Published:Updated:

பெருநகரில் பேரன்பு இதயங்கள்!

பெருநகரில் பேரன்பு இதயங்கள்!

##~##

குழியிலோ, ஆழ் துளைக் கிணற்றிலோ குழந்தைகள் விழுந்துவிட்டால்  எவ்வளவு பதை பதைத்துப் போய்விடுகிறோம். ஆனால், ஒரு நாய் பாழடைந்த கிணற்றில் விழுந்துவிட் டால்? இப்படி மூன்று மாதங்களாக யாருமே கண்டுகொள்ளாமல் கிணறு ஒன்றில் தவித்த நாய்களை மீட்டு இருக்கிறார்கள் மூன்று பேர். 

அருண் பிரசன்னா, டான் வில்லியம், அரவிந்தன் இந்த மூன்று பேரும் ப்ளூகிராஸ் அமைப்பின் உறுப்பி னர்கள். நாய்களை மீட்ட கதை யைச் சொல்கிறார் அருண் பிரசன்னா. ''போன வாரம் வளசரவாக்கம் போய் இருந்தேன். அங்கே ஒரு அம்மா பாழடைஞ் சக் கிணத்துல பிஸ்கட் போட்டுட்டு இருந்தாங்க. 'என்னமோ வித்தியாசமா பண்றாங்களே?’னு எட்டிப் பார்த் தேன். தண்ணீர் இல்லாத அந்தக் கிணத்துக்குள், ஒரு பெண் நாயும் அது போட்ட மூணு குட்டிகளும் இருந்தன. அந்த நாய் கர்ப்பமா இருந்தப்ப, தவறிக் கிணத்துக்குள்ள விழுந்து இருக்கு. அங்க இருந்தவங்க யாரும் வெளியில எடுக்க முயற்சி செய்யலை. கிணத்துக்குப் பக்கத்தில் இருந்த அந்தம்மா மட்டும் தினமும் சாப்பாடு போட்டு இருக்காங்க.  

பெருநகரில் பேரன்பு இதயங்கள்!

அந்த நாய் கிணத்துக்கு உள்ளேயே குட்டி போட்டுடுச்சு. மூணு மாசமா வெளியில வரமுடி யாம, கிணறே கதினு கெடந்துருக்கு. நல்லவேளையா இந்த மூணு மாசத்துல மழை எதுவும் பெய்யலை. இதை நான், என் நண்பர்களிடம் சொன்னதும் நாயை வெளியே எடுக்க முடிவு செஞ்சோம். கயிற் றைக் கட்டிக்கொண்டு உள்ளே இறங்கினா, அம்மா நாய் பயங்கரமாக் குரைச்சுக்கிட்டுக் கடிக்கவந்தது. பிஸ்கட் போட்டு, அதோட பயத்தைப் போக்கி, அப்புறம் வலையை வீசிப் பிடிச்சோம். வெளியே வந்ததும் கால்நடை மருத்துவமனையில் கருத் தடை அறுவை சிகிச்சைச் செய்தோம். சந்தோ ஷமா குட்டிகளோட, வாலை ஆட்டிகிட்டே தெருவெல்லாம் ஓடிச்சு. பாக்கவே அவ்வளவு பரவசமா இருந்துச்சு.  

பெருநகரில் பேரன்பு இதயங்கள்!

சமீபத்தில் பள்ளிக்கரனையில் பெரிய மழை பேஞ்சப்ப, மூணு நாய்கள் தடுமாறிக் கிணத்துல விழுந்திடுச்சு. நாங்கதான் அவற்றை மீட்டோம். நமக்கு பசி, வலி, வேதனை இருந்தா வாய்விட் டுச் சொல்லிடுவோம். அந்த வாயில்லா ஜீவன் கள் என்ன பண்ணும்? மனுஷங்களுக்கு மட்டுமே உலகம் இல்லை. எறும்புல இருந்து யானை வரைக்கும் எல்லா உயிரினங்களுக்கும் சொந்த மானதுதான் இந்த உலகம். அதனால, நம்மால் முடிந்த வரைக்கும், உயிரினங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய ணும். உதாரணத்துக்கு, அரிசி மாவில் கோலம் போடலாம். எறும்புகள் மாவினைச் சாப்பிடவரும். மொட்டை மாடியிலோ, வீட்டு வாசலிலோ சின்ன வாளியில் தண்ணீர்வைக்கலாம். பறவைகள் வந்து அருந்தும். முன்பு எல்லாம் கிராமங்களில் ஒவ்வொரு தெருவிலும் கழனித் தண்ணித் தொட்டி வெச்சி இருப்பாங்க. பழைய சாதம், மீந்துப்போன காய்கறிக் கழிவுகள், கஞ்சித் தண்ணிஎல்லாத்தையும் அந்தத் தொட்டியில் ஊத்துவாங்க. கால்நடைகள் அதைச் சாப்பிடும். ஆனால், இன்னைக்கு எல்லாத்தையும் பாதாளச் சாக்கடையில் கொட்டிடுறோம். யாருக்கும் எந்தப் பிரயோஜனமும் இல்லை.  உயிரினங்களுக்கு உதவி செய்யுங்க. அவை நன்றியைக் கண்ணுல காட்டும். அதைவிட சந்தோஷம் எதுவுமே இல்லை'' என்றார் நெகிழ்வுடன்!

 - கே.ராஜாதிருவேங்கடம்

படம்: ஜெ.வேங்கடராஜ்

அடுத்த கட்டுரைக்கு