Published:Updated:

வலையோசை - பாடல் கேட்ட கதை

வலையோசை - பாடல் கேட்ட கதை

வலையோசை - பாடல் கேட்ட கதை

கன்றும் உண்ணாது...

##~##

பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் தமிழ்ச் செய்யுள் பகுதிகளை வெறுமனே மனப்பாடம் செய்யச்  சொல்லாமல், அந்தச் செய்யுளின்  அர்த்தத்தினை விளக்கிப் புரியவைப்பதில் கைதேர்ந்தவர் கமலம் டீச்சர். அப்படிப்பட்டவர் 'செய்யுள் பகுதியில் ஒரு சங்க இலக்கியப் பாடலை நான் விளக்கப் போவது இல்லை. அதை அப்படியே மனப்பாடம் செய்து எழுதிவிடுங்கள்’ என்றபோது ஆச்சர்யமாக இருந்தது. 'கன்றும் உண்ணாது கலத்தினும் படாது...’ என்று துவங்கும் செய்யுளே அது. முதல் வரி தவிர மற்ற எந்த வரியும் புரியாததால், ஒரு மதிய நேர வகுப்பில் நான் எழுந்து நின்று, 'இந்தப் பாட்டின் அர்த்தம் புரியவில்லை’ என்றேன். அனல் பார்வை வீசிய கமலம் டீச்சர், Hey boys என்று துவங்கி (கமலம் டீச்சர் கோபம் வந்தால் மட்டும் ஆங்கிலம் கலந்து திட்டுவார்) 'சிலபஸ் போடுபவர்களுக்குத்தான் அறிவு இல்லை, உங்களுக்கு என்ன?’ என்று திட்ட, 'சரி... இது ஏதோ பள்ளிக்குப் பொருந்தாத பாடல்’ என்று புரிந்தது. இது நடந்தது 1991-ல். இதன் பிறகு, வயது, வாழ்வின் பரிமாணங்கள் விஸ்தரித்தபோது இந்தப் பாட்டு கிட்டத்தட்டப் புரிந்துவிட்டது.

1998-ல் ஒரு முறை சென்னையில் இருந்து மதுரைக்குப் பேருந்தில் வந்துகொண்டு இருந்தபோது அதிகாலையில் வேடசந்தூர் அருகே மோட்டல் ஒன்றில் காபி குடிக்க வண்டியை நிறுத்தினார்கள். இங்கு வந்து யார் கேசட் வாங்குவார்கள் என்று யோசிக்க வைக்கும் ஒரு  கேசட் கடை அது. 'யாருமே இல்லாத கடையில் எதுக்குடா டீ ஆத்துற?’ காமெடி மாதிரி யாருமே வாங்காத கடையில் எதற்குப் பாட்டு போடுகிறார்கள்? என்ற யோசனையுடன் நின்றேன்.

வலையோசை - பாடல் கேட்ட கதை

அந்த ஸ்பீக்கரில் ரசனைக் குறைவான இழுவையுடன் 'கன்றும் உண்ணாது...’ என்று  துவங்கியது ஓரளவு நல்ல பாட லான 'தீண்டாய் மெய் தீண்டாய்’ப் பாடல். முதலில் கேட்கும்போதே இது வைரமுத்துவின் வேலை என்று தெரிந்துபோகும் இந்தப் பாடலில் 'ஏசுநாதர் காற்று வந்து வீசியதோ’, 'பூமி வாழப் புதிய காதல் கொண்டுவந்தோம்’ என்ற இரண்டு வரிகள் தேறும். இந்தப் பாடல் கேட்டதற்குப் பின்னர் வேடசந்தூர் மதுரை இடையில் ஆன தூரம் ஏழு வருடங்கள் ஆனதில் ஆச்சர்யம் இல்லை!

பாட்டு ஒண்ணு கேட்கட்டுமா!

நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த நேரம். மதுரை நகருக்குள் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்ட 'சைக்கிள் குழு’ எங்கள் வீட்டின் பின்புறம் பெருமாள் கோயில் தெருவில் முகாமிட்டு இருந்தது. நம்மூர் மக்களுக்குப் புரளி கிளப்புவதில் கிடைக்கும் திருப்தி பெரிது. அந்த சைக்கிள்காரர்கள் 'இமயமலையில் சைக்கிள்விட்டவர்கள்’ என்றும் 'ராஜஸ்தானில் இருந்து கண்ணைக் கட்டிக்கொண்டு சைக்கிளில் வந்து இருக் கிறார்கள்’ என்றும் இஷ்டத்துக்குக் கதைக் கட்ட, தினமும் மாலை நேரம் தெருவில் கூட்டம் கூடும். அந்தக் குழுவின் தலைவர்  மூன்று வாரங்கள் தொடர்ந்து சைக்கிள் மீதே இருப்பார். தினமும் மாலை நேரம் வித்தைகள் நடக்கும். பள்ளியில் இருந்து திரும்பியவுடன் மொட்டை மாடிக்குச் சென்று 'குழு’ என்ன செய்துகொண்டு இருக்கிறது என்று பார்ப்பது போக, அங்கு ஒலிக்கும் பாடல்கள் காதில் வந்து விழுந்தபடியே இருக்கும். சில நாட்களில் சைக்கிளில் சுற்றுபவர் உடல்நிலை மோசமாகி மயக்கம் போட்டதாகத் தகவல் பரவியது. ஆனால், சென்று பார்த்தால் அவர் பாட்டுக்கு சைக்கிளில் சுற்றிக்கொண்டு இருந்தார். க்ளைமாக்ஸ் தினம் நெருங்கிக்கொண்டு இருந்தது. தெரு முழுதும் வைக்கோல் பரப்பி அதில் தீ மூட்ட, பற்றி எரியும் நெருப்பில் டியூப் லைட்டுகள் சிதற அதன் நடுவில் அவர் சைக்கிளில் வர வேண்டும். இரண்டு நாட்கள் முன்ன தாகவே இந்த கிளைமாக்ஸ் மூடுக்கு மக்களைக் கொண்டுவர  தத்துவப் பாடல்களாக ஒலிக்கத் துவங்கி இருந்தது. அப்போது கேட்டதுதான் கண்ணதாசனும் எம்.எஸ்.வி-யும். அர்த்தம்  புரியாவிட்டாலும் ஒரு வித அழுத்தத்தை உண்டாக்கும் அந்தப் பாடல்களை இரவு பகலாக ஒலிக்கவிட்டு மனதில் பதியவிட்டுச் சென்றனர் அந்த சைக்கிள் குழுவினர்.

வலையோசை - பாடல் கேட்ட கதை

'மனிதன் நினைப்பதுண்டு’, 'ஆறு மனமே ஆறு’, 'சட்டி சுட்டதடா’, 'உள்ளம் என்பது’, 'நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு’, 'கால தேவனின் மயக்கம்’, 'எந்தன் பொன்வண்ணமே’, 'நிலவைப் பார்த்து’ போன்றவை அந்தப் பட்டியலில் முக்கியமானவை. அவர் சைக்கிளில் நெருப்பு வளையத்துக்குள் நுழை வதற்கு முன் போடப்பட்ட பாடல் 'சிவப்பு விளக்கு எரியுதம்மா’ அதன் பின் விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டு  தெரு 10 நிமிடம் இருட்டானதும் அவருக்கு ஏதேனும் ஆகிவிட்டதோ என்று அனைவரும் பதறியதும் மறக்க முடியாத நாள்.

இவரின் அடுத்த தலைமுறை இன்று ஜாவா கோட் (யிகிக்ஷிகி சிஷீபீமீ) எழுதிக்கொண்டு இருக்குமோ?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு