Published:Updated:

’’நாங்க வெயிட்டான குடும்பம்!’’

இது நம்ம ஊரு ஸ்பெஷல் -புதுச்சேரி

’’நாங்க வெயிட்டான குடும்பம்!’’
##~##
ர்வதேச  சாதனை நிகழ்த்திய புதுவையின் 'பவர்ஃபுல்’ லேடி சூரியப்பிரபா. பவர் லிஃப்டிங்கில் சர்வதேசத் தரவரிசைப் பட்டியலில் இவர் பிடித்துள்ள இடம் ஒன்பது.

'எங்க அப்பா ஒரு வெயிட் லிஃப்டிங் பயிற்சியாளர். அதனால, இயல்பாகவே எனக்கு அதுல ஆர்வம் வந்ததில் ஆச்சர்யம் இல்லை. வெயிட் லிஃப்டிங்ல பள்ளிக்கூட அளவில் நடந்த போட்டிகள்ல பல பதக்கங்கள் வென்ற நான் அதுக்கப்புறம் பவர் லிஃப்டிங்கைத் தேர்ந்தெடுத்தேன். அதுக்கு தினமும் குறைந்தபட்சம் ஐந்து மணி நேரமாவது பயிற்சி எடுக்கணும். உடல் எடையைப் பொறுத்துதான் போட்டி நடக்குதுங்கிறதால உடல் எடையைக் கூட்டாம, குறைக்காம மெயின்டெய்ன் பண்ணனும். பிளஸ் டூ முடிச்சபிறகு படிப்பை விட பவர் லிஃப்டிங்கில் ஆர்வம் அதிகமா இருந்தது. அதையே கன்டினியூ பண்ண ஆரம் பிச்சேன்.

2010-ல் உஸ்பெக்கிஸ்தானில் நடந்த சர்வதேசப் போட்டி யில் பெண்களுக்கான 67 கிலோ எடைப் பிரிவில் கலந்துக்கிட்டு வெற்றிபெற்றதோட, சர்வதேச தரவரிசைப் பட்டியல்ல ஒன்பதாவது இடத்தையும் பிடிச்சேன்.  சர்வ தேசப் போட்டிகளில் கலந்து கொள்ளும்போது சந்தோஷங் களும் உண்டு; மனக்குறைகளும் உண்டு. நாங்க நடுத்தர வகுப்புக் குடும்பங்கிறதால வெளிநாட்டுக்குப் போய் வர ஆகும் ஃப்ளைட் டிக்கெட், மத்த செலவுகளை எல்லாம் சமாளிக்கிறதே பெரும்பாடா இருக்கு. விளையாட்டுக்குனு கிடைக்கிற அரசு சலுகை களும் கிடைக்கிறது இல்லை.

என் கணவரும் பவர் லிஃப்டர்தான். காதலிச்சுத் திருமணம் செய்துகிட்டோம். அப்பா, கணவர்னு எல்லாரும் ஒரே துறையில இருக்கிறதால, அவங்க கொடுக்கிற உற்சாகத்துலதான் என்னால் ஜெயிக்கமுடியுது.

ஒலிம்பிக்கில் வெயிட் லிஃப்டிங் உண்டு. ஆனா பவர் லிஃப்டிங் கிடையாது. அது இடம் பெற்றால் கண்டிப்பா என் மூலமா இந்தியாவுக்கு ஒரு தங்கம் உண்டு'' என்கிறார் அழுத்தமான புன்னகையுடன்.

- அ.அச்சனந்தி,
படம்: ஆ.நந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு