Published:Updated:

வலையோசை - வண்ணத்துப்பூச்சியார்!

வலையோசை - வண்ணத்துப்பூச்சியார்!

வலையோசை - வண்ணத்துப்பூச்சியார்!

நெருப்பு வாழ்க்கை!

வலையோசை - வண்ணத்துப்பூச்சியார்!

மனித நேயத்தையும் மனித உறவுகளின் நெகிழ்ச்சியான கவித்துவ வாழ்வியலைக் கொண்டவை இரானியத் திரைப் படங்கள். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை இரானிய சினிமாவின் பக்கம் ஈர்த்த மஜித் மஜிதி ஓர் அற்புதமான படைப்பாளி. அவருடைய அனைத்துத் திரைப் படங்களிலும் அன்பு மட்டுமே அடிப்படை. அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் 'சாங்ஸ் ஆஃப் ஸ்பாரோ’

(The song of sparrows).

தெஹரைனில் உள்ள நெருப்புக் கோழிப் பண்ணையில் பணிபுரிகிறான் கரீம். பண்ணையில் இருந்து ஒரு கோழி காணாமல் போனதால் கரீம் வேலையில் இருந்து வெளியேற்றப்படுகிறான். அவனுடைய காது கேளாத மகளின் காது கேட்கும் இயந்திரம் வீட்டின் அருகே இருக்கும் ஒரு பாழும் கிணற்றுக்குள் விழுந்து செயல் இழக்கிறது. அதை ரிப்பேர் செய்வதற்காகவும் தனக்கு ஒரு புது வேலையைத்  தேடிக்கொள்ளவும் நகரத்துக்குச் செல்கிறான். அவன் வாழ்க்கையில் நடந்த பல்வேறு மாற்றங்களை உணர்வுபூர்வமாக படைத்து இருக்கிறார் இயக்குநர். அளவற்ற சோதனைகளின் முடிவாகக் காணாமல் போன நெருப்புக் கோழி கிடைத்துவிடுகிறது. மீண்டும் வேலையில் சேருமாறு செய்தி வர ஆனந்தம் அடைவது கரீம் மட்டுமல்ல; திரைப்படத்தை ரசித்துப் பார்க்கும் நாமும்தான்!

வேர் இஸ் ரெக்ஸ்?

வலையோசை - வண்ணத்துப்பூச்சியார்!

ரெக்ஸ் என்ற நாய்தான் 'ஃபயர் ஹவுஸ் டாக்’ திரைப் படத்தின் கதாநாயகன். ஒரு சிறுவனின் வாழ்க்கையில் ஒரு நாய் ஏற்படுத்திய மாற்றமும் அவர்களின் அழகான அன்பும் ஆழமான நட்பும்தான் படத்தின் கதை. வீர சாகசங்களும் விளையாட்டுகளும் செய்யும் ரெக்ஸ், ஹாலிவுட் திரைப் படங்களிலும் விளம்பரப் படங்களிலும் நடிக்கும் ஒரு நாய். அதைப் பொக்கிஷம்போல வைத்திருக்கும் அதன் முதலாளி ரெக்ஸை மிகவும் அன்போடு குடும்பத்தில் ஒருவராகப் பராமரித்துவருகிறார். எதிர்பாராதவிதமாக ஒரு திரைப்பட ஷூட்டிங் சமயத்தில் விமானத்தில் இருந்து கீழே  விழுந்துவிடுகிறது ரெக்ஸ். அனைவரும் அது இறந்துவிட்டதாகவே நினைக்கிறார்கள். கண்ணீருடன் அதற்கு இறுதிச் சடங்குகளும் செய்துவிடுகிறார்கள். ஆனால், விமானத்தில் இருந்து விழுந்த ரெக்ஸ் சாகவில்லை. தப்பிப் பிழைத்துத் தெரு நாய்களுடன் சுற்றிவருகிறது. இதை ஷேன் என்ற 12 வயது சிறுவன் பார்க்கிறான். அவனுடைய தந்தை ஒரு தீ விபத்து அதிகாரி. ஷேனும் அவனுடைய தந்தையும் சேர்ந்து ரெக்ஸின் உண்மையான உரிமையாளரைக் கண்டுபிடிக்க முயல்கின்றனர். முடியாமல் போகவே அதற்குப் புதிதாகப் பெயரிட்டு வளர்க்க ஆரம்பிக்கிறார்கள். இந்த நிலையில் ஷேனின் குடும்பச் சொந்தக்காரர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் இறக்கிறார். ரெக்ஸின் துணையோடு குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறான் ஷேன். ஒரு கட்டத்தில் உண்மையான உரிமையாளர் ரெக்ஸினைத் தேடி வந்துவிடுகிறார். ஆனாலும், ஷேனிடம் இருப்பதே சரி என்று முடிவு எடுத்து ரெக்ஸினை விட்டுச்செல்கிறார்!

பரிசோதனை மனிதர்கள்!

வலையோசை - வண்ணத்துப்பூச்சியார்!

மிகவும் பரபரப்பாக விற்பனையான நாவலைத் தழுவி எடுக்கப்பட்டதுதான் 'தி கான்ஸ்டன்ட் கார்டுனர்’ (The constant gardener )  திரைப் படம். நாவலை எழுதியவர் ஜான் லெகர். நைரோபியில் இருக்கும் பிரிட்டன் தூதரக அதிகாரி ஜஸ்டின், அவருடைய அன்பு மனைவி டீஸா. மருத்துவ நண்பர் ஒருவருடன் டீஸா ஆப்பிரிக் காவுக்குச் செல்லும்போது இருவரும் படுகொலை செய்யப்படுகிறார்கள். மிகவும் மென்மையான குணங்கள் கொண்ட தன் அன்பு மனைவியின் படுகொலைக்கான காரணத்தினையும் குற்றவாளிகளையும் கண்டுபிடிப்பதே திரைக்கதை.

உலகப் புகழ்பெற்ற சில மருத்துவ நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட தங்களுடைய மருந்துகளைப் பரிசோதனைச் செய்வதற்காக ஏழை ஆப்பிரிக்க நாடுகளில் இலவசமாக விநியோ கிப்பதையும் அதன் சூழ்ச்சிகளுக்கு அந்த நாட்டு அரசியல் தலை வர்கள் உடந்தையாக இருப்பதையும் டீஸா தெரிந்துகொண்டதால், அவளைக் கொலை செய்துவிட்டார்கள் என்பதைக் கண்டுபிடிக் கிறார் ஜஸ்டின். கதை, திரைக்கதை, இசை, எடிட்டிங் என்று பல ஆஸ்கர் விருதுகளை உலக அரங்கில் வென்ற திரைப்படம் இது. தமிழிலும் 'ஈ’ என்று இந்தக் கதையின் பின்னணியில் ஒரு திரைப் படம் வந்தது நினைவு இருக்கலாம்!

வலையோசை - வண்ணத்துப்பூச்சியார்!

காமெடிக்கு உத்தரவாதம்!

'கர்ப்பிணி பெண்களை வேலையை விட்டு தூக்கக் கூடாது’ அமெரிக்க அரசின் சட்டம் இது. இந்தச் சட்டத்தையே திரைக் கதையாக்கிவிட்டார்கள். புத்தக பதிப்பக கம்பெனியில் முதலாளியின் காரியதரிசியாக வேலை பார்க்கிறார் தியா. இவர் மீது இருக்கும் கோபத்தில் தன்னுடைய செல்ல நாய் குட்டியைக் குளிப்பாட்டும் வேலையைக் கொடுக்கிறார் முதலாளி. இதில் கடுப்பாகி தனது அலுவலகத் தோழியிடம் முதலாளியைக் கண்டபடி திட்டித் தீர்க்கிறாள் தியா. இதைக் கேட்ட முதலாளி சீட்டைக் கிழிக்க அதிர்ந்துபோகிறார் தியா. தன்னுடைய வேலையை பாதுகாக்கத் தான் கர்ப்பமாக இருப்பதாக சமயோசிதமாகப் பொய் சொல்கிறார் தியா. கர்ப்பத்துக்குக் காரணம் தனது சீன காதலன் என்று ஒருவனையும் கூறிவிடுகிறாள். தான் கூறிய பொய்யைக் காப்பாற்ற எப்படி எல்லாம் நாடகமாடுகிறாள், தனது பொய்யான கர்ப்பத்தை எப்படிக் காப்பாற்றுகிறாள் என்பதை சற்றும் ஆபாசம் இல்லாமல் நகைச்சுவையுடன் சொல்லும் படம் 'லேபர் பெய்ன்ஸ்’ !

வலையோசை - வண்ணத்துப்பூச்சியார்!
அடுத்த கட்டுரைக்கு