Published:Updated:

அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்!

அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்!

##~##

''சேவை செய்றதுக்கு பெரிய மனசு வேணும். அப்படி ஒரு பெரிய மனசு உள்ளவங்கதான் அம்பத்தூர்ல மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக சேவை செய்ற டாக்டர் ஜோன் சாந்தகுமாரி'' அண்ணாநகரைச் சேர்ந்த, ஸ்டீபன் என்ற வாசகர் வாய்ஸ் ஸ்நாப்பில் இப்படிப் பதிவு செய்து இருந்தார். 

அம்பத்தூரில் உள்ள ஜோன் சாந்தகுமாரியைப் பற்றி விசாரித்தேன். அமெரிக்காவில் உள்ள புளோரிடா பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களைத் தேடிச் சென்று முற்றிலும் இலவசமாகச் சிகிச்சை அளித்துவருகிறார்.

''நம் நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் சுமார் ஒரு கோடி பேர் மன நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களைக் குணப்படுத்த நம் நாட்டில் மிகக் குறைந்த அளவிலேயே மனநல மருத்துவர்கள் இருக்கிறார்கள். காய்ச்சல், தலைவலி போன்று மன நோய் என்பதை உடனடியாகக் குணப்படுத்த முடியாது. அன்பும் அரவணைப்பும்தான் அவர்களுக்கு மிகவும் முக்கியம். என் சகோதரர் ஒருத்தர் மனநலம் பாதிக்கப்பட்டு 20 வருடங்களுக்குப் பிறகுதான் முழுமையாகக் குணமடைந்தார்.

அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்!

பாதிக்கப்பட்டவர்களை எங்களுடைய மன நல மையத்துக்கு அழைத்துவந்து  சிகிச்சை அளிக்கிறேன். இதற்காக 'நலிவுற்றோர் நல வாழ்வு மேம்பாட்டு மையம்’ என்ற பெயரில் ஓர் இல்லத்தைத் தொடங்கி இருக்கிறேன்.

இங்கே இருக்கும் அனைவரையும் நான் என் குழந்தையைப் போலவே எண்ணி அவர்களுக்குச் சிகிச்சையையும் அளித்துவருகிறேன். யாரும் அவ்வளவு சீக்கிரம் நான் சொல்வதைக் கேட்க மாட்டார்கள். இருந்தாலும் பொறுமையோடு சிகிச்சை அளிக்க வேண்டும். மன நோயாளிகள் ஓரளவுக்கு குணமடைந்தப் பிறகு அவர்களுக்குக் கைவினைப் பொருட்கள் செய்யும் பயிற்சியைக் கற்றுக் கொடுப்போம். இதனால், அவர்கள்தேவை யற்ற குழப்பங்களில் இருந்து வெளியே வந்துவிடுவார்கள்.  வருங்காலத்தில் இது அவர்களுக்கு வரு மானம் தரும் ஒரு சிறு தொழிலாக அமையும்.

அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்!
அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்!

தங்கள் பிள்ளைகளுக்கு என்று பெற்றோர்கள் இந்தக் காலத்தில் நேரமே ஒதுக்குவது இல்லை. குழந்தைக்கு அன்பு, உறவுமுறை என்று எதுவும் கிடைக்காமல் போக, மனதில் பிரச்னைகள்ஆரம் பமாகிறது'' என்கிறார் ஜோன் சாந்தகுமாரி.

அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்!

அவரிடம் சிகிச்சை பெற்று ஆரோக்கியமாக இருக்கும் அமலா செல்வியிடம் பேசினேன். ''நான் காலேஜில படிச்சுட்டு இருந்தப்ப எப்போ தும்  தனிமையில இருந்தேன். எனக்குள்ளேயே பேசிட்டு  இருந்தேன். என் அப்பா என்னை இங்கே கூட்டிட்டு வந்தார். ரொம்ப அன்பாகப் பார்த்துட்டு, பிரச்னைகளைப் பத்தி கவுன்சிலிங் கொடுத்து என்னை குணப்படுத்தினாங்க. ஆறே மாசத்துல நார்மல் ஆகிட்டேன். இப்போ என் அப்பா, அம்மா நான் எது சொன்னாலும் காது கொடுத்து கேட்கிறாங்க'' என்கிறார் சந்தோஷமாக!

- சா.வடிவரசு  

படங்கள்: க.கோ.ஆனந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு