Published:Updated:

மக்கள் வளர்த்த மாபெரும் நகரம்!

மக்கள் வளர்த்த மாபெரும் நகரம்!

Tiruppur
Tiruppur

புதுக்கவிதையில் பல்வேறு தளங்களைத் தொட்டவர் கவிஞர் மகுடேஸ்வரன். இவர் தன்னுடைய சொந்த ஊரான திருப்பூரைப் பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்...

மக்கள் வளர்த்த மாபெரும் நகரம்!
##~##

''திருப்பூரின் நிலங்கள் அனைத்துமே புஞ்சை நிலங்கள்தான். எந்த ஜீவநதியும் இந்த மண்ணை வளப்படுத்தவில்லை. பாலக்காட்டுக் கணவாய் வழியாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஊடுருவிப் பாயும் அரபிக் கடலின் ஈரக் காற்று ஒன்றுதான் எங்களின் ஜீவாதா ரம். பதமான அந்தக் காற்று இல் லையெனில் திருப்பூரின் பின்ன லாடைத் தொழில் இல்லை. மகாத்மா காந்தியின் வாழ்வுடன் பிணைந்த ஊர் திருப்பூர். காந்தி தமிழகத்துக்கு 20 முறை வந்து உள்ளார். அதில் ஐந்து முறை திருப்பூருக்கும் வருகை தந்துள் ளார். அன்று அவருடைய ஊக்கு விப்பினால் இங்கு ஏராளமான கதர் ஆலயங்கள் (காதி கிராஃப்ட்) உருவாகின. அன்றைய விடுதலைப் போராட்ட வீரர்கள் திருப்பூரைத் தமிழகத்தின் கதர் தலைநகரம் என்றுதான் அழைத்தார்கள். காந்தி  இங்கு வந்தபோதுதான், ஆங்கிலேய அரசு அவருக்கு வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அழைப்பை அனுப்பியது. இன்றும் இங்கு உள்ள காந்தி நகரில் காந்தியின் நினைவுத் தூணும் அவருடைய அஸ்தியும் உள்ளது.  

காமராஜர் தன்னுடைய ஆட்சியில் தொழில் துறையினை மிகப் பெரிய அளவில் ஊக்குவித்தார். அதை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டது திருப்பூர். அரசாங்கத்தின் எந்தச் சலுகையும் உதவியும் இல்லாமல் ஒட்டுமொத்தத் திருப்பூர் மக்களும் மாபெரும் சமூக விசையாகச் செயல் பட்டு இந்த நகரை வளர்த்து எடுத்தார்கள். இப்படி தன்னைத்தானே வளர்த்துக்கொண்ட ஆச்சர்ய நகரம்தான் திருப்பூர்.

திரை அரங்குகள்தான் எங்கள் ஊரின் ஒரே பொழுதுபோக்கு. எல்லா ஊரிலும் திரை அரங்குகள், திருமண மண்டபங்களும் வணிக வளாகங்களுமாக மாறிக்கொண்டு இருக்க, இங்கு இன்னமும்கூடப் பல புதிய திரைஅரங்குகள் தோன்றிய வண்ணமே உள்ளன. கொங்கு மண் என்றாலும், அதன் வழக்காடு மொழியை இங்குக் கேட்பது அரிது. வந்தாரை வாழவைத்த ஊர் என் பதால் எல்லா ஊர் பாஷையும் இங்கே கலந்து இருக்கும்.  

மக்கள் வளர்த்த மாபெரும் நகரம்!

மரங்களை ஊரின் பெயரோடு இணைத்த ஊர் திருப்பூர் மாவட்டம். இங்குதான் தென்னம்பாளையம், வாவி பாளையம், கருவம்பாளையம் என்று ஊர்கள் இருக்கின்றன. இங்கு உள்ள ஈஸ்வரன் கோயிலில் திருவிழா களைகட்டும். தவிர, அந்தந்தப் பகுதி மக்களின் குலதெய்வ வழிபாடு வருஷம் முழுக்க நடைபெறும். அதனால், இங்கு எப்போதும் மேள, தாள சத்தத்தைக் கேட்க முடியும். தென்னம் பாளையத்தில் ஒரு காலத்தில் மாட்டுச் சந்தை பிரபலம். ஒரே நேரத்தில் 2,000 மாடுகள் திரண்டுவந்து நிற்கும். இந்த ஊரின் விவசாயம் போலவே படிப்படி யாக அந்தச் சந்தையும் அருகிப் போனது.

இங்குச் சேர்மனாக இருந்த கந்தசாமி எங்கள் ஊரின் மறக்க முடியாத மனிதர் ஆவார். திருப்பூரில் கடும் தண்ணீர்ப் பஞ்சம் இருந்தது. மேட்டுப்பாளையத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவுக்குக் குழாய் போட்டால்தான் எங்கள் ஊருக்குத் தண்ணீர் கிடைக்கும் என்ற நிலை. அதிலும் ஒரு தனியாருக்குச் சொந்தமான நிலம் வழியாக குழாய் வரவேண்டும். ஆனால், அந்த நிறுவனம் அனுமதி தர மறுக்க, ஊரார் முன்னிலையில் அவர்கள் காலில் விழுந்து, கெஞ்சி அனுமதி பெற்று எங்கள் மக்களின் தாகம் தணித்தவர், கந்தசாமி.

இங்கு தயாராகும் ஆடைகள் உறுதியாக இருக்கக் காரணம், நாங்கள் நெருக்கிப் பின்னும் பின்னல்களே. அந்தப் பிணைப்பைத்தான் எங்கள் ஊரின் உழைப்பாளிகள் மனிதர்களுடன் பழகுவதிலும் காட்டு கிறார்கள். இன்று எங்கள் மண்ணில் ஜவுளித் தொழில் நைந்து போனாலும் மனிதம் மட்டும் மரிக்கவில்லை!

மக்கள் வளர்த்த மாபெரும் நகரம்!

சந்திப்பு: பூ.கொ.சரவணன்
படங்கள்: க.ரமேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு