Published:Updated:

கம்ப்யூட்டர் மன்னன்!

கம்ப்யூட்டர் மன்னன்!

##~##

'பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவன் ஒருவனால் கம்ப்யூட்டரில் அதிகபட்சமாக என்ன செய்ய முடியும்?’ என்று கேட்பவர்களுக்குச் சவால் விடுகிறார் அவினாஷ் மகாராஜ். கம்ப்யூட்டர் தொடர் பாக இதுவரை 53 ஆன்லைன் தேர்வுகளை எழுதி, அதில் முதல் வகுப்பில் தேர்ச்சியும் பெற்றிருக்கிறார். எம்.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த ஒருவரால் எந்த அளவுக்கு புரொகிராம்களை கம்ப்யூட்டரில் கொண்டுவர முடியுமோ, அவை அத்தனையையும் அவினாஷ§ம் செய்கிறார். 

''எங்க அப்பா ரத்னவேலும் அம்மா கலையரசியும் டாக்டரா இருக் காங்க. எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்தே எங்க வீட்டுல கம்ப் யூட்டர் இருக்கு. சின்ன வயசிலேயே கம்ப்யூட்டர்ல உட்கார்ந்து ஏதாவது பண்ணிட்டு இருப்பேன். அப்படி ஆரம்பிச்சதுதான் இந்த ஆர்வம். கம்ப்யூட்டர் தொடர்பான புத்தகங்களை அப்பாவை வாங் கிக் கொடுக்கச் சொல்லிப் படிக்க ஆரம்பிச்சேன். காலேஜ் லெவல்ல நடக்கும் தேர்வுகளை ஆன்லைன்ல எழுதலாம்னு தெரிஞ்சுது. ஒவ்வொரு புத்தகமாகப் படிச்சு, ஆன்லைன்ல தேர்வு எழுதினேன். ஆன்லைன் தேர்வுகளை எழுதுவது ரொம்பக் கஷ்டமான விஷயம். நிறையப் படிக்கணும். எந்த மாதிரியான கேள்விகள் வரும்னு யூகிக்க முடியாதபடி  கேட்பாங்க. ஸ்கூல் போயிட்டுவந்த நேரம் போக, மற்ற நேரம் எல்லாம் கம்ப்யூட்டர்தான் என் உலகம். எங்க வீட்ல இருக்கும் கம்ப்யூட்டரை இதுவரைக்கும் நான் சர்வீஸ் பண்றதுக்கு யாருகிட்டேயும் கொடுத்ததே இல்லை. எந்தப் பிரச்னையாக இருந்தாலும் நானே சரி பண்ணிடுவேன். இன்னைக்கு இந்தியாவிலேயே 14 வயசுல 53 ஆன்லைன் கம்ப்யூட்டர் தேர்வுகள் எழுதின ஒரே மாணவன் நான்தான்.

கம்ப்யூட்டர் மன்னன்!
கம்ப்யூட்டர் மன்னன்!

எனக்குச்  சொந்தமா ரெண்டு வெப்சைட்டு களை உருவாக்கி இருக்கேன். அதைப் பார்த்துட்டு இன்ஜினீயரிங் படிக்கிற மாணவர்கள் பல பேர்  என்னைத் தொடர்புகொண்டு சந்தேகங்கள் கேட்பாங்க. ஆன்லைனிலேயே ஏன் கிளாஸ் எடுக்கக்கூடாதுன்னு தோணுச்சு. வயசு வித்தியா சம் பார்க்காம, பல பேர் என்கிட்டே படிக்கி றாங்க. அது மூலமாக எனக்கு மாசம் 20 ஆயிரம் ரூபாய் வருமானம் வருது. இந்த வருஷம் பத்தாம் வகுப்புப் பரீட்சையை நல்லபடியாக எழுதணும். அதனால இப்போ படிப்புல கவனம் செலுத்து றேன்.

கம்ப்யூட்டர் மன்னன்!

அடுத்த முயற்சியாக கம்ப்யூட்டர்ல புதுப் புது புரொகிராம்களை உருவாக்குற முயற்சியில் இறங்கி இருக்கேன். கிராமப்புறத்து மாணவர்கள் இன்னும் கம்ப்யூட்டரைப் பார்த்தாலே மிரண்டு போறாங்க. அவங்கள்லாம் கம்ப்யூட்டரை ரொம்ப ஈஸியா பயன்படுத்த புது சாஃப்ட்வேரைக் கண்டுபிடிக்கணும். கூடிய சீக்கிரமே அதைச் செய்வேன். கம்ப்யூட்டரோட பயன்பாடு எல்லா ஊருக்கும் எல்லா மாணவர்களுக்கும் போய்ச் சேரணும். அதுதான் என்னோட கனவு'' தீர்க்க மாகப் பேசுகிறார் அவினாஷ்.

நல்ல கனவு!

- கே.ஆர்.டி.

படங்கள்: எல்.ராஜேந்திரன்

அடுத்த கட்டுரைக்கு