போம். திருமணத்தின்போது மாப்பிள்ளையைக் குதிரையில் வைத்து அழைத்துவருவார்கள்.

மாப்பிள்ளை தங்கும் விடுதி வீடு!

எங்களின் முக்கிய விழா பொங்கல். அப்போது ராயர் கோயிலில், சுத்துவட்டார கிராம மக்கள் குவிவார்கள். அப்போது பூப்பறிக்கும் நோம்பு நடக்கும். இளம் பெண்கள் புதிய ஆடை உடுத்தி, தோட்டங்களுக்கும் மலை அடி வாரங்களுக்கும் சென்று விதவிதமான பூக்க ளைப் பறித்துவருவார்கள். இவர்களைப் பார்க்கும் இளைஞர்கள் தங்களுக்குப் பிடித்தப் பெண்களை வீட்டு பெரியவர் களிடம் சொல்வார்கள். அப்புறம் திருமணப் பேச்சுவார்த்தைத் தொடங்கும்.

எங்கள் ஊர் வானம் பார்த்த பூமி. வரு ஷத்துக்கு இரண்டு தடவை மழை பெய்தாலே அதிசயம். ஆனால், ஊரின் பிரதான தொழில் விவசாயம். நன்செய்ப்  பயிர்களை எல்லாம் நாங்கள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. பருத்தி, சோளம், திணை, வரகு, பச்சைப் பயறு, தட்டப் பயறு இவை தான் பயிரிடுவோம். எங்கள் ஊரின் மிக நல்ல விஷயம்... குளிர்ச்சியான காற்று. மேற்குத் தொடர்ச்சி மலைக்கு இடையே ஒரு திறந்த வெளியில் நேராக எங்கள் ஊர் இருப்பதால் அரபிக் கடல் காற்று, எப்போ துமே குளிர்ச்சியாகவும் வேகமாகவும் இங்கு வீசும். என் மூச்சோடு கலந்துவிட்ட காற்று என்பதால் ஆண்டுக்கு ஓரிரு முறையேனும் என்னால் இங்கு வராமல் இருக்கவே முடி யாது!

மாப்பிள்ளை தங்கும் விடுதி வீடு!

சந்திப்பு: ரா.அண்ணாமலை
படங்கள்: வி.ராஜேஷ்

அடுத்த கட்டுரைக்கு