Published:Updated:

"இஸரோவை சுத்திப் பார்க்கப் போனோம்!"

"இஸரோவை சுத்திப் பார்க்கப் போனோம்!"

"இஸரோவை சுத்திப் பார்க்கப் போனோம்!"

 சினிமா சங்கதிகளைத் தாண்டி ஆக்கபூர்வமான நிகழ்ச்சி மூலம் சிறுவர்களுக்கு ஆரோக்கியமான  வழிகாட்டி இருக்கிறது ஊட்டியில் இயங்கும் 'யு’ டி.வி. சமீபத்தில் 'ஸ்மார்ட் ஜூனியர்ஸ்’ என்ற விநாடி-வினா நிகழ்ச்சியில் தேர்வான 25 மாணவர்களை பெங்களூருவில் இருக்கும் இஸ்ரோ, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட், விஸ்வேஸ்வரா இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜிகல் மியூசியம் ஆகிய இடங்களுக்குச் சுற்றுப் பயணம் அழைத்துச் சென்று இருக்கிறார்கள். இந்தத் திட்டத்தின் 'கிரியேட்டிவ் ஹெட்’டான அனீஸ், ''இஸ்ரோவின் முன்னாள் குரூப் டைரக்டரான போஜராஜ் 25 மாணவர்களைத் தேர்ந்தெடுங்க. அவங்களுக்கு இஸ்ரோவை சுற்றிப் பார்க்கிற வாய்ப்பை நான் ஏற்படுத்தித் தர்றேன்’னு சொன்னார். எட்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கலந்துகொண்ட 'ஸ்மார்ட் ஜூனியர்ஸ்’ நேரலை விநாடி- வினா நிகழ்ச்சியில் தேர்வான 25 பேரை இஸ்ரோவுக்கு அழைச்சுட்டுப் போனோம்!'' என்றார்.

"இஸரோவை சுத்திப் பார்க்கப் போனோம்!"

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##
''இஸ்ரோ உள்ளிட்ட இடங்கள்ல என்ன தெரிந்துகொண்டீர்கள்?'' என்று தேர்வான மாணவர்களிடம் கேட்டேன். ''இஸ்ரோவுல எங்களுக்கு ஒரு குறும்படம் போட்டுக் காட்டி னாங்க. 'செயற்கைக்கோள் என்றால் என்ன?

ஒரு ராக்கெட் எப்படி செயற்கைக்கோளைக் கொண்டுபோய் விண்ணில் இடம்பெறச் செய்யுது?  சந்திராயன் ராக்கெட் எப்படி வேலை செய்யுது?’னு ரொம்பப் பயனுள்ள விஷயங் களை விளக்கினாங்க. அதுமட்டுமில்ல; ராக்கெட்டில் எத்தனை பாகங்கள் இருக்குது, 'ஜி.எஸ்.எல்.வி’னா என்ன?, 'பி.எஸ்.எல்.வி.’னா என்னங்கிறதை எல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க. மயில்சாமி அண்ணாதுரை சாரும், வளர்மதி மேடமும் ஸ்பேஸ் சம்பந்த மான எங்களோட பல சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுத்தாங்க. எங்களை எல்லாம் 'க்ளீன் ரூம்’ங்கிற ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அங்கே இஸ்ரோ அடுத்தபடியா செலுத்த இருக்கிற ரெண்டு சேட்டிலைட்களோட அடிப்படை வேலைகள் நடந்துக்கிட்டு இருந்தது.  அந்த ரூமைப் பார்த்து அசந்துட்டோம். அங்க  ஒரு சின்ன தூசி இருந்தாலும்கூட வார்னிங் மெசேஜ் வந்து, அதை உடனடியா ஸ்கேன் பண்ணி அப்புறப்படுத்துறாங்க. ஒரு ராக்கெட்டையும் செயற்கைக் கோளையும் தயாரிக்கவும், விண்ணில் செலுத்தவும் விஞ்ஞானிகள் எப்படிக் கஷ்டப்பட்டு உழைக்கிறாங்கனு நேரடியாகப் பார்த்தோம்.  ஹிந்துஸ்தான் ஏரோநாடிகல் நிறுவனத்துலேயும் எங்களுக்கு ஏரோபிளேன், ராக்கெட், ஹெலிகாப்டர், போயிங் ஃப்ளைட் இதை எல்லாம் பற்றி விளக்கமா சொல்லிக் கொடுத்தாங்க. ஹெலிகாப்டரோட என்ஜின் எப்படி செயல்படுதுன்னு தெரிஞ்சப்ப அசந்துட்டோம். ஒவ்வொருத்தரும் வாழ்க்கையில கட்டாயம் பார்க்கக் கூடிய இடம் விஸ்வேஸ் வரையா மியூசியம். டைனோசர்ல ஆரம்பிச்சு லேட்டஸ்ட் செயற்கைகோள் வரைக்கும் சயின்ஸோட அத் தனை விஷயங்களையும் அங்கே பார்க்கலாம். ஒவ்வொரு அப்பா, அம்மாவும் தன்னோட குழந்தையை இந்த மியூஸியத்துக்குக் கண்டிப்பா கூட்டிட்டுப் போகணும்!'' என்கிறார்கள் கண்களில் ஆர்வம் மின்ன!

அசத்துங்க!

"இஸரோவை சுத்திப் பார்க்கப் போனோம்!"

- எஸ்.ஷக்தி