Published:Updated:

''அப்போ பிளாக் போர்டு... இப்போ மைக்செட்!’’

இது நம்ம ஊரு ஸ்பெஷல் -கடலூர்

''அப்போ பிளாக் போர்டு... இப்போ மைக்செட்!’’

ண்ணெய் போட்டு வாரி சீவிய முடி, ட்ரிம் செய்யப்பட்ட மீசை, சுத்தமாக சவரம் செய்யப்பட்டுப் பவுடர் பூசிய முகம் என்று அவரைப் பார்த்தால் ஆட்டோவில் அறிவிப்பு செய்பவர் என்று நம்பவே முடியாது. ஆனால் 'மைக்செட் அண்ணாதுரை’ என்றால் கடலூருக்கே தெரிகிறது.

''எனக்குச் சொந்த ஊர் பண்ருட்டி. அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியரா இருந்து ஓய்வு பெற்றவன். ஆசிரியரா இருக்கும்போதே என்னோட குரல் வளத்தைப் பலரும் பாராட்டி இருக்காங்க. அப்பவே முடிவு பண்ணினேன், 'ரிட்டையர்டு ஆனா கண்டிப்பா வீட்டில டி.வி-க்கு முன்னால முடங்கிப்போகக்கூடாது’னு. இப்போ என்னோட வயசு 64 ஆகுது. ஆனா, அது எனக்குத்தானே தவிர, என்னோட குரலுக்கு இல்லை.

''அப்போ பிளாக் போர்டு... இப்போ மைக்செட்!’’
##~##
கோயில் கும்பாபிஷேகம், மருத்துவ முகாம், அரசியல் கட்சிக் கூட்டம், இரங்கல் செய்தி, மரண அறிவிப்பு எல்லாமே பண்ணியாச்சு. பொதுவா விளம்பரத்துல ரொம்ப தூயத் தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்த மாட்டேன். அது கிராம மக்களுக்குப் புரியாது.

எந்த ஒரு தொழிலுக்கும் கண்டிப்பா ஒரு கெட்-அப் இருக்கணும். எனக்கு ஒரே வருத்தம் என்னன்னா, ஊருல யாரவது இறந்துட்டா நான் அவங்களுக்கு விளம்பரம் பண்ணுவேன். நாளைக்கு நான் இறந்துட்டா எனக்கு யார் விளம்பரம் பண்ணுவாங்கனு தெரியலையே?'' என்று சிரிக்கிறார் அண்ணாதுரை!

- நா.இள அறவாழி
படம்: எஸ்.தேவராஜன்

''அப்போ பிளாக் போர்டு... இப்போ மைக்செட்!’’
அடுத்த கட்டுரைக்கு