Published:Updated:

'பாதை’ தெரியுது பார்!

இது நம்ம ஊரு ஸ்பெஷல் -புதுச்சேரி

'பாதை’ தெரியுது பார்!
'பாதை’ தெரியுது பார்!

பொருளாதாரப் பிரச்னைகள், அலுவலகப் பணிச் சுமை என எதுவும் அற்ற மாணவப் பருவமே கொஞ்சம் கொஞ்சமாக மன அழுத்தம்கொண்ட பருவமாக மாறிக்கொண்டு இருக் கும் காலகட்டம் இது. இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண புதுவையில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று இலவச கவுன்சிலிங் தருகிறது 'பாதை’ அமைப்பு. 'பாதை’யின் பாதை குறித்து அமைப்பாளர் ஜான்சனிடம் பேசினேன்.

##~##
''நான் பிறந்து வளர்ந்தது விழுப்புரம் அருகில் உள்ள செல்லாங்குப்பம் என்ற சிறிய கிராமத்தில். எங்க கிராமத்திலேயே நிறையக் குழந்தைத் திருமணங்களையும் மதுவுக்கு அடிமையான மாணவர்களையும் பார்த்தேன். பி.ஏ. உளவியல் படித்து முடித்த பிறகு நம்மால் முடிந்தவரை இந்தப் பிரச்னைகளுக்கு கவுன்சிலிங் வழங்கலாம் என்று முடிவு செய்தபோது உருவான அமைப்புதான் 'பாதை’.  நான், சிஸ்டர் அனசாஸ்தியா மற்றும் ராணி ஆகிய மூவரும் சேர்ந்து 'பாதை’ அமைப்பினை உருவாக்கினோம். காதல், படிப்பு, தற்கொலைக்குத் தூண்டும் உளவியல் பிரச்னை, குடும்பப் பிரச்னை என்று மாணவப் பருவத்தில் ஏராளமான குழப்பங்கள். இதனால், புதுவைப் பள்ளிகளுக்குப் போய் இலவச கவுன்சிலிங் செய்வது என முடிவுஎடுத்தோம்.
'பாதை’ தெரியுது பார்!

முதலில்,  புதுவை அரசுடன் சேர்ந்து நிறைய சர்வேக்கள் எடுத்தோம். அதில் தெரிந்த பல தகவல்கள் எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியைத் தந்தன. புதுவை போன்ற நகரங்களிலும் இன்றும் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஒன்பது பெண் களாவது பாலியல் சீண்டலுக்கு உள்ளாகின்றனர். முதலில் மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் பரஸ்பரம் மனம்விட்டுப் பேச சூழல் உருவாகவேண்டும். அப்படி மாறிவிட்டால், எங்களை மாதிரி ஆட்கள் தேவைப்படவே மாட்டார்கள்'' என்கிறார் ஜான்சன்.

- ஆ.நந்தகுமார்

'பாதை’ தெரியுது பார்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு