Published:Updated:

கம்ப்யூட்டர் விவசாயி !

இ.கார்த்திகேயன்,படங்கள்: ஏ.சிதம்பரம்

##~##

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கசவன்குன்று கிராமத்தில் உள்ளது அந்த முருங்கைத் தோட்டம். தோட்ட வேலை செய்துவிட்டு, தொட்டித் தண்ணீரில் கை கழுவிவிட்டுவந்து அமர்கிறார் ராமகிருஷ்ணன். தோட்டத்தில் ஒரு மரத்தடியில் சாக்கு விரிப்பில் இருக்கும்கம்ப் யூட்டர் ஒன்றை எஃகு வேறு, ஸ்க்ரூ வேறாகப் பிரிக்கிறார். பழுதான ஒரு பாகத்தைக் கழற்றிவிட்டு, அதற்குப் பதி லாகப் புதிய ஸ்பேர் பார்ட்ஸை மாட்டி அசெம்பிள் செய்து நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்.

''13 வருஷத்துக்கு முன்னாடி  ஒரு  கம்ப்யூட்டர் வாங்கினேன். ரெண்டு வருஷம் பிரச்னை இல்லாம வேலை செஞ்சுது. திடீர்னு ஒரு நாள் ரிப்பேர் ஆகிடுச்சு. எட்டயபுரத்தில உள்ள ஒரு கம்ப்யூட்டர் ரிப்பேர் கடையில கொண்டுபோய்க் கொடுத்தேன். அந்தக் கடைக்காரர் எப்படி  சரிபண் றாருனு பக்கத்துலயே இருந்து பார்த்துகிட்டே இருந்தேன்.  பார்த்த உடனேயே அவர் என்ன ரிப்பேர்னு கண்டுபிடிச்ச லாகவமும், பத்து நிமி ஷத்துல சரிசெஞ்சுக் கொடுத்த ஸ்பீ டும் ஆச்சர்யமா இருந்துச்சு.  மறுநாள் அவரைப் பார்த்து 'அண்ணாச்சி நானும் கம்ப்யூட்டரைப் பத்தி தெரிஞ் சுக்கணும். எப்படி ரிப்பேரை சரி பண்றதுனு சொல்லிக் கொடுங்க?’னு கேட்டேன். ரொம்பப் பரிதாபமா கேட்டதால, அவருக்கு என்னை ரொம்பப் பிடிச்சுப் போச்சு.

கம்ப்யூட்டர் விவசாயி !

 டெய்லி வந்தா சொல்லித் தர்றேன்’னு சொன் னார். அன்னையிலேர்ந்து தினமும் தோட்டத்துக்குப் போறேனோ இல் லையோ, அண்ணாச்சிக் கடைக்குப் போயிடுவேன். அவர் சொல்லிக் கொடுக்கிறப்பப் புரியற மாதிரி இருக்கும். ஆனா, வீட்டுக்கு வந்ததும் மறந்துடும். அதனால் ஒரு  பேப்பர்ல கழட்டுற பாகங்களுக்கு ஒண்ணு, ரெண்டு, மூணுனு நம்பர் போட்டு குறிச்சுவெச்சிக்குவேன்.  சரி செஞ்சு முடிஞ்சதும் திரும்பவும் கழட்டுன ஆர்டர்படி மாட்டிடுவேன். ஒவ்வொரு பாகத் தையும் படம் வரைஞ்சு, அதோட வேலை என்ன, என்னென்ன மாதிரி ரிப்பேர் ஆகும்னு எழுதிவெச்சிருக்கேன். 10 வருஷத்துல இப்போ எல்லாமே மனப்பாடம் ஆகிடுச்சு.

கம்ப்யூட்டரைக் கழட்டி மாட்டுறதில் கிடைச்ச தன்னம்பிக்கையால மெக்கானிக்கல் பத்தியும் படிக்க ஆரம்பிச்சேன். மக்காச்சோளம்  கதிர் மட்டுமே அடிக்கிற மெஷின்ல  வேற எதையும் கதிர் அடிக்க முடியாது. ஆனா, நான் சல்லடைகளை மட்டும் மாத்தி உளுந்து, நெல், மல்லியை அரைச்சிடுவேன். வழக்கமான முறையில பிரிச்சா, பயறு ரொம்ப உடையும். கழிவு அதிகமாகும். ஆனா, நான் உருவாக்கின சல்லடையைப் பயன்படுத்தினாப் பயறு உடையாது. ஆள் தேவையும் குறையும். மிச்சமாகிற பயறு வகைகள் மண்ணுல படாம சுத்தமா இருக்கும்.

கம்ப்யூட்டர் விவசாயி !

என்னைப் பத்தி கேள்விப்பட்டு திரு நெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கைனு நிறைய ஊர்கள்லேர்ந்து கல்லூரிகள்ல பேசக் கூப்பிடுறாங்க. ஆனா அங்கே போனா, எல்லாரும் இங்கிலீஷ்ல கேள்வி கேட்குறாங்க. என்னால சரியா பதில் சொல்ல முடியாது. படிக்காததை நினைச்சு அப்ப ரொம்ப வருத்தப்படுவேன். ரிப்பேர் ஆன கம்ப்யூட் டரை நான் சரிசெஞ்சுடுவேன். ஆனா, எப்படி சரி பண்ணேன்னு விளக்கிச் சொல்ல முடியாது. சீக்கிரமே இங்கிலீஷ் கத்துக்க்கிட்டு, கம்ப்யூட் டர் சம்பந்தமான புத்தங்களை படிக்கப் போறேன். ஆர்வமும், விடாமுயற்சியும்தான் என்னை இவ்வளவு தூரத்துக்குக் கூட்டிட்டு வந்திருக்கு. இன்னும் ஆர்வம் குறையலை. அடுத்த முறை நீங்க வர்றப்ப, நான் இன்னும் நிறைய விஷயங்களைத் தெரிஞ்சு வெச்சிருப் பேன்!'' நம்பிக்கையாகப் பேசுகிறார் ராம கிருஷ்ணன்.

கம்ப்யூட்டர் விவசாயி !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு