Published:Updated:

வலையோசை - மானிடன்

வலையோசை - மானிடன்

வலையோசை - மானிடன்

மண்ணோடு விளையாடு!

வலையோசை - மானிடன்

குழந்தைகளின் உலகம் மிகவும் அழகானது. மிகவும் கொண்டாட்டமானது. இதை உணராத மனநிலையில் நாம் இருக்கிறோம். குழந்தைகளைக் குழந்தைகளாக வளர நாம் அனுமதிப்பதே இல்லை. நான்கு வயதுக்குள், தனக்கு வேண்டியதைத் தானே செய்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் .

அறிவியல் ஆராய்ச்சி என்ன சொல்கிறது தெரியுமா? 'குழந்தையின் 14 வயதுவரை நம் கைகள் அவர்களைத் தொட்டுக்கொண்டே இருக்க வேண்டும்’ என்கிறது. அப்போதுதான் அந்தக் குழந்தை தனக்காக இவர் இருக்கிறார் என்று உணரும்.இல்லாவிட்டால்  தனக்காக யாரும் இல்லை என்று நினைத்து அதற்கேற்றவாறு நடந்து கொள்ளும். அப்புறம் 'எம்புள்ளை என் மேல பாசமாவே இல்லை’ என்று புலம்புவதால் ஒன்றும் நடக்காது.

'தொடுதல்’ ஓர் அற்புத நிகழ்வு. தொடுதல், உங்களில் நிறைய மாற்றத்தை ஏற்ப டுத்தும். குழந்தைகள் நம்மிடம் இருந்து அதிகத் தொடுதலையும், அதிக நெருக்கத் தையும் எதிர்பார்க்கிறார்கள். 'இதைச் செய்யாதே’, 'அதைச் செய்யாதே’ என்று ஒவ் வொரு நாளும் நம்மிடம் திட்டு வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள். பேசாமல் உட்கார்ந்து டி.வி. பார்க்கும் குழந்தை 'நல்லபிள்ளை’ என்று பெயர் வாங்குகிறது. என்ன கொடுமை இது?

'மண்ணுல விளையாடாதே’ என்று குழந்தைகளைத் தடுத்து மண்ணோடு உரு வாகும் நெருக்கத்தைப் பறிக்கிறோம். இன்று நகரங்களில் மண்ணைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. எங்கெங்கு காணினும் காங்கிரீட். 'குழந்தைகள் மண்ணோடு விளையாடும்போது அவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது’ என்று புதிய ஆய்வு ஒன்று அறிவிக்கிறது. இனிமேலாவது குழந்தைகளை மண்ணோடு விளையாட அனுமதிப்பார்களா?

மாத்திரையே சாப்பாடு!

வலையோசை - மானிடன்

உலகத்தின் மிகப் பெரிய வியாபாரச் சந்தையாக இந்தியா மாறிவிட்டது. இந்தியாவில் மட்டும் 1,38,73,854 சில்லரை வர்த்தக அங்காடிகள் உள்ளன. இரண்டாம் இடத்தில் உள்ள சீனாவில் சில்லரை அங்காடிகளின்

எண்ணிக்கை 48,17,367. வித்தியாசம் இரண்டு மடங்குக்கு மேல். இவ்வ ளவுக்கும் இந்தியா ஒரு விவசாய நாடு. 80 சதவிகித மக்கள் விவசாயத்தையும் விவசாயம் சார்ந்த தொழில்களையும் நம்பி வாழ்கின்றனர். ஆனால், விவசா யம் சார்ந்த பெரிய திட்டங்களை இதுவரை செயல்படுத்தவே இல்லை. விவசாயம் தீண்டத் தகாத தொழில் போலவே ஆகிவிட்டது. விளை நிலங்கள்அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக விற்கப்படுகின்றன. விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பது இல்லை. உரங்கள் மண் வளத்தைப் பாழ்படுத்திவிட்டன. தொழிற் சாலைக் கழிவுகள் நீர் ஆதாரங்கள் அனைத்தையும் பாதிக்கின்றன. இன்னும் சில நாட்களில் உணவு கிடைக்காமல் அலையப் போகிறோம். அப்போதும் எதுவும் பேசாமல் மாத்திரை வடிவில் கிடைக்கப்போகும் உணவினை உண்டு மருத்துவமனைகளில் வாழப்போகிறோம்!

தமிழில் ராக் அண்ட் ரோல்!

வலையோசை - மானிடன்

1940- ம் ஆண்டுவாக்கில் அமெரிக்காவில் தோன்றிய இசை வடிவம்தான் ராக் அண்ட் ரோல். ஆப்பிரிக்க இசையும் அமெரிக்க இசையும் கலந்துதான் 'ராக் அண்ட் ரோல்’ உருவானதாகச் சொல்லப்படுகிறது. இந்த இசை வடிவத்தில் முதலில் பியானோ அல்லது  சாக்ஸபோன் முதன்மை இசைக் கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. பிறகு, கிடார் பயன்பட்டது. 1960-ம் ஆண்டுக்குப் பிறகுதான் இந்த இசை வடிவம் பெரிய அளவில் புகழ் பெற்றதாம்.

1958-ம் ஆண்டு வெளிவந்த 'பதிபக்தி’ என்ற தமிழ்த் திரைப்படத்தில் 'ராக் ராக் ராக்... ராக் அண்ட் ரோல்’ என்கிற பாடல்  இடம் பெற்றுள்ளது. சந்திரபாபு இந்தப் பாடலுக்கு சிறப்பாக நடனம் ஆடியிருக்கிறார். என்னை ஆச்சர்யப்படுத்திய விஷயம் இந்தப் பாடலை எழுதி இருப்பவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்பதுதான்!

உயிர் வாழும் போராட்டம்!

வலையோசை - மானிடன்

சமீபத்தில் இங்கிலாந்தில் 11 வயதில் கடத்தப்பட்டு ஒருவனிடம் 16 ஆண்டுகளாக செக்ஸ் அடிமையாக இருந்து மீட்கப்பட்ட பெண்ணிடம், 'எப்படி இவ்வளவு கொடுமைகளையும் சகித்துக்கொண்டீர்கள்?’ என்று கேட்டதற்கு,  'எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டும் என்ற நினைப்புதான் காரணம். அதை நினைத்தே நான் இருக்கும் கொடுமையான சூழ்நிலையை மறந்துவிடுவேன்’ என்று கூறி இருக்கிறார். இத்தனைக்கும் சரியான உணவு கிடையாது. 14 வயதிலேயே தனது பிரசவத்தைத் தானே பார்த்துக் கொண்ட கொடுமை வேறு. தன் குழந்தை தனக்கு மிகவும் ஆறுதலாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். எத்தனையோ போராட்டங்கள் இருந்தாலும் உயிர் வாழ்வதற்கான போராட்டம் மற்ற அத்தனை போராட்டங்களையும் வென்றுவிடுகிறது!

வலையோசை - மானிடன்
அடுத்த கட்டுரைக்கு