Published:Updated:

கண்களுக்கு அப்பால்...

இது நம்ம ஊரு ஸ்பெஷல் - வேலூர்

கண்களுக்கு அப்பால்...
##~##
''1950
-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பார்வையற்றோருக்கான எங்கள் பள்ளி இந்த நாள் வரை மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறது. அதற்குக் காரணம் எங்களுடைய மாணவர்கள்தான்'' அழகான முன்னுரை கொடுத்து ஆரம்பிக்கிறார் தலைமை ஆசிரியர் நவநீதம்.

''முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரியின் உதவியாளராக இருந்தவர் பீட்டர். விபத்தில் அடிபட்டுப் பார்வை இழந்து வேலூருக்கு வந்த சமயத்தில் அவரால் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிதான் '' கைடு ஆஃப் சர்வீஸ் பார்வையற்றோர் பள்ளி''. கடந்த 62 வருடங்களில் பேராசிரியர்கள், கவிஞர்கள், இசைப் பயிற்சியாளர்கள் என்று பலரையும் உருவாக்கி உள்ளது இந்தப்பள்ளி. மாவட்ட ஆட்சியரின் நேரடிக் கண்காணிப்பில் பள்ளி செயல்படுகின்றது. நான் 1983- ஆம் ஆண்டுமுதல் இங்கு பணிபுரிகிறேன். இங்கு படிக்கும் மாணவர்களின் வசதிக்காக விடுதி இருக்கிறது. மூன்று மாணவர்கள் மட்டும் தினசரி வீட்டுக்குச் சென்றுவருகிறார்கள்.

குறைபாடு இல்லாத நபர்களைக் காட்டிலும் இவர்களுடைய அறிவு வளர்ச்சி மிகவும் அதிகம். நாம் ஒரு பாடத்தைச் சொன்னால் அதை அந்தச் சமயத்திலேயே புரிந்துகொண்டு, சந்தேகத்தை அப்போதே கேட்டுத் தீர்வு காணுகிறார்கள். எப்போதும் முன்னெச்சரிக்கையாக இருப்பது இந்த மாணவர்களின் பலம். இங்கு படித்த மாணவர் களில் பலர் வேலூரில் உள்ள கல்லூரிகளில் பணி புரிந்துவருவது எங்களுக்குப் பெருமை யானது. இங்கு படித்த மாணவர் குமரேசன் இப்போது இங்கேயே இசை ஆசிரியராகப் பணிபுரிகிறார்'' என்றார்.

கண்களுக்கு அப்பால்...

15- க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இசை கற்றுக் கொடுத்துக்கொண்டு இருந்தார் கும ரேசன். '' என்னுடைய மாணவர்கள் மிகவும் நன்றாக பாடுவார்கள். நீங்கள் கேளுங்களேன்'' என்று காட்பாடியைச் சேர்ந்த 4-ம் வகுப்பு படிக்கும் மாணவி சுவாதியை அழைத்தார்.   உலக சமாதானம் தொடர்பான பாடல் ஒன்றை சுவாதி பாட, தாளத்தை அமைதியாக இசைத்தார். ஐந்து நிமிடத்துக்கு மேல் பாடி முடித்தார் சுவாதி. ''எனக்கு ஒரு நல்ல பாடகியா வரணும் என்று ஆசை சார்'' நம் கையை உறுதியாகப் பிடித்தபடி சொன்னார் சுவாதி. இறுக்கமாகப் பிடித்த அந்தத் தன்னம்பிக்கையில் தெரிந்தது அவர் வருங்காலத்தில் நல்ல பாடகி ஆவார் என்று.

''சார் நான் நல்லா மிமிக்ரி பண்ணுவேன் சார்'' என்று முகேஷ§ம், சக்தியும் முன்வந்தனர். குட்டி நாய், காகம், புறா, பூனை, யானை, பசு, கன்றுக்குட்டி, என்று வரிசையாக மிமிக்ரி செய்து ஃபைனல் டச்சாக டைனோசர் போல மிமிக்ரி செய்து முடிக்கும் போது அறையில் பலத்த கரகோஷம்.

கண்களுக்கு அப்பால்...

''நீங்க இங்க வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு கண்ணா, அப்புறம் ஆண்டவனே நம்ம கூட இருக்கான், பாஸ் மொட்ட பாஸ்'' என அச்சு அசலாக ரஜினிகாந்த் குரல் கூட்டத்தில் இருந்து கேட்க நமக்கு பலத்த ஆச்சர்யம். ''சார், நான் ரஜினி, கமல் மாதிரி மிகிக்ரி பண்ணுவேன்'' என்றார் ஷோஷ்வா. இறுதியில் ''வாழ்க்கையைப் பற்றி நீங்க புரிஞ்சுக்கணும். வானம், பூமி, இரவு, பகல், இன்பம், துன்பம், வாழ்க்கையோட அடி நாதத்துக்கு போனா'' என்று சந்தானம் குரலில் பேச பிஞ்சுக் குழந்தைகள் முகத்தில் அவ்வளவு சிரிப்பு.

இதுதவிர மற்ற மாணவர்கள் டான்ஸில் பின்னி எடுத்தனர். அங்கிருந்த 40 மாணவர்களில் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை வெளிப் பட்டுக்கொண்டே இருந்தது.

''படிப்பில் இருந்து மற்ற அனைத்துத் துறை களிலும் தங்களுடைய திறமைகள் பதிவு செய்யப் பட வேண்டும் என்பதில் ஒவ்வொருவரும் உறுதி யாக இருக்கிறார்கள். ஆனால், இங்கு படிக்கும் மாணவர்களில் எல்லோரும் வறுமையின் பிடி யில் இருந்து வந்தவர்கள். கூலி வேலைக்குச் செல்பவர்கள்தான் இவர்கள் பெற்றோர்கள். பல நல்ல உள்ளங்கள் எங்களுக்கு உதவிகள் செய்து வருவது மிகவும் பயனுள்ளதாக  இருக்கிறது. வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்பது மட்டும்தான் இவர்களுடைய குறிக்கோள்'' உறுதியாகப் பேசினார் தலைமை ஆசிரியர்!

-கே.ஏ.சசிகுமார்
படங்கள்: ச.வெங்கடேசன்

அடுத்த கட்டுரைக்கு