Published:Updated:

நாங்க சாமியார் மட்டும் இல்லை!

இது நம்ம ஊரு ஸ்பெஷல் - திருவண்ணாமலை

நாங்க சாமியார் மட்டும் இல்லை!
##~##
தி
ருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பைக்கில் ரவுண்ட் வந்துகொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட காட்சி ஆச்சர்யமாக இருந்தது. மரத்தடியில் அமர்ந்து சில சாமியார்கள் செஸ் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். பைக்கை ஓரம் கட்டிவிட்டுப் போனேன்.

''என்ன சாமி செய்றது, எங்களுக்கும் பொழுதுபோகணும்ல?'' என்றபடி செஸ் விளையாட்டில் மறுபடி மும்முரமாக இரண்டு சாமியார்களிடம் பேசினேன்.

நாங்க சாமியார் மட்டும் இல்லை!

முதலில் நம்மிடம் பேசிய தால்புரி சாது, ''என்னோட நிஜப் பேரு விஸ்வநாத்.  இமயமலையில் இருக்கும் எனது குரு மஸ்துபுரிதான் இந்தப் பெயரை எனக்கு வெச்சார். பூர்வீகம் பெங்களூர். என் மனைவி சோபா மும்பையில ஸ்கூல் டீச்சர். ஒரு பையன், ஒரு பொண்ணு. ரெண்டுபேருக்கும் கல்யாணம் ஆகிடிச்சு. நான் மும்பையில டெய்லர் வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். திடீர்னு ஆன்மிகத்து மேல ஈடுபாடு வந்துச்சு. என்னோட கடமைகளும் முடிச்சாச்சுல்ல. 30 வருஷமாச்சு துறவு வாழ்க்கைக்கு வந்து.

இதுவரை காஷ்மீர்ல இருந்து கன்னியாகுமரி வரை அஞ்சு முறை யாத்திரை போய்ட்டு வந்திருக்கேன். சாமியார் ஆயிட்டாலும் என்னோட தொழிலை நான் மறக்கலை.  லேடீஸ் ஹேண்ட் பேக், பெல்ட், மணி பர்ஸ், சன்னியாசிகள் உபயோகப்படுத்தும் பைகளைத் தயார் செஞ்சு கிரிவலம்வர்ற பக்தர்களிடமும் ஃபாரீனர்ஸ்கிட்டேயும் விற்கிறேன்.  

நாங்க சாமியார் மட்டும் இல்லை!

எப்பயாவது தோணுச்சுன்னா என் குடும்பத்தைப் பார்க்கப் போவேன். ஆனா, அவங்க பணம் கொடுத்தா வாங்க மாட்டேன். என்னோட வருமானத்துலதான் என்னோட அன்றாட வாழ்க்கையைப் பார்த்துக்கிறேன்'' என்றார்.

அம்மையப்பன் சாதுவோ, ''என் நிஜப்பெயர் மால்முருகன். பூர்வீகம் சீவலப்பேரிக்குப் பக்கத்துல இருக்கிற சவலாபேரி. சம்சாரம் 1996-ல் இறந்துட்டாங்க. ரெண்டு பசங்க. எங்க குடும்பம் பெரிய விவசாயக் குடும்பம். சென்னையில் பாலாஜி மாடர்ன் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற பெயரில் கட்டடங்கள் கட்டிக்கொடுத்து நல்ல நிலையிலதான் இருந்தேன். சம்சாரம் தவறினபிறகு 1997-ல் காக்கிநாடா போனேன். அங்கே சில பிரச்னைகளால எல்லாத்தையும் இழந்தேன். இப்போ திருவண்ணாமலைக்கு வந்து  13 வருஷம் ஆச்சு.

எனக்கு சித்த மருத்துவம் தெரியும். எய்ட்ஸ் (பார்றா!), கேன்சர், ஆஸ்துமா, சர்க்கரை நோய், ஆண்மைக் குறைவு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிச்சுட்டு வர்றேன். இதுவரைக்கும் ரெண்டு எய்ட்ஸ் நோயாளிகள் (மறுபடியும் பார்றா!), ஒரு கேன்சர் நோயாளி, நாலு ஆஸ்துமா நோயாளிகளை முழுசாக் குணப்படுத்தியிருக்கேன்.

நாங்க சாமியார் மட்டும் இல்லை!

நோயாளிகளுக்குத் தேவையான மருந்தை இந்த மலையில் கிடைக்கும் மூலிகைகளைக்கொண்டும் கடையில் கிடைக்கும் சூரணங்களைக் கொண்டும் தயாரிக்கிறேன். எனக்கு முறையா யோகா தெரியும். அதை சிகிச்சைக்கு வர்றவங்களுக்கும் கத்துத் தர்றேன்.

தினமும் காலையில அரைமணி நேரம், மாலையில அரை மணி நேரம் பிரணா யாமம் பயிற்சி செஞ்சுவந்தாலே நல்ல தேகபலத்துடன் இருக்க முடியும்.  ஒலிம்பிக்கில் கலந்துக்கிற விளையாட்டு வீரர்கள் முறையான பிராணயாமம் பயிற்சி எடுத்தா, கண்டிப்பா தங்கப் பதக்கம் தட்டலாம். நம்ம அர சாங்கம் வேண்டி விரும்பிக் கேட்டுக்கிட்டா நானே விளையாட்டு வீரர்களுக்குப் பிராணயாமம் பயிற்சி சொல்லித் தர்றேன். என்ன நான் சொல்றது?'' என்கிறார்.

ஹூம், ஒவ்வொரு சாமியாருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்!

-கோ.செந்தில்குமார்
படங்கள்: பா.கந்தகுமார்

அடுத்த கட்டுரைக்கு