Published:Updated:

வெறுப்பு டு விருது!

ஒரு கிராமத்தின் சக்சஸ் ஸ்டோரி!

##~##

பெயருக்குத் தகுந்ததுபோல் துவரங்காடு கிராமமே மரம், செடி, கொடிகள், மூலிகைத் தாவரங்கள் என அழகான காட்டைப் போலத்தான் இருக்கிறது. நிதி மேலாண்மை, முழு சுகாதாரம், சாலை வசதி போன்றவற்றைச் சிறப்பாகச் செயல்படுத்தி இந்தக் கிராமத்தை அழகுடன் சேர்த்து முன் உதாரணக் கிராமமாக மாற்றி இருக்கிறார் பஞ்சாயத்துத் தலைவர் ராமாத்தாள் முத்தையாசாமி. இதற்காக மத்திய அரசின் சசக்திகரன் புரஸ்கர் விருதினைப் பெற்றுள்ளார். ''நான் பிறந்தது அச்சன்புதூர். வாக்கப்பட்டதுதான் துவரங்காடு. இங்கே நான் வந்த புதுசுல அடிக்கடி சண்டை சச்சரவு நடந்துகிட்டே இருக்கும். பங்காளிச்சண்டைனு பிரச்னை வந்து,  பக்கத்து ஊர்ல இருக்கிற கோர்ட் டுக்கு அருவாளை முதுகுக்குப் பின்னாடி மறைச்சு வெச்சுக்கிட்டுப் போவாங்க. போலீஸ் ஸ்டேஷன்ல இந்த ஊரைக் 'கரும்புள்ளி கிராமம்’னு முத்திரை குத்திட்டாங்க.  

வெறுப்பு டு விருது!

 பங்காளிச் சண்டை போட்டவங்களைக்    கூப்பிட்டு வெச்சு நானும், என் வீட்டுக்காரரும் பேசினோம். முதல்ல யாரும் மதிக்கலை. ஊர்ப் பெரியவங்க திட்டினதால கேட்க ஆரம்பிச்சாங்க. எங்களோட முயற்சிக்குப் பலனாகப் பிரச்னைகள் அடங்கி, கிராமம் அமைதியாக ஆரம்பிச்சுது. அதோட 'கரும்புள்ளி கிராமம்’கிற பட்டப்பெயரும் மறைஞ்சுபோச்சு. சந்தோஷப்பட்ட மக்கள், 2006-ல் நடந்த பஞ்சாயத்து தேர்தல்ல தலைவர் பதவிக்கு அன்னபோஸ்ட்டா என்னைத்  தேர்ந்தெடுத்தாங்க. என் கணவரும் எனக்குப் பக்கபலமா இருந்தாரு. முதல்கட்டமா வேம்பு, சவுக்கு, தேக்குனு 3,000 மரங்களை ஊரைச் சுத்தி நட்டோம். முழு சுகாதாரத் திட்டத்தின் மூலம்   100  வீடுகளுக்கு அரசாங்கம் தந்த மானியத்தை வெச்சு கழிவறை கட்டித் தந்தோம்.

கொஞ்ச நாள் கழிச்சு ஊர்ல இருக்கிற அத்தனை வீடுங்களுக்கும் திட்டத்தை விரிவுபடுத்தினோம். கூடவே பொதுக் கழிப்பறையும் கட்டி முடிச்சோம். இனிமே யாரும் திறந்த வெளியில மலம் கழிக்கக்கூடாதுனு தீர்மானமே போட்டோம். மக்களும் எங்களுக்கு ஆதரவா இருந்தாங்க. இதுமட்டும் இல்லாம, பள்ளிக்கூடம் போயிட்டு ராத்திரி திரும்பி வர்ற குழந்தைகளுக்கும் பெண் களுக்கும் பாதுகாப்புக் கொடுக்கிற வேலைக்காகப்  பாதுகாவலர்களை நியமிச்சோம். நாங்க மருந்தோ, மளிகைச் சாமானோ எதை வாங்குறதா இருந்தாலும் தென்காசிக்குதான் போகணும். சரியான சாலை வசதி கிடையாது. ஊர் மக்கள்கிட்டப் பேசி வயலுக்கு நடுவே கொஞ்சம் நிலத்தை இல வசமா வாங்கி ஒன்பது லட்ச ரூபாய் செலவுல ரோடு போட்டோம்.

வெறுப்பு டு விருது!

கடந்த அஞ்சு வருஷத்துல மருத்துவ முகாம், சட்ட விழிப்பு உணர்வு முகாம், ரத்ததான விழிப்பு உணர்வு முகாம், என்.எஸ்.எஸ்-னு 83 முகாம்கள் நடத்தி இருக்கோம். இந்தச் செயல்கள் எல்லாத்

வெறுப்பு டு விருது!

துக்கும் குற்றாலம் பராசக்தி கல்லூரி நிர்வாகமும் மாணவ மாணவிகள் கொடுத்த ஒத்துழைப்பும்தான் காரணம். ஏன்னா, எங்க கிராமத்தை அவங்க தத்து எடுத்திருக்காங்க. 'உலக சமுதாய சேவா சங்க’மும் எங்க ஊர் மக்களுக்கு உடற்பயிற்சி, மனவளக் கலைப் பயிற்சி போன்றவற்றை இலவசமா அளிக்கிறாங்க.  

2011-ல் தேர்தல் வந்தப்ப, மக்கள் மனப்பூர்வமா என்னையவே திரும்பவும் தேர்ந்தெடுத்தாங்க. நிதி மேலாண்மை, முழு சுகாதாரம், கணக்குப் பராமரிப்பு போன்ற செயல்களை நிறைய கிராமங்கள் விருது வாங்குற வரைக்கும் ஒழுங்கா செய்வாங்க. அப்புறம் கண்டுக்காம விட்ருவாங்க. ஆனா, நாங்க தொடர்ந்து சிறப்பா இயங்குறதால, 'சசக்திகரன் புரஸ்கர்’ விருதும், ஒன்பது லட்சம் ரூபாய் ரொக்கமும் கொடுத்திருக்காங்க. இந்த விருதுக்கு இந்தியாவில் இருந்து 15 கிராமங்களைத் தேர்வு செஞ்சாங்க. தமிழ் நாட்டுல இருந்து தேர்ந் தெடுத்தது எங்க கிராமத்தை மட்டும்தான். விருதும் எங்களுக்குத்தான்'' சொல்லும்போதே ராமாத்தாள் முகத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. கை தட்டி ஆமோதிக்கிறார்கள் வார்டு உறுப்பினர்கள்!

- ஆ.கோமதிநாயகம்
படங்கள்: எல்.ராஜேந்திரன்

அடுத்த கட்டுரைக்கு