Published:Updated:

பெட்ரோல் இல்லை... பவர் உண்டு! சூப்பர் கார்!

இது நம்ம ஊரு ஸ்பெஷல் -நரசிங்கபுரம்

பெட்ரோல் இல்லை... பவர் உண்டு! சூப்பர் கார்!
##~##
மூ
ன்று ஆண்டுகளில் 18 முறை விலையேற்றம் கண்டுவிட்ட பெட்ரோலுக்கும் அடிக்கடி கோபம் கிளப்பும் பவர்கட் பிரச்னைக்கும் டூ இன் ஒன் தீர்வாக, சோலார் கார் ஒன்றை வடிவமைத்து இருக்கிறார் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகரன்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில், ரத்தப் பரிசோதனை ஆய்வாளராகவும் மருந்தாளுநராகவும் பணியாற்றிவரும் ராஜசேகரன்  2006-ஆம் ஆண்டு ஒரு யூனிட் மின்சாரத்தில் 40 கி.மீட்டர் தூரம் செல்லும் பேட்டரி மொபெட்டை உருவாக்கினார். இப்போது பெட்ரோலுக்கும், பவர்கட்டுக்கும்  'பை பை’ சொல்லும் சோலார் காரைக் கண்டுபிடித்திருக்கிறார்.

தான் தயாரித்த காரில் ஜாலியாக ரவுண்ட் அடிக்கும் ராஜசேகரை நிறுத்திப் பேசினேன்.

போக்குவரத்து வசதியே இல்லாத நரசிங்கபுரம் கிராமம்தான் எனக்குச் சொந்த ஊர். வெளியூருக் குப் போய்விட்டு ஊருக்குத் திரும்பினால் நடந்துதான் போகணும். ராத்திரி நேரம் என்றால்,  துணைக்கு யாராவது வரமாட்டாங் களானு காத்துக்கிடக்க வேண்டி இருக்கும்.

பெட்ரோல் இல்லை... பவர் உண்டு! சூப்பர் கார்!

நான் சின்னப் பையனா இருக்கும்போது, வெளியூருக்குப் போய்ட்டுத் திரும்பும்போது, அப்பா கையைப் பிடித்துக்கொண்டு நடந்துவருவேன்.  ஒரு முறை அப்பா 'இதுக்கெல்லாம் தீர்வே இல்லையா’னு வருத்தப்பட்டார். சின்ன வயசிலேயே அந்த வருத்தம் எனக்குள்ளே ஆழமாப் பதிஞ்சிடுச்சு. அதன்பிறகு என் ஆர்வம் எல்லாம் மோட்டார், எலெக்ட்ரீசியன் வேலைகளைக் கற்றுக்கொள்வதில் அதிகமானது. அந்த ஆர்வம்தான் புதிய மோட்டார் கருவியை வடிமைப்பதற்கு உதவியா இருந்தது.

பெட்ரோல் இல்லை... பவர் உண்டு! சூப்பர் கார்!

 ஒரு கட்டத்தில் நான் படிச்சாதான் குடும் பத்தைக் காப்பாற்றமுடியும்கிற சூழல் வந்தபோது அப்பா, என்னை டி.ஃபார்ம். படிப்பில் சேர்த்து விட்டார்.  கல்லூரியில் படிக்கும்போது, விடு முறை நாட்களை வீணாக்காமல் பேட்டரி மூலம் இயங்கும் மோட்டார் சைக்கிளை வடிவமைத்து அதில் டிராவல் பண்ணிக்கிட்டு இருந்தேன். அப்போ என் ஃப்ரெண்ட்ஸ் 'இன்னும் கொஞ்சம் அட்வான்ஸா யோசிடா’னாங்க. உடனே ஒரு டி.வி.எஸ்-50 வண்டி வாங்கி, அந்த வண்டியை பெட்ரோல் இல்லாமல், ஒரு யூனிட் மின்சாரத்தில் 40 கி.மீ தூரம் செல்லும் பேட்டரி மொபெட்டாக மாத்தி ஓட்டிக்கிட்டிருந்தேன்.

பெட்ரோல் விலையேற்றமும்,  தட்டுப்பாடும் அதிகமாகிக்கொண்டு இருப்பதைப் பார்த்த எனக்கு, 'பெட்ரோல் இல்லாமல் ஓடுகிற ஒரு காரை உருவாக்கலாமே’னு தோணுச்சு. கூடவே அந்த கார் பவர்கட் பிரச்னைக்கும் தீர்வா இருக்கணும்’னு யோசிச்சேன்.

குடும்பச் செலவுக்கே போதுமானதாக இல்லாத என்னுடைய சம்பாத்தியத்தில் இருந்து கொஞ்ச கொஞ்சமாகச் சேகரித்த பணத்தைக் கொண்டு, என் கற்பனையில் இருந்த அந்த காருக்கு உருவம் கொடுக்க ஆரம்பிச்சேன். லேத் ஒர்க், பெயின்டிங், எலக்ட்ரீசியன் வேலைகள் தெரிந்ததால் வேலை கொஞ்சம் சுலபமா இருந்தது.

 காரின் மேல் பொருத்தப்பட்டிருக்கும் சோலார் பேனல், சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றி பேட்டரியில் மின்சாரத்தைச் சேமிக்கும். அதுபோல காரில் பொருத்தப்பட்டிருக்கும் கன்ட்ரோலர் மூலம் பேட்டரிகளில் சேமிக்கப்படும் மின்சாரமும் கார் ஓட்டப் பயன்படும்.

பெட்ரோல் இல்லை... பவர் உண்டு! சூப்பர் கார்!

மின்வெட்டு நேரங்களில் வண்டியில் பொருத்தப்பட்டிருக்கும் இன்வெர்ட்டர் மூலம் ஃபேன், மிக்சி, டி.வி, டேபிள்டாப் கிரைண்டர், டியூப் லைட், மொபைல் சார்ஜர் ஆகியவற்றை இயக்கலாம். நான் வேலை செய்யும்  மருத்துவமனையில் பவர் கட் என்றால் கவலையே இல்லை. என் கார் இருக்கும்போது என்ன கவலை...?

சூரிய ஒளியில் இருந்து சேமிக்கப்பட்ட மின்சாரத்தைக் கொண்டு, இரவு நேரங்களிலும்  இயங்கும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டு உள்ளது. கியர் இல்லாமல் எளிமையாக இருப்பதால் வயதானவர்கள், பெண்கள், மாணவர்கள் என அனைவரும் ஓட்ட முடியும். கூடுதலாக மாற்றுத்திறனாளிகள் ஓட்டும் வகையில் ஆக்ஸிலேட்டரைக் கையால் இயக்கவும் முடியும்.

சூரிய ஒளியில் இயங்குவதால் செலவு இல்லை. சுற்றுச்சூழல் மாசுபடுவது இல்லை. அதிக வேகம் இல்லை என்பதால் விபத்துகள் நடக்கவும் வாய்ப்பில்லை. தேவைப்படும் நேரங்களில் மின்சாரத்தைப் பயன்படுத்திக்கொள்ளவும் முடியும்'' என்று 'பலே’ பட்டியல் போடும் ராஜசேகரன், ''ஒருவர் மட்டும் பயணம் செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த காரை விரைவில் இரண்டு பேர் செல்லும் வகையில் தயாரித்து, நடந்து போகிற என் ஊர் மக்களை அதில் பயணம் செய்ய வைக்கப்போகிறேன்'' என்கிறார்.

- சி.ஆனந்தகுமார்
படங்கள்: எம்.ராமசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு