Published:Updated:

300 ஆண்டுகளாக ஒலிக்கும் ஓசை !

கே.கே.மகேஷ் படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

##~##

இன்று நேற்று அல்ல... கி.பி. 1700-ம் ஆண்டு தொடங்கி தினமும் இரண்டுமுறை மதுரையில் ஓர் இசைக் கருவி  ஒலித்துக்கொண்டே இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அதன் பெயர் நகரா. போர்க் களத்தில் ஒலிக்கும் முரசு போல மெகா சைஸில் இருக்கிறது நகரா. அதை இரண்டு பெரிய குச்சிகளை வைத்து அடிக்க, அடிக்க 'தொம்... தொம்’ என்று அந்த அறையே அதிர்கிறது. இந்த நகராவை வைப்பதற்காகவே மதுரை மீனாட்சியம்மன் கோயில் கிழக் குக் கோபுரம் எதிரில் பிரத்யேகமாக இருக்கிறது நகரா மண்டபம். தினமும் காலை 4.30 முதல் 5 மணிக்குள்ளும் மாலை 4 முதல் 4.30 மணிக்குள்ளும் மீனாட்சியம்மன் கோயில் ஏரியாவுக்குப் போனால் நகரா இசையை அதிர அதிரக் கேட்கலாம்.

நாம் சென்றபோது கோயில் ஊழியர்களில் ஒருவரான செல்வராஜ் நகராவை இசைத்துக் கொண்டு இருக்க, பாஸ்கரன் திமிறி நாதஸ்வரத்தையும், சீனிவாசன் தாளத்தையும் (ஜால்ரா) இசைத்தார்கள். இதில் பாஸ்கரன் மட்டுமே நிரந்தர ஊழியர். மற்ற இருவரும் ஒரு நாளைக்கு 65 ரூபாய் தினக் கூலி அடிப்படையில் சுமார் 10 ஆண்டுகளாக வேலைபார்க்கிறார்கள்.

300 ஆண்டுகளாக ஒலிக்கும் ஓசை !

அந்தக் காலத்தில் மீனாட்சியம்மன் கோயிலும் அதனைச் சுற்றி அமைந்து இருந்த வீதி களும் மட்டும்தான் மதுரை. அதனால், கோயில் நடை திறக்கப்படுவதை அறிவிக்கும் விதத்தில் அப்போது மதுரையை ஆண்ட ராணி மங்கம் மாள் ஏற்பாடு செய்ததுதான் இந்த நகரா. இந்த மண்டபத்தின் மீது இருந்து நகரா இசைத்தால் மதுரை மட்டுமல்ல; தெற்கே திருப்பரங் குன்றம், கிழக்கே திருபுவனம் வரைக்கும் கேட்குமாம். அந்தச் சத்தத்தைக் கேட்டதும் திருப்புவனத்தில் நகரா இசைப்பார்கள். அப்படியே மானாமதுரை, ராமநாதபுரம் என்று ராமேஸ்வரம் வரை தொடர்ச்சியாக வெவ்வேறு இடங்களில் நகரா அடிக்கப்பட் டதும் ராமேஸ்வரத்தில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்குப் பூஜைகள் நடைபெறும்.

20 வருஷங்களாக நான் நகரா, திமிறி நாதஸ்வரம் வாசிக்கிறேன். புஜானா நாயுடு, நானையா நாயுடு, பால்ராஜ் அடுத்ததாக நான் என்று நான்கு தலைமுறைகளாக எங் கள் குடும்பத்தினர்தான் நகரா வாசிக்கி றோம். முன்பெல்லாம் நகரா வாசிக்க வரும் போது, அதைப் பார்ப்பதற்கும் கேட் பதற் கும் மண்டபத்தில் ஒரு கூட்டமே காத்துக் கொண்டு இருக்கும். நகரா சத்தத்தைக் கேட்ட பிறகுதான் கோயிலில் நடை திறப்பார்கள்.

300 ஆண்டுகளாக ஒலிக்கும் ஓசை !

ஆனால், இப்போது நாங்கள் நகரா வாசிப்பது கோயிலைச் சுற்றி இருப்பவர்களுக்கேத் தெரிவது இல்லை. காரணம், கோயிலைச் சுற்றி பல உயரமான கட்டடங் கள் வந்துவிட்டன. இரைச்சலும் அதிகமாகிவிட்டது. இப்படி நம்முடைய இசை ஓர் அறைக்குள் ளேயே முடங்கிவிட்டதே என்று வருத்தமாக இருக்கும். என்றாவது ஒருநாள் சற்றுத் தாமதமாக நகரா வாசித்தால், உடனே  பக்கத்தில் இருப்பவர்கள் யாராவது அறநிலையத் துறை அதிகாரிகளிடம் புகார் செய்துவிடுவார்கள். அப்போது வருத்தத்தை விட, 'ஆகா, நம்முடைய நகரா இசையைக் கேட்க யாரோ ஒருவர் இருக்கிறார்’ என்று சந்தோஷப் படுவேன். என்ன ஒரு வருத்தம், எனக்குப் பிறகு நகரா வாசிக்க என் குடும்பத்தில் யாரும் இல்லை. என் ஒரே மகனும் எம்.பி.ஏ. படித்துவிட்டு செட்டில் ஆகிவிட்டான்' என்றார் பாஸ்கரன் வருத்தம் தோய்ந்த குரலில்.

300 ஆண்டுகளாக ஒலிக்கும் ஓசை !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு