Published:Updated:

நீங்கள் எந்தக் கிழமையில் பிறந்தீர்கள் என்று தெரியுமா?

இது நம்ம ஊரு ஸ்பெஷல் - குடியாத்தம்

நீங்கள் எந்தக் கிழமையில் பிறந்தீர்கள் என்று தெரியுமா?
நீங்கள் எந்தக் கிழமையில் பிறந்தீர்கள் என்று தெரியுமா?

''உங்கள் பிறந்த தேதி என்ன?'' என்று கேட்டால் சரியாகச் சொல்லிவிடுவீர்கள். சரி, ''நீங்கள் எந்தக் கிழமையில் பிறந்தீர்கள்?'' என்று கேட்டால்...? கொஞ்சம் இல்லை, நிறையவே யோசிப்பீர்கள்தானே? உங் களுக்கே உங்களுக்காக 2403ஆம் ஆண்டு வரை ஸ்பெஷல் காலண்டரைத் தயாரித் திருக்கிறார் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்த ஜெ.ஜனார்த் தனன்.

''சின்ன வயசில இருந்தே எனக்குக் கணக்குப் பாடம்னா ரொம்ப இஷ்டம். உலகம் என்னதான் பரபரப்பா, வேகமா ஓடினாலும் ஒவ்வொருத்தருக்கும் அவங்க அவங்க பிறந்தநாள் மீதான ஈர்ப்புக் குறையலை. அதுக்காகத்தான் இந்த காலண்டர். ஆங்கில மாதங்களை அடிப்படையாகக் கொண்ட காலண்டரைத் தனியாகவும், தமிழ் மாதங்களை அடிப்படையா வெச்சு திருவள்ளுவர் ஆண்டு காலண்டரைத் தனியாகவும் உருவாக்கினேன்.

நீங்கள் எந்தக் கிழமையில் பிறந்தீர்கள் என்று தெரியுமா?
##~##
இந்தக் காலண்டரை உருவாக்கினப்போ என்னை ஊக்குவிச்சவங்களைவிட, டிஸ்கரேஜ் பண்ணினவங்கதான் அதிகம். 'செல் போன்லேயே காலண்டர் இருக்கு. இது எதுக்கு வெட்டி வேலை?’னு கேட்டாங்க. இருந்தாலும் இது என்னோட உழைப்பு. அதுமட்டும் இல்லாம, கணித ஆற்றல் அதிகரிச்சதுனா எந்த ஒரு விஷயத் தையும் ஈஸியா ஞாபகத்தில வெச் சுக்க முடியும். என்னால 2403-ஆம் ஆண்டு வரைக்கும் எந்தத் தேதி சொன்னாலும் அதுக்கான சரியான கிழமையைச் சொல்ல முடியும். உங்க பிறந்த நாளைச் சொல்லுங்க'' என்றார்.

சொன்னதும் ஐந்து விநாடிகள் யோசித்தவர், ''செவ்வாய்க்கிழமை'' என்றார்.

அட, ஆச்சர்யம்தான்!

  - கே.ஏ.சசிகுமார்
படங்கள்: ச.வெங்கடேசன்

அடுத்த கட்டுரைக்கு