Published:Updated:

கொஞ்சம் சோகம்... நிறைய சேவை!

கொஞ்சம் சோகம்... நிறைய சேவை!

பொதுவாகக் கல்லூரி மாணவர்களின் ஃபேர்வெல் நிகழ்ச்சி கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் நடக்கும். இன்னும் கொஞ்சம் ஆடம்பரமாக நடத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் ஹோட்டல் அரங்குகளில் நடத்துவார்கள். ஆனால், ஓசூர் பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரியின் பி.டெக். இறுதி ஆண்டு மாணவர்கள் தங்களுடைய ஃபேர்வெல் நிகழ்ச்சியை மிகவும் ஆக்கபூர்வமாக ஓசூரில் இருக்கும் வித்யா நிகேதன் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நடத்தி நெகிழவைத்துள்ளார்கள்!

கொஞ்சம் சோகம்... நிறைய சேவை!
##~##

விழாவில் கலந்துகொண்ட மாணவர் ரித்வான், ''நாங்கள் இப்படி ஒரு வித்யாசமான, ஆக்கபூர்வமான ஃபேர்வெல் பார்ட்டி நடத்துவதற்கு காரணமே விகடன்தான். சில மாதங்களுக்கு முன்பு என் விகடனில் வித்யா நிகேதன் ஆசிரமத்தைப் பற்றிக் கட்டுரை வந்திருந்தது. அதில் இங்கு உள்ள குழந்தைகளைப் பற்றி  எழுதி இருந்தார்கள். அதைப் படித்து எங்கள் வகுப்பு மாணவர்கள் அனைவருமே கண் கலங்கிவிட்டோம். அப்போதே அந்தக் கட்டுரையைப் பிரதி எடுத்து கல்லூரியின் நோட்டீஸ் போர்டில் ஒட்டினோம். மேலும், அந்தக் குழந்தைகளுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்றும் முடிவு எடுத்தோம். நடுவில் குழந்தைகளுக்காக ஏதாவது கலை நிகழ்ச்சி நடத்தலாம் என்று நினைத்தோம். ஆனால், படிப்பு, தேர்வு உள்ளிட்ட பல காரணங்களால் அது முடியாமல் போனது.

கொஞ்சம் சோகம்... நிறைய சேவை!

தேர்வு முடிந்து ஃபேர்வெல் விழா பற்றிய பேச்சு வந்தபோது நாங்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன், ஆதரவற்ற குழந்தைகளின் இல்லத்தில்தான் விழா நடத்த வேண்டும் என்று முடிவு செய்தோம். மாணவர்கள் ஒவ்வொருவரும் 500 ரூபாய் போட்டு, ஆசிரமத்துக் குழந்தைகளுக்கு இரண்டு வேளை தரமான உணவு மற்றும் அவர் களின் படிப்புக்குத் தேவையான நோட்டு புத்தகங்கள் மற்றும் ஸ்டேஷனரி பொருட் களையும் வாங்கிக் கொடுத்தோம். ஒவ் வொரு குழந்தையின் முகத்திலும் அப்படி ஒரு சந்தோஷம். இதை இத்தனை வருடங் களாகச் செய்யாமல் விட்டுவிட்டோமே என்று வருத்தமாக இருந்தது'' என்றார்.

மாணவர் தேன் தமிழ்ராஜ், ''இந்த ஆசிரமத்துக் குழந்தைகளுக்காக பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, ஓவியப்போட்டிகளை நடத்தி அவர்களுக்குப் பரிசு கொடுத்தோம். குழந்தைகளுக்காக கிடார் கச்சேரியும் ஏற்பாடு செய்தோம்.  நாங்கள் வேலைக்குச் சேர்ந்த பிறகு  எங்க ளுடைய சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை மாதம்தோறும் இந்த ஆசிரமத் துக்குக் கொடுக்கப் போகிறோம். ஒவ்வொரு ஆண்டும் இரு குழந்தைகளைத் தத்து எடுத்து, அவர்களுக்கான கல்விச் செலவினையும் ஏற்றுக்கொள்ளத் திட்டமிட்டு உள்ளோம்'' என்றார் உறுதியுடன்.

ஆசிரமத்தின் நிர்வாகிகளில் ஒருவரான லலிதா, ''மாணவர்களுக்கு நன்றி சொல்ல எங்களிடம் வார்த்தைகள் இல்லை. இங்கு உள்ள அருணாசலம் என்ற சிறு வனின் பிறந்தநாள் இன்றுதான் என்று தெரிந்துகொண்ட மாணவர்கள், அவ னுக்கு பிறந்த நாள் கேக் வாங்கிவந்துக் கொண்டாடினார்கள். எங்கள் அனை வருக்குமே கண்கள் கலங்கிவிட்டது. இந்த மாதிரி மாணவர்களை, பிள்ளை களாகப் பெற்றதுக்கு நிச்சயமாக அவர்களின் பெற்றோர் பெருமைப்பட வேண்டும்'' என்றார் நெகிழ்ச்சியோடு!

கொஞ்சம் சோகம்... நிறைய சேவை!
கொஞ்சம் சோகம்... நிறைய சேவை!

கட்டுரை, படங்கள்: கு.சக்திவேல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு