Published:Updated:

கார்கள் எங்கள் குழந்தைகள்!

இது நம்ம ஊரு ஸ்பெஷல் -புதுச்சேரி

கார்கள் எங்கள் குழந்தைகள்!
##~##
சி
ட்ரன், எரால்ட், மோரிஸ் மேனர் இவை எல்லாம் புதுவையில் உலா வரும் கார்கள். இவை செல்லும் இடங்கள் எல்லாம் டிராஃபிக் ஜாம் ஆகும் அளவுக்கு இந்த கார்களுக்கு புதுவையில் விசிறிகள் அதிகம். குழந்தைகளைப் போல இந்த கார்களைத் தொட்டுப் பார்ப்பதும் போட்டோ எடுத்துக் கொள்வதும் என தினமும் இந்த கார்கள் பிஸியோ பிஸி. அப்படி என்ன புதிய மாடல் கார் இது, எங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்று ஓவராய் யோசிக்க வேண்டாம். இவை எல்லாம் 1952 , 1962-ம் ஆண்டு மாடல் வின்டேஜ் கார்கள்.

''எவ்வளவு புதிய கார்கள் வந்தாலும், இன்னும் இந்த கார்களைப் புதிதாகப் பாதுகாத்து வருகிறார்கள் சாலமன் குடும்பத்தினர்'' என்று வாய்ஸ் ஸ்நாப்பில் வந்து விழுந்தது தகவல்.

கார்கள் எங்கள் குழந்தைகள்!

சாலமனை சந்தித்துப் பேசியதில்... ''பிரெஞ்சுக்காரங்க புதுவையில் இருந்து கிளம்பினப்ப அரசாங்கம் உபயோகப்படுத்திவந்த கார்களை வித்தாங்க. அப்ப சிட்ரன் என்ற காரை எங்க அப்பா வாங்கினாரு. எங்க குடும்பத்துக்காக வாங்கிய முதல் கார் அதுதான். 1956-ம் ஆண்டு மாடலான இந்த கார் 11 ஹார்ஸ் பவர் கொண்ட பெட்ரோல் கார். எங்க அப்பா இறந்தபிறகு  அவர் ஞாபகமா இந்த காரை பாதுகாக்கலாம்னு எனக்கும் என் தம்பி ஹாரிக்கும் தோணுச்சு.

நான் பிரெஞ்சு ராணுவத்தில் சீப் மெக்கானிக்கா இருந்ததால பழைய கார்கள் மீது ஆர்வம் அதிகம். இப்ப இல்லைனாலும் இன்னும் ஐம்பது வருஷத்துக்கு அப்புறம் இந்த கார்களுக்கு நல்ல மரியாதை இருக்கும். அதுவும் இல்லாம பழசைப் பாதுகாக்கறோம்னு மனத்திருப்தியும் இருந்தது. நிறையப் பழைய கார்களைத்  தேடிக் கண்டுபிடிக்க ஆரம்பிச்சோம். அப்பதான் எங்களுக்கு எரால்ட் மாதிரியான கார்கள் பற்றியத் தகவல் கிடைக்க ஆரம்பிச்சது.

கார்கள் எங்கள் குழந்தைகள்!

பழைய கார்கள் நல்லா இல்லைனாலும்  வாங்கிட்டு வந்து நானும் என் தம்பியுமே சேர்ந்து ரிப்பேர் பண்றது, ஸ்பேர் பார்ட்ஸ் மாத்தறது, பெயின்ட் அடிக்கறதுனு எல்லா வேலையும் செய்வோம். வீட்டிலேயே ஒரு மெக்கானிக் ஷாப் வெச்சிருக்கோம்.

இப்ப எங்ககிட்ட ஐந்து கார்கள் இருக்கு, இந்த கார்கள் எல்லாம் எங்க குடும்பச் சொத்து. நாங்க குழந்தைகள் மாதிரி இந்த கார்களைப் பராமரிக்கிறோம்.

முன்பெல்லாம் இந்த காரிலேயே ஊட்டி, பெங்களூர்னு  குடும்பத்தோட டிரிப் போவோம். ஒவ்வொரு ஊர்லயும் நிறைய பேர் இன்ஜின் என்ன மாடல், டயர் என்ன மாடல்னு ஆர்வமா விசாரிப்பாங்க. இப்பலாம் லாங் டிரிப் போறதைக் குறைச்சிக்கிட்டோம். ஏன்னா எங்க காருக்கு சிறிய கீறல் விழுந்தாலும் எங்களால தாங்க முடியாது'' என்கிறார் சாலமன்.

- ஆ.நந்தகுமார்

கார்கள் எங்கள் குழந்தைகள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு